ஒரு ஊரில் ஒரு பணக்கார தந்தைக்கும், தன் ஒரே மகனுக்கும் ஓவியங்களை தங்கள் வீட்டில் சேர்த்து வைப்பதே வழக்கமாக இருந்தது. அவர்களிடம் பிகாசோ ஓவியங்களில் இருந்து ரப்ஹேல் ஓவியங்கள் வரை இருந்தது. அவர்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் தாங்கள் சேர்த்து வைத்து இருக்கும் ஓவியங்களை அவர்களுக்கு காட்டி மகிழ்வர்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Thursday, April 13, 2023
ஒரு சிலவற்றை ஒரு பொருளாக பார்ப்பீர்கள். ஆனால், அது வேறு சிலருக்கு அது உயிராக தெரியும்.
வியட்னாம் போர் அப்போது ஆரம்பமானது, தன் ஒரே மகனை போருக்கு அனுப்பி வைத்தார். போரில் தன் நண்பன் உயிரை காப்பாற்றுவதற்காக தன் உயிரை விட்டான் அவருடைய மகன்.
" ஐயா! என்னை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால், உங்கள் மகனுக்கு நான் நண்பன். போரில் என்னுயிரை காப்பாற்றுவதற்காக தன் உயிரை கொடுத்தான் உங்கள் மகன் "...
"அவன் எப்போதும் உங்களை பற்றியே பேசி கொண்டு இருப்பான். நீங்கள் ஓவியத்தின் மேல் தீராத ஆசை கொண்டவர் என்று சொல்லி கொண்டே இருப்பான். அவன் நினைவாக நான் உங்கள் மகனின் படத்தை உங்களுக்காக வரைந்து எடுத்து வந்துள்ளேன், தயவு செய்து வாங்கிகொள்ளுங்கள் " என்றான்.
தொடர்ந்து, " நான் பெரிய ஓவியன் கிடையாது! எதோ எனக்கு தெரிந்தவரை வரைந்து உள்ளேன். பிரித்துப்பாருங்கள் " என்றான்.
அவர் பிரித்து பார்த்தார், தன் மகனின் படத்தை நெஞ்சோடு இறுக அணைத்து கொண்டு கண்ணீர் விட்டார்.
" தம்பி! இந்த படத்துக்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும்? " என்று கேட்டார்.
"ஐயா! போரில் என் உயிரையே காப்பாற்றினான் உங்கள் மகன். அவனுக்காக நான் வரைந்த படம். இதை உங்களுக்கு பரிசாக தரவே எடுத்து வந்தேன் " என்றான்.
தன் மகனின் ஓவியத்தையும் மற்ற ஓவியங்களோடு சுவற்றில் மாட்டி வைத்தார். வருவோர் போவோரிடம் எல்லாம் தன் மகனின் ஓவியத்தை காட்டி மகிழ்ந்தார்.
சில வருடத்தில் அவரும் இறந்து போனார். அவரது உறவினர் அவர் சேமித்து வைத்த ஓவியங்களை ஏலத்தில் விற்க முடிவெடுத்து, விளம்பரம் செய்தார். ஏலம் விடும் அன்று பிரபலங்களின் ஓவியங்களை வாங்க ஏகப்பட்ட கூட்டம் கூடியது.
முதலில் அவரது மகனின் ஓவியத்தை விற்பதற்காக ஆரம்ப விலை 5000 ரூபாய் சொன்னார். யாரும் ஏலம் கேட்கவில்லை. " எல்லோரும் பிரபலங்கள் வரைந்த ஓவியத்தை முதலில் ஏலம் விடுங்கள்" என்று கூச்சலிட்டனர்.
ஏலம் விடுபவர் அதை காதில் வாங்காமல், "இந்த ஓவியத்தின் விலை 5000 ரூபாய் " என்று மீண்டும் சொன்னார். யாரும் ஏலம் கேட்கவில்லை.
கூடியிருந்த கூட்டத்தை நோக்கி, "சரி! உங்களால் எவ்வளவு பணம் இதற்கு தர முடியும் என்று நீங்களே சொல்லுங்கள் " என்றார்.
மீண்டும் கூட்டத்தில் இருந்து,
" நாங்கள் இந்த படத்தை வாங்க வரவில்லை மற்ற பிரபலங்களின் ஓவியத்தை முதலில் ஏலம் விடுங்கள் " என்றார்கள்.
ஒரு பெரியவர் மட்டும் எழுந்து நின்று, "ஆயிரம் ரூபாய்" என்றார். அவர் வேறு யாரும் இல்லை அதே வீட்டில் சமையல் வேலை பார்த்தவர் தான், இந்த இளைஞன் சிறுவனாக இருந்தபோது, இவர் அவனைத் தூக்கி வளர்த்தவர், அவனோடு விளையாடியவர், அவன் விரும்பும் சமையலை சமைத்து போட்டவர். அவன் அப்பாவுக்கு நிகரானவர்.
ஏலம் விடும் நபர் , " 1000 ரூபாய் ஒரு தரம் " என்றார். யாரும் அதிகப்படுத்தி ஏலம் கேட்கவில்லை., இரண்டு தரம், மூன்று தரம் என்று சொல்லி ஏலத்தை முடித்தார்.
"ஏலம் முடிந்து விட்டது, எல்லாரும் செல்லலாம் " என்றார்.
ஏலத்திற்கு வந்தவர்களுக்கு கோபம் வந்துவிட்டது. " ஒரு ஓவியம் மட்டும் தான் ஏலம் விட்டீர்கள் மற்ற ஓவியங்களையும் ஏலத்தில் விடுங்கள் " என்றனர்.
ஏலம் விட்டவர் சொன்னார், " இறந்து போனவரின் உயில்படி, தன் மகனின் ஓவியத்தை யார் வாங்குகிறார்களோ, அவர்களுக்கே மற்ற ஓவியங்களும் இந்த பங்களாவும் மற்றும் அவருடைய சொத்துக்கள் அனைத்தும் போய்ச்சேரும்" என்று எழுதியுள்ளார் என்றார்.
"அவரது மகன்ஓவியம்தை வாங்கிய அவர் தோட்டக்காரனுக்கே இந்த சொத்துக்கள் எல்லாம் போய் சேரும்" என்றார்.
நண்பர்களே! நீங்கள் ஒரு சிலவற்றை ஒரு பொருளாக பார்ப்பீர்கள். ஆனால், அது வேறு சிலருக்கு அது உயிராக தெரியும். அடுத்தவர்கள் மனநிலையில் இருந்து பாருங்கள், யாரையும், எதற்காகவும் உதாசீனப்படுத்தாதீர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment