" எல்லாரும் கொஞ்சம் கவனமாக படிங்க " ....
*அந்தக் கா..ஆ..ஆ..லத்துல.....*
*அப்படின்னா ஒரு 30-35 வருஷத்துக்கு முன்னாடி..*
*க்ளாஸ்ல மிகமிக மோசமான முட்டாள் பையனா இருந்தான் ஜக்கு.*
*படிப்புல எப்பவுமே முட்டை வாங்குற அவனோட அடிமுட்டாள்தனத்துக்கு ஒரு அளவே இல்லாம இருந்தது. . சகிக்க முடியாத ஹெட்மாஸ்ட்டர் T.C - யை கொடுத்து அவன ஸ்கூல விட்டே வெளியேத்திட்டார்....*
*சங்கடத்தோட அவனோட அம்மா அந்த ஊர்ல இருந்து வீட்டைக் காலி பண்ணி சென்னைல குடியேறி அங்க உள்ள ஒரு ஸ்கூல்ல அவன சேர்த்தாங்க.*
*25 வருஷத்துக்கு அப்புறம்.....*
*பழைய ஹெட்மாஸ்டர் இதயவால்வு சிகிச்சைக்காக சென்னைக்கு வருகிறார்.*
*எல்லா டாக்டர்களும் பரிசோதித்தார்கள். அவர்கள் கூறினார்கள். நீங்கள் மோசமான நிலையில் இருக்கிறீர்கள். இந்த நிலையில் ஆபரேஷன் வெற்றிகரமாகச் செய்ய ஒரே ஒரு ஸ்பெசலிஸ்ட் டாக்டர்தான் இருக்கிறார் அவரால் மட்டுமே இதை செய்யமுடியும்.....*
*அதன்படி ஆபரேஷனும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.*
*ஹெட்மாஸ்டரை வெண்டிலேட்டருக்கு மாற்றினார்கள்.*
*ஹெட்மாஸ்டர் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தார்..... எதிரே அழகான இளவயது டாக்டர் தன் முன்னில்.....*
*தன் உயிரை காப்பாற்றிய டாக்டருக்கு நன்றி கூற முயற்சி செய்தார் ஹெட்மாஸ்டர்.....*
*ஒரு சிறு புன்சிரிப்போடு டாக்டர் ஹெட்மாஸ்டரின் நெற்றியில் வருடும்போது ஹெட்மாஸ்டரின் முகம் அதிர்ச்சியில் விளறியது.....*
*என்னமோ சொல்வதற்காக முயற்சி செய்து கையை தூக்கினாலும் உயர்ந்த கை கீழே விழுந்தது..... கண்கள் நிரந்தரமாய் மூடியது....*
*திடீரென்று என்ன நடந்தது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்த டாக்டர் திரும்பி பார்த்தபோது........*
*வெண்டிலேட்டரோட பின்ன புடுங்கி வாக்வம் க்ளீனர் ப்ளக்கில் சொருகி அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தான் நம்முடைய ஜக்கு. அவன் இப்போ அங்க கிளீனரா வேல பாக்குறான்.*
*ரொம்ப சாரி..... அந்த இளவயது டாக்டர்தான் ஜக்குவா இருக்கும்னு நீங்க நெனச்சிருந்தீங்கன்னா அதுக்கு காரணம்*
*நீங்க சினிமாவும், சீரியலும் பார்த்து வளர்ந்ததுனாலதான்.*
*ஜக்கு என்னைக்கும், எப்பவும் அதே ஜக்கு தான்.*

No comments:
Post a Comment