Thursday, April 13, 2023

ராகுல்_எனும்_புரியாத_புதிர் .

 ராகுல் காந்தி, நேரு வம்சத்தின் ஐந்தாவது தலைமுறை வாரிசு.

பரம்பரையில் மூத்தவர்களைப் போலவே, வெளிநாட்டில் படித்தாலும் அங்கீகரிக்கப்பட்ட எந்த பட்டமும் பெறவில்லை. ஆங்கில அறிவு, ஹிந்தி, மேல்நாட்டு ஆடைகள், அலட்டலான நடை. இவரை இதை வைத்து விஷயம் தெரிந்தவர் என்றும் கொள்ள இயலவில்லை.
புத்தகத்தை திருப்பிக் காட்டுங்கள், என்றால் தன் பின்புறத்தைத் திருப்பிக் காட்டுவது, பாராளுமன்றத்தில், கண்ணடிப்பது, பிரதமரை கட்டிப்பிடிப்பது என்று செய்வதால், அவரை விளையாட்டுப் பிள்ளை என்று எடுத்துக் கொள்ள இயலவில்லை.
பல முறை ,பொது வெளியில் பேசக் கூடாதவற்றைப் பேசி, வழக்கில் சிக்கி மன்னிப்பு கேட்பது, சில வழக்குகளில் ஜாமீனில் இருப்பது என்ற வகையில் , திட்டமிட்டு செய்யும் குற்றவாளி என்றும் கூற இயலவில்லை.
.
இதற்கு முற்றிலும் மாறாக, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள நாடுகளோடு ரகசிய தொடர்புகள் வைத்துக் கொள்கிறார்.
அந்த நாடுகளுக்கு ஆதரவாக கருத்திடுகிறார்.
பகிரங்கமாக இந்தியாவின் மாண்புக்கு எதிராக கருத்துகள் கூறுவதும், சர்வதேச அரங்குகளில் இந்தியாவின் மரியாதையைக் குலைப்பதும், உலக நாடுகளை இந்தியாவைக் கேள்வி கேட்கத் தூண்டி விடுவதும், இவர் சொந்தமான சிந்தனையோடு தான் செயல்படுகிறாரா ? என்று யோசிக்க வைக்கிறது.
இது இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்காத, இந்தியாவைத் துண்டு போட நினைக்கும், மதமாற்ற கும்பல்களின் கைப்பாவையாக செயல்படுகிறாரோ
என்று முடிவெடுக்க வேண்டியுள்ளது.
.
மோதி இனத்தவரைத் தவறாகப் பேசிய வழக்கில், கடந்த மார்ச் 23 ந்தேதி, ராகுல் காந்திக்கு, சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றவாளி என தீர்மானித்து, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, அவரது பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியை அவர் இழந்தார். #நன்றாககவனிக்கவும். நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, அவரது MP என்ற #தகுதியைஅவர்இழந்தார்.
அது அரசியல் நிர்ணய சட்டப்படி நடந்தது.
இதில் ஒரு வேடிக்கை/சோகம் என்னவென்றால், இப்படி, இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றால்
தகுதியிழப்பு என்ற சட்டப்பிரிவை திருத்த கொண்டு வந்த தீர்மானத்தை, பாராளுமன்றமும், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும், முயற்சித்த போது, ஆளும் கட்சி MP யாக இருந்த இதே ராகுல் காந்தி கிழித்து எறிந்தார். அது இறுதியில் நிறைவேறாமல் போனது.
எந்த திருத்தத்தை இவர் மாற்ற வேண்டாம் என்று ,கூறி இருக்க வைத்தாரோ அதே சட்டப்பிரிவால் தான் ராகுல் தகுதி இழந்தார் என்பதை என்னவென்பது??
இதில் பிரதமரோ, பாஜகவோ எதுவும் செய்யவில்லை.
குடியிருப்பையும் காலி செய்ய வேண்டியிருந்தது.
தான் பேசியதை தவறு என ஒப்புக் கொள்ளாமல் , தன் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மோதி மீது பழி சாட்டுகிறார் என்கிறார்.
வழக்கு போட்டது இவர் கேவலமாகப் பேசிய, "மோதி" என்ற பிரிவைச் சேர்ந்த யாரோ ஒருவர்.
பிரதமர் வழக்கு போடவில்லை.
மீண்டும், இரண்டு நாட்களுக்கு முன், கேரளாவில் தன் தொகுதியான வயநாடு செல்லும் போது, கோழிக் கோடில், அவரது சகோதரி பிரியங்கா வாத்ரா, தன் சகோதரர் அதானி பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாத பிரதமர், ராகுலை பழி வாங்குவதாகக் கூறுகிறார்.
.
கடந்த ஏப்ரல் மாதம் 3 ந் தேதி, சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்ய வந்த போது, 3 மாநில முதல்வர்கள், கட்சிப் பிரமுகர்கள் தொண்டர்கள் உட்பட மாபெரும் படையோடு வந்திருந்தார்.
இதுவும், நீதிமன்றத்திற்கு அழுத்தம் தர செய்யப்பட்ட நிகழ்வாகவே கருதுகின்றனர்.
ராகுல் காந்தியோடு ஒரு சிலரை மட்டும் அனுமதித்த சூரத் காவல்துறை அதிகாரிகள், மற்றவர்களை , நீதிமன்ற வளாகத்திற்கு வெளியிலேயே நிறுத்தி வைத்தனர்.
.
இப்போது, 2024 ல் பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில்
ராகுல் தகுதியிழந்துள்ள நிலையில்
அடுத்து என்ன ஆகும்? பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பாஜக கூட்டணியோடு பதவிக்கு வந்து, பிறகு பாஜகவை கழற்றி விட்டவர்.
இது ஒன்றும் பாஜகவுக்கு புதிதல்ல. உபி , ஜம்மு-காஷ்மீர், உட்பட பல மாநிலங்களில் இப்படி முதுகில் குத்து வாங்கிய அனுபவம் பெற்றது தான்.
நீதீஷ், தன் அரசியல் பங்காளி லல்லு பிரசாத் யாதவுக்கும் இப்படி செய்திருக்கிறார். இப்போது, மறுபடி
மோதிக்கு எதிராக, லல்லுவோடு கை கோர்க்கிறார்.
இன்று ஆம் ஆத்மி பார்ட்டி, கெஜ்ரிவாலுடனும் சந்திப்பு நடத்துகிறார். ராகுலுடனும் சந்தித்துப் பேசுகிறார். காங்கிரஸும், ஆஆபாவும் பரம வைரிகள் என்ற நிலையில், நிதீஷ் ஏன் இருவரையும் சந்திக்கிறார்?
.
இதற்கிடையே, தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் தரப்பில், பாஜக அல்லாத , கட்சிப் பிரமுகர்களை, மாநில முதல்வர்களை, சமூகநீதி மாநாட்டில் அழைத்துப் பேசுகிறார் .
மமதா பேனர்ஜி தனி வழியில் மூன்றாவது அணி அமைக்கப் பார்க்கிறார்.
சில நாட்களுக்கு முன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், சில கட்சிகளின், தேசிய கட்சி அந்தஸ்தினை ரத்து செய்துள்ளது.
அதில் மமதாவின் TMC, ஷரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் NCP, CPI/M, போன்றவை அடங்கும். அதே சமயம் ஆஆபா- தேசிய கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு வேளை, மேல்முறையீடு செய்துள்ள ராகுலின் தண்டனை ரத்து செய்யப்படவில்லை எனில் அவர் அடுத்த 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட இயலாது..
எனில், ஒன்றிணைந்து எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்தும்?
.
ராகுல் மற்றும் காங்கிரஸின் நிலை என்ன? இங்கே, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நீதிமன்ற தீர்ப்பு வந்து, முதல்வர் பதவியை இழந்த பின்பும், "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு " என்று கூறி தேர்தலில் பிரச்சாரம் செய்தார்.
அதிமுக அமோக வெற்றி பெற்ற பின், மக்கள் தீர்ப்பு என்ற வகையில்
ஜெயா முதல்வர் ஆனார். பிறகு, ஒரு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதைப் போல ஒரு அதிசயம் ராகுல் காந்திக்கு நிகழும் என கனவு கூட காணமுடியாது.
.
ஆகவே, ராகுல்காந்தியை விடுத்து, நேரு குடும்ப வாரிசான ப்ரியங்காவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துமா ? என்பது ஐயமே! .
..
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக மாநில முதல்வராக முன்னிறுத்தப்பட வாய்ப்புள்ளது.
.
அப்படியானால், ப சிதம்பரம் போன்ற ராஜ விசுவாசிகளுக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடும். இதிலும் சில சிக்கல்கள் உள்ளன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...