வீட்டில் இரவு படுத்தால் நிம்மதியான தூக்கம் இல்லை, சந்தோஷமான வாழ்க்கை இல்லை, வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்நொடி பிரச்சனை, கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியின் அதிகமா, கண் திருஷ்டியின் ஆதிக்கமா, என்று புரியவில்லை. சந்தோஷமாக இருந்த குடும்பம் தான், ஒரு சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சந்தோஷம் தொலைந்து போய்விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் நிர்கதியாக நிற்பார்கள். வீட்டின் மூலை முடுக்குகளில் மறைந்திருக்கும் துர் சக்திகளை விரட்டி அடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்லவா. அவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள ஒரு பரிகாரம். இந்த எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள். உங்கள் வீட்டில் நீங்கள் இழுந்த சந்தோஷத்தை ஒரே நாளில் மீண்டும் பெறுவதற்கு இந்த பரிகாரம் துணையாக இருக்கும். பரிகாரமும் இந்த பரிகாரத்தை ஒரு வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். பூஜை அறையில் செய்யலாம். ஒரு பித்தளை சொம்பு அல்லது செம்பு சொம்பு, சிறிய அளவில் இருக்கும் சொம்பு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான நல்ல தண்ணீரை ஊற்றி கொஞ்சமாக வேப்ப இலை, கொஞ்சமாக மஞ்சள் பொடி ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை, அந்த தண்ணீரில் போட்டு அதை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள். பூஜைக்கு முன்பு வழக்கம் போல பூஜை அறையை சுத்தம் செய்து, சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்திருக்க வேண்டும். ஒரு தாம்பூல தட்டில் வேப்ப இலைகளை பரப்பி, அதன் மேலே இரண்டு மண் அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். உங்களுக்கு இஷ்டமான ஏதாவது ஒரு அம்மனை நினைத்துக் கொள்ளுங்கள். அந்த அம்மனின் பெயரை 108 முறை உச்சரித்து மந்திரம் சொல்ல வேண்டும். இல்லை என்றால் 'ஓம் சக்தி பராசக்தி' என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி அம்மனை மனம் உருகி வீட்டிற்கு அழைக்க வேண்டும். உண்மையான பக்தியோடு நம்பிக்கையோடு நீங்கள் அம்மனின் பெயரைச் சொல்லி வீட்டிற்குள் அழைத்தால், அம்மன் வந்து நீங்கள் வைத்திருக்கும் அந்த சொம்பு தண்ணீரில் இறங்கி விடுவாள். மனதார வேண்டிக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் தீர வேண்டும். வீட்டில் ஏதாவது துர்ஷக்தி இருந்தால் கூட, கெட்ட சக்தி இருந்தால் கூட, அது வீட்டை விட்டு வெளியேற வேண்டும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்க வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பூஜை நிறைவடைந்த பின்பு வெள்ளிக்கிழமை அன்றே அந்த கலச சொம்பில் இருக்கும் தண்ணீரை எடுத்து வீட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் நன்றாக தெளித்து விடுங்கள். வீட்டில் இருப்பவர்கள் மேலும் இந்த தண்ணீரை தெளித்து விடுங்கள். அந்த அம்மன் இறங்கிய தீர்த்தம் தான் இது. அந்த தண்ணீரில் போட்ட எலுமிச்சம் பழத்தை எடுத்து பூஜையறையில் மூன்று நாட்கள் வைக்க வேண்டும். எலுமிச்சம்பழம் அழுகாமல் காய்ந்து விட்டால், உங்களுடைய வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை. காய்ந்த எலுமிச்சம் பழத்தை கால்படாத இடத்தில் போட்டு விடலாம். எலுமிச்சம் பழம் அழுகி இருந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை அந்த எலுமிச்சம் பழம் தன்னகத்தே ஈர்த்துக் கொண்டது என்று அர்த்தம். கைப்படாமல் அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து தூக்கிக் கொண்டு போய் ஊருக்கு வெளிப்பக்கம் போட்டுவிட்டு வந்து விடுங்கள். அவ்வளவுதான். குடும்ப பிரச்சனைக்கு ஒரு சில நாட்களில் நல்லதொரு தீர்வை அந்த அம்பாளே காட்டிக் கொடுப்பாள். இது ஒரு எளிமையான பரிகாரம் தான் நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பலன் பெறலாம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...
No comments:
Post a Comment