Tuesday, April 18, 2023

எங்கள் ஊரில் முப்பதே நிமிடங்களில் அரசியல் சட்ட மேதைகள் ஆன எல்லோரும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் வேலை செய்கிறார்கள்.

 ரொம்ப படிச்ச அமெரிக்க டாக்டர் ஒருத்தரு இந்தியாவுக்கு வந்தாரு. பைசா செலவில்லாம ஹார்ட் அட்டாக்கை குணப்படுத்தறதுல கில்லாடி. அந்த வித்தைய எப்படியாச்சும் அவர் கிட்டே இருந்து படிச்சிடணும்னு துடிச்சுக்கிட்டிருந்த இந்திய டாக்டர்கள் கிட்டே சொன்னாரு...

"இந்த உலகத்துல என் கால் படாத இடம் கிடையாது. ஏழு அதிசயத்தையும் பார்த்துட்டேன். உங்க இந்தியாவுல எனக்கே அதிர்ச்சி தர்ற எதையாவது காட்டினீங்கன்னா நீங்க ஆசைப்படுற வித்தைய ஓசிக்கு சொல்லித் தருவேன்"
அவ்வளவு தான். அவருக்கு கடல் மேலே கட்டப்பட்ட பாலம்ன்னு பாம்பன் பாலத்தை காட்டினாங்க. "எங்க நாட்டுல ரெண்டு தீவுக்கு நடுவுலேயே பாலம் இருக்கு. இதெல்லாம் ஜூ ஜூபி" ன்னுட்டாரு. தாஜ் மஹாலுக்கு கூட்டிட்டுப் போனாங்க. "எங்க வெள்ளை மாளிகைல உள்ள ஒரு ரூம் விலை பெறுமாய்யா?" ன்னு கேட்டாரு.
எதை எதையோ காட்டியும் "எனக்கு அதிர்ச்சியே வரலை" ன்னு சொல்லி அமெரிக்கா கிளம்ப ஏர்போர்ட்டுக்கு போகும்போது வழில பாடாவதியா இருந்த சின்ன ரயில்வே ஸ்டேஷனைப் பார்த்ததும் உள்ளே போகணும்னு சொன்னாரு. அவருக்கு அதிர்ச்சி தர்ற மாதிரி எதையும் காட்ட முடியலையேன்ற சோகத்துல மூஞ்சிய தொங்கப் போட்டு உள்ளே கூட்டிட்டுப் போனாங்க இந்திய டாக்டருங்க.
ஸ்டேஷனை சுத்திப் பார்த்துகிட்டிருந்த அமெரிக்க டாக்டர் ஒரு தள்ளு வண்டி புக் ஸ்டாலைப் பார்த்ததும் திடீர்ன்னு "ஐயையோ! எங்கப்பா சொத்துல பாதியை வித்து எனக்கு வாங்கி கொடுத்தது இங்க இவ்வளவு சீப்பா கிடைக்குதா? இந்த அதிர்ச்சியை என்னால தாங்க முடியலியே...!" ன்னு கத்தி நெஞ்சை பிடிச்சுக் கிட்டே கீழே விழுந்து மாரடைப்புல மண்டைய போட்டுட்டாரு.
இரும்பு மனுசன் மாதிரி இருந்த ஆளுக்கே அதிர்ச்சி தந்த விசயம் என்னான்னு தள்ளு வண்டி புக் ஸ்டாலைப் பார்த்தாங்க இந்திய டாக்டருங்க. அங்க அந்த புத்தகம் தொங்கி கிட்டிருந்துச்சு. புத்தகத்தோட தலைப்ப சத்தமா வாசிச்சாங்க. புத்தகத்தோட தலைப்பு,
"முப்பது நாட்களில் நீங்கள் டாக்டர் ஆவது எப்படி? விலை ரூ.20/-"
😁😁😁😁😁

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...