Thursday, April 20, 2023

யோசிக்க_வைக்கும்.....

 ஆண்மகனுக்கு நிறைய விஷயம் வாழ்க்கையின் கடைசிவரைக்கும் புரியாது.

அதில் ஒரு விஷயம் நினைத்த நேரம்
“சாப்பாடு போடு” என்று வீட்டுப் பெண்களை உத்தரவிடுவதால் அவர்கள் எவ்வளவு பாதிக்கபடுகிறார்கள் என்பது.
பெண் காலையில் தோசை சுட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பாள்.
கணவன் ஏதோ ஒரு வேலையில் இருப்பான். மனைவி சாப்பிடுங்க என்று சொன்னால்
“ இரு இரு இந்த வேலையை முடிச்சிட்டு வந்திர்ரேன். இந்த புரோகிராம் முடியட்டுமே, சாப்பிடுற மூட் இல்ல. அரை மணி நேரம் போகட்டுமே” என்பான்.
மறுபடி அரை மணி நேரம் பிறகு கல்லை வைத்து சூடாகும்வரை காத்திருந்து மாவை ஊற்றி, தோசை வேகும் வரை காத்திருந்து, அதை தட்டில் போட்டு சட்னி எல்லாம் ஊற்றி அவனுக்கு கொடுக்க வேண்டும்.
அனைவருக்கும் தோசை சுட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே ஐந்து நிமிடம் நேரமெடுத்து கூடவே சாப்பிட்டிருந்தால் பெண்ணுக்கு எளிதாக இருந்திருக்கும்.
ஆனால் இது பல ஆண்களுக்கு தெரியாது.
அதுவும் இளைஞர்களாக இருக்கும் ஆண்களுக்கு சுத்தமாக இந்த அறிவு கிடையாது.
சொந்தக்காரர்கள் வீட்டில் இருக்கும் போதும் இப்படி செய்வார்கள். மதியம் இரண்டரை மணிக்கு அந்த குடும்பத்தலைவி வேலை எல்லாம் செய்து கொஞ்சம் படுத்து ஒய்வு எடுக்கலாம் என்று போகும்போது
“சித்தி சாப்பாடு போடுங்க. பெரியம்மா சாப்பாடு போடுங்க” என்று சொல்லும் இளைஞர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
அவர்கள் சொன்ன உடன் சித்தியோ,
பெரியம்மாவோ, அத்தையோ தட்டை கழுவி அதில் சோற்றைப் போட்டு குழம்பை ஊற்றிக் கொடுக்க வேண்டும். அவன்கள் சாப்பிடும் வரை காத்திருக்க வேண்டும்.
மறுபடி சோறு வேண்டுமா என்று கேட்க வேண்டும். இந்த பத்தியை படிக்கும் பல இளைஞர்கள் இந்த நேரத்தில் கூட இப்படி உங்களை அம்மாவையோ, சித்தியையோ, அத்தையையோ, அக்காவையோ கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கலாம்.
இதை நீங்கள் வேண்டுமென்றே செய்வதில்லை. எப்படி செய்தாலும் பெண்களுக்கு இது கொடுமைதான்.
உங்கள் வீட்டிலேயே கூட உணவு சமைப்பதற்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் கூட உணவு பரிமாறுவதற்கு உதவி செய்யுங்கள்.
கொஞ்சம் சப்பாத்திகள் இருக்கிறது. கொஞ்சம் குருமா இருக்கிறது.
நாலு பேர் இருக்கிறார்கள்.
அதில் மூன்று பேர் ஒரே சமயம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள் என்றால் நாலாவது ஆளுக்கு குருமா தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
எவ்வளவு குருமா எடுத்து வைக்க வேண்டும் என்று குழப்பம் வரும்.
இருக்கும் குருமாவை நான்காக பிரித்து அதில் ஒரு பங்கு என்று வைத்தால் அது மிகக்குறைவாக இருக்கும்.
இது மாதிரி சமயத்தில் நான்காம் ஆளும் வேலையை போட்டுவிட்டு மூன்று பேரோடு சேர்ந்தால் இருக்கும் கொஞ்சம் குருமாவை மேனேஜ் பண்ண வசதியாய் இருக்கும்.
ஆனால் இதெல்லாம் பல ஆண்களுக்கு தெரியவதில்லை.
உணவு பரிமாறுதல் ஒரு மொக்கை வேலை.
அதை அடிக்கடி ரசித்து செய்ய முடியாது.
ஒருவர் சொன்னார்
அவருடைய சொந்தக்கார பையன் கல்லூரி மாணவன் இரவு பதினொரு மணிக்கு வந்து ”தோசை சுடுங்க சித்தி” என்றானாம்.
உடனே கணவரும் “ போ போ அவன் தோசை கேக்குறன் சுட்டுக் கொடு” என்றாராம்.
இவர் பையனைப் பார்த்து கேட்டிருக்கிறார்
“ஏண்டா நீ வரேன்னு சொல்லிருந்தா நான் சுட்டு வைச்சிருப்பேனே” என்றிருக்கிறார்.
அதற்கு அவன் “சித்தி தோசையெல்லாம் அப்ப அப்ப சுட்டு சாப்பிட்டாத்தான் நல்லா இருக்கும். எங்க ஊர்லலாம் அதான் நாங்க பத்தாங்கிளாஸுக்கு முன்னாடியே பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிருவோம். கேக்கும் போது சூடா தோசை கிடைக்கும்” என்று சொல்லி ஹா ஹா என்று சிரித்திருக்கிறான்.
இதைக் கேட்ட இவருக்கு அவன் மூஞ்சிலேயே அடிக்க வேண்டும் போல இருந்திருக்கிறது.
சொந்தக்கார பையனிடம் என்னத்த கோபப்பட என்று விட்டிருக்கிறார்.
அப்படியே கோபத்தை அடக்கிக் கொண்டு அன்று இரவு முழுவது மன உளைச்சலில் கிடந்திருக்கிறார்.
அந்த பையன் வேண்டுமென்றே அதில் எதையும் செய்யவில்லை.
ஆனால் அவன் உள்ளே இருக்கும் புரொகிராமே வீட்டு பெண்களின் உணர்வை புரிந்து கொள்ளாமல் இருப்பதாகத்தான் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.
திடீரென்று போய் தோசை கேட்பது அப்பெண்ணை சிரமப்படுத்தும் என்கிற அறிவு அவனுக்கு சுத்தமாக இல்லை.
பொதுவாக இரவு நேரத்தை தவிர வேறு எப்போதும் தூங்க மாட்டேன்.
ஒரிரு நிமிடம் கண்ணயர்வது வேறு.
தூங்க வேண்டும் என்று தூங்குவது எனக்கு பிடிக்காது.
சமையல் செய்யப் பழகும் போது
ஒரு விடுமுறை தினத்தில்
சிக்கனும்,
தேங்காய் சாதமும்,
சிக்கன் ஃப்ரையும்,
திராட்சை ஜூஸும் செய்தேன்.
செய்து சாப்பிட்டு கட்டிலில் படுத்தேன்.
அரை மணி நேரம் அசந்து தூங்கிவிட்டேன். அவ்வளவு சோர்வு.
சமையல் செய்தால் அவ்வளவு உடல் சோர்வு வரும்.
அப்படி சோர்வாகும் நேரம் எப்படா ஒரிடத்தில் ஒய்வெடுக்க என்று தோன்றும்.
அந்த சமயத்தில் வந்து
”சோறு போடுங்க. நா அப்புறம் சாப்பிடுறேன். எனக்கு ஒரு ஆம்லேட் எடுத்திருங்க. நான் இட்லி சாப்பிட மாட்டேன் தோசை சுட்டுருங்க” இப்படியெல்லாம் சொல்லி பெண்களை படுத்தாதீர்கள்.
சமைப்பது என்பது இருவரும் செய்ய வேண்டிய வேலை. சரி அது செய்ய முடியாவிட்டால் பரிமாறுவதற்காவாவது உதவி செய்யுங்கள்.
நன்றிகளும்
பிரியங்களும்.
May be an image of text that says "விடுமுறை பெண்களுக்கு இல்லை விடுமுறை ஏனென்றால் பசி க்கு இல்லை விடுமுறை."
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...