Wednesday, April 19, 2023

ஒரு கோமாளிக்கு இவ்வளவு பெரிய பதிவு தேவையில்லை.

 ஒருவருக்கு கெட்ட நேரம் வந்து விட்டால் தனக்கு தானே குழி வெட்ட ஆரம்பித்து விடுவார்கள் என்பதற்க்கு திரு. எஸ்.வி. சேகர் அவர்கள் சிறந்த உதாரணம். திரு. அண்ணாமலை பற்றி மலிவான மீம்ஸ் வெளியிடுவதன் மூலம் தன்னுடைய தரத்தை தானே குறைத்துக்கொள்கிறார். தான் மோடியின் சிறந்த பக்தன் என்று சொல்லிக்கொள்ளும் அவருக்கு திரு. அண்ணாமலை அவர்கள் மேலிடத்து ஒப்புதல் இல்லாமல் ஊழலை உள்ளடைக்கிய திமுகவினரின் சொத்து விபர பட்டியலை வெளியிட்டு இருக்க மாட்டார் என்கிற அடிப்படை விபரம் கூட தெரியாத மிக சாதாரண மனிதராக எப்படி மாறிப்போனார் என்பது ஆச்சரியம் கலந்த வேதனை.

வெறும் அடிப்படை உறுப்பினராக பாஜகவில் இருக்கும் அவரிடம் திரு.அண்ணாமலை எல்லா விஷயத்திலும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம் என்றே புரியவில்லை. அப்பேர்ப்பட்ட தலைவரான திரு. அத்வானி அவர்களே அவரை விட வயது குறைந்தவரான நமது பாரத பிரதமர் திரு மோடிஜி அவர்களுக்கு ஒதுங்கி நின்று வழி விட்டு எந்த வித புலம்பல்களும் பண்ணாமல் இருக்கும் பொழுது தமிழகத்தில் ஏன் திரு. எஸ்.வி. சேகர் பீர் பாட்டில் மாதிரி பொங்குகிறார் என்று தெரியவில்லை.
என்ன தான் தனிப்பட்ட திறமை கொண்டவராக திரு. எஸ்.வி. சேகர் அவர்கள் திகழ்ந்தாலும் கட்சி என்று வந்து விட்டால் கொஞ்சம் சுய கட்டுப்பாடோடு இருத்தல் அவசியம். அதிமுக தயவில் MLA ஆன பிறகு அதிமுகவின் பரம எதிரியான திமுக தலைவர் திரு. கருணாநிதியை சட்டசபையில் புகழ்ந்து பேச வேண்டிய அவசியம் இல்லை. இதை அவர் பெருமையாக வேறு சொல்லிக்கொள்கிறார். இந்த மாதிரி மக்குத்தனத்தை தான் திமுக விரும்பும். அதற்கு முட்டு கொடுப்பானேன்? இது எல்லாம் அரசியல் நாகரிகம் அல்ல. அரசியல் கோமாளித்தனம். அவளவு பதவிஸாக நடந்து கொள்வதற்க்கு திமுக தலைவர்கள் ஒன்றும் காமராஜரோ கக்கனோ அல்ல. சட்டசபையில் திமுக தலைவர்கள் என்னவெல்லாம் பேசுவார்கள் எப்படி எல்லாம் தரம் தாழ்ந்து நடந்து கொள்வார்கள் என்பது நாடறிந்த விஷ்யம்.
இவருடைய செயல் பாடுகள் இப்பொழுது எப்படி இருக்கிறது என்றால் ஏதோ இவருக்கு வர இருந்த தமிழக பாஜக தலைவர் பதவியை திரு. அண்ணாமலை அவர்கள் பறித்து விட்டது போலவும் அதனால் பொறாமையில் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவது போலவும் இருக்கிறது. இப்படி எல்லாம் செயல் படுவதால் அவருக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் கெட்டு போய் தேவையில்லாத அவப்பெயரும் மன வேதனையும் கடைசியில் மிஞ்சும். எனவே அவர் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது தான் அவருக்கு இப்பொழுது நல்லது.

இப்போது மட்டுமல்ல. எப்போதுமே அப்படித்தானிருக்க வேண்டும். வயிற்றெரிச்சலில் எல்லா தரப்பினரையும் மிஞ்சிவிட்டார். தகுதி, இன்றைய சூழலுக்கு உறுதியான, கடினமான உழைப்பு, தன் தலைவர்களை விட்டுக்கொடுக்காத மனது, தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டுவது, ஊழலுக்கு காட்டமான எதிர்ப்பை காட்டுவது, அவற்றை தடுத்து நிறுத்துவது, மற்றும் இவற்றுக்கெல்லாம் மேலாக ஊழல்வாதிகளிடம் பாராட்டு, சால்வை பெறுவதை வெறுப்பது இன்னும் பற்பல அறிவு, ஆற்றல்.தகைமை, பண்பு அத்தனையும் ஒருங்கே தன்னுள் கொண்டுள்ளவர் திரு. அண்ணாமலை. இவரை ஒப்பீடு செய்ய இன்று யாருமே கிடையாது அவரைத்தவிர. இதை நன்கு உணர்ந்துதான் நம் நவீன நரேந்திரன் இவரை அடையாளம் கண்டு தமிழக மக்களுக்கும் இந்த தேசத்திற்கும் மிகப்பெரிய நன்மையை செய்துள்ளார். பாதையில் கிடக்கும் முற்களையும், கற்களையும் தம்மைத்தொடரும் பிறர் கால்களையைம் குத்தாதவாறு தூர எறிவதே சிறப்பு. அதையும் திரு அண்ணாமலை சிறப்பாக செய்கிறார். நன்றி. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...