ஏழரை சனி என சொல்லப்படும் சனிஸ்வரர் நாரதரை போல சிறந்த விஷ்ணு பக்தர் எனவே விஷ்ணு பிரியா என பெயர் அவருக்கு உண்டு .
ஏழரை சனி காலத்தில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஏனும் பரி முக கடவுளை வெள்ளை குதிரை முகம் கொண்டவனை அன்னை திருமகளுடன் தியானம் ( மனதில் நினைத்தால் ) தினமும் சில நிமிடங்கள் செய்தால் மங்கு சனியும் பொங்கு சனி என நல்லன எல்லாம் தரும் .
அவருக்கு ஏலக்காய் மாலை சாற்றலாம் . ஏலக்காய் ரத்த கொதிப்பை குறைக்கும் தன்மை .
சனி தசையில் தான் ரத்த கொதிப்பு வர வாய்ப்பு உண்டே
.
சுவாதி நட்சத்திரம் அன்று அல்லது பௌர்ணமி அன்று ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மனுக்கு சிறிய துண்டு அல்லது பானகம் அல்லது அபிஷேகம் செய்ய சிறய பாட்டில் பன்னிர் தந்தால் வீட்டில் பண மழை பொழிவதை போல தான் பல விஷயம் நமக்கு தெரியாது .
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மன் வஸ்திர பிரியன் அபிஷேக பிரியன் .
பெருமாள் கோயிலில் பல சூட்சுமங்கள் உண்டு .
அவரவர் ஊரின் அருகாமையில் உள்ள பெருமாள் கோயில் அவ்வபொழுது சென்று வந்தால் மிகுந்த நன்மை . - அண்ணா.
No comments:
Post a Comment