Tuesday, April 18, 2023

அமாவாசை தினத்தில் என்னென்ன செய்யலாம்? நல்ல காரியங்களை அமாவாசை நாட்களில் துவங்கலாமா?

🔹 பொதுவாக அமாவாசை என்பது பித்ருக்களுக்கான தினமாகும். தந்தைக்கு உரிய கோள் ஆகக் கருதப்படும் சூரியனும், தாயாரைக் குறிக்கும் கோள் ஆன சந்திரனும் ஒரே ராசியில் ஒரே நட்சத்திரப் பாகையில் இணையும் நாளே அமாவாசை. அதனால்தான் அன்றைய தினம் நம் வீட்டில் முன்னோர்கள் நினைவாக இலையைபோட்டு படையல் வைக்கிறோம். எள்ளும், தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்கிறார்கள்.
🔹 அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும், ஜீவன்களும், நம்முடைய முன்னோர்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், கடலோரங்களிலும் காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மைகள் ஆகும்.
🔹 அமாவாசையில் நம் குடும்பத்தின் முன்னோர்களை நினைத்து வணங்கி பூஜை செய்ய வேண்டும். மறைந்த பெரியோர்களுக்கு தர்பணம் செய்யும்போது அந்த பெரியோர்களின் பெயர்களை சொல்லி அவர்களின் ஆத்மாக்களை சாந்தி செய்ய வேண்டும் என்பதால்தான், 'பெயர் சொல்ல ஒரு பிள்ளை வேண்டும்" என்றார்கள் நம் முன்னோர்கள்.
🔹 எது நம்மை தடுத்தாலும் அந்த தடைகளை எல்லாம் தாண்டி பித்ருக்களுக்கு (முன்னோர்களுக்கு) அமாவாசை பூஜை செய்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் நின்று வழிபாடுகள் செய்தால் கொடிய வினைகள் எதுவும் விலகிவிடும்.
🔹 அமாவாசை அன்று இறந்தவர்களுக்கு பிடித்த உணவை படைத்து பூஜை செய்து, படைத்த உணவை சிறிதளவு எடுத்து காக்கைக்கு வைத்தால், காக்கை உருவத்தில் இறந்தவர்கள் சாப்பிடுவதாக ஐதீகம்.
🔹 இறைவனுக்கு பூஜைகள், வழிபாடுகள் போன்றவை எந்த அளவுக்கு முக்கியமோ அதை விட பித்ருக்களுக்கு அமாவாசை போன்ற புண்ணிய நாட்களில் செய்கிற பூஜைகளும், வழிபாடுகளும் மிக முக்கியம். அத்துடன் அன்றைய நாளில் ஒருவருக்காவது அன்னதானமும், முடிந்தால் வஸ்திர தானமும் செய்யலாம்.
🔹 துஷ்டசக்திகளை விரட்டும் ஆற்றல் ஆத்மாவுக்கு உண்டு. துஷ்டசக்திகள், பித்ருபூஜையை தடையில்லாமல் செய்பவர்களை நெருங்காது. இதன் பிறகுதான் நாம் வணங்கும் குலதெய்வமும், இஷ்டதெய்வமும் நமக்கு நல்வாழ்க்கை தருகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...