குதிரை லாடத்தை நிலை வாசல் படியில் முறைப்படி இப்படி வைத்தால், வீட்டிற்குள் எந்த கெட்ட சத்தியம் நுழையாது. உங்கள் வீடு எப்போதுமே பாதுகாப்பு வட்டத்திற்குள் இருக்கும்.
ஒரு வீட்டில் கஷ்டங்கள் வருவதற்கு காரணம் கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல்கள் தான். இந்த எதிர்மறை ஆற்றல்களுக்கு நாம் நிறைய பெயரை வைத்திருக்கின்றோம். கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு, மருந்து வைப்பது இப்படி எதிர்மறை ஆற்றலுக்கு பல உருவங்களை கொடுக்கின்றோம். கண்ணுக்குத் தெரியாத இந்த கெட்ட சக்திகளிடம் இருந்து, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள ஆன்மீக ரீதியாக, தாந்திரீக ரீதியாக பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒரு சுலபமான பரிகாரம் தான் நிலை வாசலில் குதிரை லாடத்தை வைப்பது என்பது.
ஆனால் நிறைய பேருக்கு இந்த குதிரை லாடம் எப்படி முறையாக பயன்படுத்துவது என்பது தெரிவதில்லை. குதிரை லாடத்தினை எந்த முறைப்படி, நம்முடைய வீட்டில் வைத்துக் கொண்டால் எதிர்மறை ஆற்றலின் தாக்கத்திலிருந்து நம் வீட்டை பாதுகாக்கலாம் என்பதைப் பற்றிய சில விஷயங்களைத் தான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
குதிரைகளுடைய கால்களில், பாதங்களில் வைக்கக்கூடிய ஒரு இரும்பு பொருள்தான் இந்த குதிரை லாடம். குதிரைகள் ஓடும் போது அதனுடைய கால்கள் தேயாமல் இருப்பதற்காக இந்த லாடத்தை குதிரைகளுடைய கால்களில் அடித்து வைத்திருப்பார்கள். இது நம்மில் நிறைய பேருக்கு தெரிந்ததுதான்.
அந்த குதிரை பல இடங்களுக்கு சென்று ஓடி, அந்த லாடம் நன்றாகத் தேய்ந்து போய் இருக்கும். அந்த தேய்ந்து போன குதிரை லாடதிற்கு தான் சக்தி அதிகம். பழைய லாடத்தை நம் வீட்டில் வைக்கும் போது, அது நமக்கு பாதுகாப்பு வளையமாக அமையும். அந்த பழைய குதிரை லாடத்திற்கு இயற்கையாகவே எதிர்மறை சக்திகளை விரட்ட கூடிய தன்மை உண்டு என்றும் சொல்லப்படுகின்றது.
இரும்பு வைத்துக் கொண்டால் கெட்ட சக்தி நம்மை அண்டாது என்று சொல்லுவார்கள் அல்லவா. பெண்கள் வீட்டில் தீட்டான சமயத்தில் கூட இரும்பை பக்கத்தில் வைப்பார்கள். இதைப்போல் அசைவம் சமைத்து வெளியிடங்களுக்கு எடுத்து செல்லும்போது, பாதுகாப்பாக இருக்க வேண்டும், பேய் பிசாசு பிடித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக கூட ஒரு சிறிய ஆணியை அந்த அசைவ சாப்பாடு உடன் வைத்து அனுப்புவார்கள். சாதாரண இரும்பை விட பல மடங்கு சக்தி கொண்டது தான், இந்த இரும்பில் செய்யப்பட்ட, குதிரை காலில் இருக்கக்கூடிய லாடம்.
பெரும்பாலும் இந்த குதிரை லாடம் நிறைய பேருக்கு கிடைக்கலாம். ஆனால் அந்த குதிரைலாடம் தோஷம் இல்லாததாக இருக்கவேண்டும். நோய்வாய்ப்பட்டு இறந்த குதிரைகள், ஏதேனும் விபத்தின் மூலம் எதிர்பாராமல் இறந்த குதிரைகளில் இருந்து எடுக்கக்கூடிய குதிரை லாடம் தோஷம் நிறைந்ததாக இருக்கும். தோஷம் நிறைந்த லாடத்தினை நாம் பயன்படுத்தும்போது, அதிலிருந்து நமக்கு பலன் முழுமையாக கிடைக்காது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
உங்களுக்கு எந்த முறையில் குதிரை லாடம் கிடைத்தாலும் சரி, அந்த குதிரை லாடத்லில் இருக்கும் தோஷத்தை முதலில் நீக்கிவிட வேண்டும். உங்களுக்கு கிடைத்த லாடத்தினை முதலில் பசு கோமியத்தில் நன்றாக அபிஷேகம் செய்து, ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு சுத்தமான பசும்பாலில் அந்த குதிரைலாடத்தினை அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்பு மஞ்சள் தண்ணீரில் கழுவி, அதன் பின்பு அந்த லாடத்தினை நம்முடைய நிலை வாசப்படியில் ‘U’ வடிவத்தில், குதிரைலாடம் மேலே பார்த்தவாறு மாற்றி வைத்தோமே ஆனால் நம் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் ஊடுருவுவதை தவிர்க்க முடியும்.
இதுவே குதிரையில் லாடத்தினை சரியாக பயன்படுத்தும் முறை. இப்படி செய்தால் மட்டுமே அதனுடைய பலனை முழுமையான நம்மால் அடையமுடியும். நம்முடைய வீட்டினை கெட்ட சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்கு இது ஒரு சக்தி வாய்ந்த, அதேசமயம் சுலபமான வழியும் கூட. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். வீட்டில் இருக்கும் பல கஷ்டங்களுக்கு படிப்படியாக தீர்வு கிடைக்கும்.
படத்தில் உள்ளதுபோல் U வடிவில் பொருத்தவும்.
No comments:
Post a Comment