தண்டராம்பட்டு வரதராஜுலு என்ற இப்போதைய எ.வ. வேலு பொதுப்பணித்துறை அமைச்சர்
வேலு என்று அழைக்கப்பட்ட தண்டராம்பட்டுவை சேர்ந்த இவர் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். தனியார் பேருந்து நடத்துனராக பலருடன் ஒட்டி உறவாடும் தன்மையோடு கூத்து பட்டறையில் வேஷம் கட்டியும்,பத்தாம் வகுப்பு படிப்போடு நிறுத்தி கொண்ட வேலு, தண்ணீர் மின் பம்புகளை ரிப்பேர் செய்யும் வேலையையும் செய்து வந்தார்..
எடுபுடியில் இருந்து கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது, ஆட்களை கொண்டு செல்வது, விழா ஏற்பாடுகளை செய்வது என்று நல்ல அபிப்பிராயத்தை தோற்றுவிக்கிறார், எம்எல்ஏ அமைச்சர் கனவு அவரிடம் இருந்தது.
1984 இல் ப.உ.சண்முகம் மூலம் RMVயை நெருங்கி தண்டராம்பட்டு தொகுதியில் நின்று எம்எல்ஏ ஆகிறார்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணியில் இருந்ததால், பிற்காலத்தில் ஜெயலலிதாவை அவரால் நெருங்கவே முடியவில்லை.
பாக்யராஜின் கட்சியில் இணைந்து கொ.ப.செ ஆகிறார், எம்எல்ஏவாக இருந்த சமயத்தில் சுருட்டிய பணம் கொண்டு ஜேபிஆர் , சாராய உடையார், விசுவநாதன், ஜெகத்ரட்சகன், ஆகியவர்களைப் போல பல கல்வி நிலையங்களை ஆரம்பித்து அதன் மூலம் அரசியலில் பரிமளிக்க எண்ணி அருணை பொறியியல் கல்லூரியை ஆரம்பித்து திருவண்ணாமலையில் அனைவருக்கும் தெரிந்த நபரான வேளையில் கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி,
திமுகவில் இணைந்து 2001 இல் தேர்தலை சந்திக்கிறார் வெற்றியடைந்த பிறகு நிதியால் குளிப்பாட்டிய தண்டராம்பட்டு வரதராஜூலு வேலுவின் பெயர் எ.வா.வேலு என்று மாற்றப்பட்டு உணவு அமைச்சர் என்ற பதவி மகிழ்ச்சியுடன் கொடுக்கப்பட்டது.
தன் நீண்ட நாள் கனவு நிறைவடைந்த மகிழ்ச்சியில் தன்னுடைய சாம்ராஜ்யத்தை விரிவாக்க செம்மொழி மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி அந்த குடும்பத்தை மகிழ்விக்கிறார்.
கருணாநிதியின் மகனோடும் நெருக்கமாகிறார் . 2011இல் திமுக ஆட்சி கவிழ்கிறது
௭.வ.வேலு மீது சொத்துக் குவிப்பு வழக்கு அப்பொழுதே பாய்கிறது 2021 தேர்தலில் அவர் கொடுத்த மலை போன்ற நிதி அவருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற பதவியை ஆட்சி அமைந்த பிறகு கொடுத்தது ஆட்சியில் இல்லாத அந்த பத்து வருடங்களிலும் நிதியால் திமுக குடும்பத்தை குளிப்பாட்டி அவர்களை திருப்திப்படுத்தி வந்த எ.வ. வேலு அதற்கான கனிகளை திமுக மீண்டும் ஆட்சி பிடித்த பொழுது பொதுப்பணி துறை அமைச்சராக ஆக்கப்பட்ட பொழுது அடித்த கொள்ளையோ எண்ணில் அடங்காதது.
அதில் சிறு பங்கை திமுக நடத்திய அனைத்து விழாக்களிலும் வாரி வழங்கி மகிழ்வித்தார் அவர், அதேபோல அந்த முதல் குடும்பத்துக்கு கொடுத்த நிதியும் கணக்கில் அடங்காததை ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் நோட்டமிட்டு கொண்டே வந்தது..
செந்தில் பாலாஜி, ஜெகத்ரட்சகன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு., மனோ.தங்கராஜ், துரைமுருகன், கீதா ஜீவன், டி ஆர் பாலு, எ.வ. வேலு என ஒட்டு மொத்த திமுக ஆட்சி ஊழல் மீது தான் நடந்து வருகிறது.
தமிழ்நாடு இந்தியாவில் தான் உள்ளது
இந்தியாவில் தான் தமிழ்நாடு உள்ளது - என்பதை பத்தாம் வகுப்பு படித்த வரதராஜுலு இனி தெரிந்து கொள்வார்.!
ரெய்டுகள் தொடரும் அவை தொடர்வது தான் ஜனநாயகத்திற்கு நல்லது என்பது மக்களின் கருத்து. 
No comments:
Post a Comment