குற்றம் குறைகளைச் சொல்வதற்கு
ஞானமரபில் விமரிசனம் என்று பெய
ர். .சுப்புடு மிகைக் குற்றம் காணவி
ண்டவர்.சகல பக்கங்களிலும் இதே
குணாம்சங்களோடு இயங்கினார்.
நல்லவை என்ற வகைமையே இவரது
நிகண்டில் இல்லை என்பதும் சரியே.
இரண்டுமுறையே இவரது பேனா நல்
ல மசியை நிரப்பிக்கொண்டு எழுதி
யது.மாண்டலின் சீனு அவதாரபுருஷ
ன் என்பார்.இவரது "சாமஜவர கமன..
லோகத்தில் உசந்த உயர்தர சங்கீதம்
என்பார்.சௌம்யா மாமி சத்குருவின்
கீர்த்தனையை அவர் பாடினது மாதி
ரியே அசத்துவா. ஸ்ரீரங்கத்துப் புளி
யோதரை- நல்ல மிளகாய்பொடி தூவி
யது.காரமில்லாத சாரமுறைக் காரம்.
ஸ்வரப்பிரஸ்தாரங்களிலும் ராஜ பா
வம் புதியதுதான் எனக்கைதட்டுவார்.
சுப்புடு சரியானவரா தப்பானவரா
என்று புரிந்துகொள்ளவே முடியாது
சுப்ரமண்யத்திற்கு இசை ஞானம்
உண்டா என்ற சந்தேகமும் சிலருக்கு
இருந்தது.அடிவாங்கிய பாகவதர்களு
டைய சந்தேகம்தான்.பர்மாவில் ஏழு
வயதில் ஹரிகேசநல்லூர் முத்தையா
பாகவதர் கதாகாலச்சேபத்தில் ஹார்
மோனியம் வாசித்த ஆட்டோ பயாகி
ரபி உண்டு.கூடுதலாக கீ போர்டும்
தெரியும்.வாசிச்சாரா தெரியலே.
பத்திருபது ராகங்கள் தெரிந்தாலே
போதும் இசையுலகை மிரட்டி விடலா
மெற்ற ரகசியம் தெரிந்திருந்தது.
பாவம் வித்வான்களுக்கு சங்கீதம்
தவிர வேறு பரிச்யங்கள் இல்லை.
பல வித்வான்களின் மைத்துன
கோஷ்டிகளோ ஆத்துமாமியோதான்
சம்பாவனை வியாபாரம் பேசறது.
சுப்புடுவிற்கு ஏழெட்டு முத்திரை வச
னங்கள் மனப்பாடம்.சுற்றளவைக்
குறைத்தால் உலகம் சுற்றலாம் என
நடனமணிக்கு உபதேசம்.காதிலும்
கம்மல் குரலிலும் கம்மல்.கேதாரம்
சேதாரம் ஆகிவிட்டது என்று பாகவத
ர்களுக்கு அறிவுரைகள் என்பன
போன்ற ரெடிமேட் வசனங்கள்.best
of luck at next year என்ற நக்கல்.சரியா
எழுதுகிறோமோ இல்லையோ காட்ட
மாக எழுதவேண்டும் என்ற இரக்கம
ற்ற கோட்பாடு.
அநேகமாக பெரிய வித்வான்களிலி
ருந்து குட்டி வித்வான்கள் சபா செக்ர
ட்டரிகள் வரை பரம வைரியாக இருப்
பதில் அபார சந்தோஷம்.பக்கவாத்யக்
காரர்களையும் ஒரு குட்டு.சமயத்தில்
தம்புராக்காரருக்கு ஒரு ஷொட்டு.இவ
ருக்குமட்டும் அபார சங்கீத ஞானம்.
முற்பிறவிப்பாபம் இப்போ தம்புராவி
ல் ஙொய்..ஙொய்ங்...இடம்மாறி உக்
காந்துட்டான்.சங்கீத ஞானஸ்தனைக்
கண்களை வைத்தே கண்டுபிடித்து
விடுவேனாக்கும் என்ற குசும்பு.
செம்மங்குடி மாமாவிற்கும் இவருக்கு
ம் ராசி இல்லை.செம்மங்குடி 'பல்செட்
கேஸ்' என்பார்.எப்போதுமே இவர்
கச்சேரிபண்ணியதில்லை.ஏழெட்டு
பேரை சுத்தி உட்கார்த்தி வச்சுட்டு
சம்பிரதாய பஜனை ராதா கல்யாணம்
மாதிரி பண்றார் பாவம்.முடிலேன்னா
விட்டது சனின்னு நகரவேண்டியது
தானே.அதான் ஈசிசேர் வாங்கிப்போ
ண்டிருக்கேளே.." செம்மங்குடியே சலி
ச்சுப்போய்" சுப்புடு நானும் வருஷா
வருஷம் வெக்கமில்லாம பாடிண்டிரு
க்கேன்.நீயும் வெக்கமில்லாம எழுதி
ண்டிருக்கே" என்று முகாரிலே இழு
திருக்கார்.இவ்வளவு பேசும் சுப்புடு
சாருக்குப் பிடிச்ச ஒசத்தியான பாட்டு
டி.ராஜேந்தரின்" தட்டிப்பார்த்தே செட்
டாகுது/ தாளம் வந்தது பாட்ட வச்சு"
என்ற சினிமாப் பாடல்தான்.
சாஸ்திரிகள் பைஜாமா போடலாமா.
நீங்க பால்ரூம் டான்ஸ்மாதிரி கச்சேரி
பண்ணப்பிடாது.நேதுநேரி கிருஷ்ண
மூர்த்தியிடம் வம்பு.முடிந்ததைப் பாட
னும்.மீறிப்பாடி அலப்பறை பண்ணக்
கூடாது.இந்த சாரீரத்திற்குக் கன்னட
கௌளை தோதுப்படுமா கிட்டு. சதுஸ்
ருதி ரிஷபத்தை இந்த டிசம்பர் குளிரி
ல் மென்னியைப் பிடிக்கக் கூடாது.
மேல் ஸ்தாயியில் ஒருபக்கம் அழுத்
தனும்.பீம்ளாசை இன்னொரு பக்கம்
சுத்ததன்யாசி, மேலே கரகரப்பிரியா..
என்பார்.புரிந்ததுபோலத்தான் இருக்
கும்.புரியாததுபோலவும் இருக்கும்.
இப்படிச் சாட்சி சொல்ல அசாத்ய சாம
ர்த்தியம் வேண்டும். குதிரைத்திருட்
டுக்கு கோர்ட்டில் சாட்சி சொல்றது
மாதிரி.முன்னால்பார்த்தால்ஆளவந்தார் குதிரை பின்னால் பார்த்தால்
செட்டி குதிரை. முந்திரி குஸ்தே ஆள
வந்தார் குர்ரம் வெனக்காயலு குஸ்
தே பப்பு செட்டி குர்ரம்" ங்கற மாதிரி
சுப்புடு சாட்சி சொல்வதையே வழக்
கமாக வைத்திருந்தார்.
சபா செக்ரட்டரிகள் வெளியே வந்து
தோல் பையை கக்கத்தில் இடுக்கிக்
கொண்டு நிற்பதே மேடையில் நடக்
கும் அராஜகங்களுக்கும் அடாவடித்
தனங்களுக்கும் நாங்கள் பொறுப்பு
கிடையாது என்று தப்பிக்கவே.சபா
க்கள் இந்த தில்லிக்கிழத்தை உள்ளே
விடாதே என்று மல்லுக் கட்டின.ஏன்
என்று தெரியவில்லை.நம் சங்கீத
மல் ஜிப்பாக்கள் இவரிடம் நடுங்க..
ஏன் தெரியவில்லை..இத்தனைக்கும்
நம்ம ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் மாதிரி
விண்ணென்றுதான் இருந்தனர்.
திருவையாற்றில் சத்குரு ஆராதனை
யில் சுப்புடுக் கிழவரை அடிக்க ஒரு
கோஷ்டி முற்பட்டது.அப்படி நடக்கவில்
லையானாலும் ஏதோ ரசக்குறைவா
நடந்திருக்கலாம்.அப்ப வயலின் என
அறிவிப்புகேட்க குன்னக்குடி யின்
மார்க்கட ஜேஷ்டைக்குப் பயந்து பந்
தலை விட்டு வெளியே போய்விட்
டேன். " இந்தக் கன்யாகுமரி இருக்
காளே இடத்தைக் குடுத்தா மடத்தைப்
பிடுங்கிடுவா.விட்டால் கத்ரி மடியி
லேயே உக்காந்துடுவா என எழுதியி
ருந்தார் சுப்புடு.
பேருக்கு மத்திய அரசு வசமான உத்
யோகம்.மாதம் முழுக்க ஆபிஸ் போக
அவரென்ன சாதாரண குமாஸ்தாவா.
ஒரே ஒருநாள் போனால் போகிறதெ
ன்று திடுமென ஆபிஸ் வருவார்.அது
சம்பள நாள்.சகோதரர் பி.வி.கிருஷ்
ணசாமி ஆகாஷ்வாணி உத்யோகம்.
வானொலி உதவி இயக்குனரான நாராயணமேனன் இவரது ஆப்தர்.
சுப்புடு ராஜ்ய அதிகாரத்திற்குக் கே
ட்கவா வேண்டும்.ஆபீசிலே தலை
காட்டிவிட்டு உயர் அதிகாரியிடம்
சத்தமாகப் செல்வாராம்." நான் முக்
கிய வேலையாப் போறேன்.சீஃப்
செக்ரட்டரி பூதலிங்கம் பேசுவான் சுப்ரமணியன பேசச் சொல்லுவான்.
நாளைக்குக் கூப்பிடச் சொல்லிடு.
அவசரமா வெளியிலே போயிருக்கார்
ன்னு சொல்லிடு.ஜாயிண்ட் கமிஷனர்
அனந்தராமன் கூப்பிடுவான்.சொல்
லிடு. நம்ம ரிசர்வ் பாங்க் கவர்னர்
ஜெகத்து கேட்பான் சும்மா நைநைனு.
அப்புறம் வைஸ்பிரசிடெண்ட் வெங்
கிட்டு கூப்பிடுவார்.ஆத்துக்குப் போயி
ட்டேன்னு சொல்லிடு.நாளைக்குப்
பேசறேன் என்று அதிரடிகாட்ட ஆபிஸ்
கப்சிப்.சமயத்திலே எங்கிருந்தாவது
போன் வரும் சுப்புடு பேசறேன்.ஐ.நா
சபையிலிருந்து நரசிம்மன் கூப்பிட்
ட்டாரோ... நான் போன பின்னாடி.."
போகாமலேயே பயணப்படி கிளைம்
பண்ணி வாங்கிக்கொள்வார்.ஆபிஸ்
விஷயமா வெளியூர் போகச் சொன்
னால் இரண்டுநாள் வீட்டிலிருந்து
விட்டு அப்பப்பா அந்த ரங்காச்சாரி
லேசிலே மசியமாட்டேன்னுட்டான்.
விடுவேனா நம்ம இந்திரா காந்தி
மேடத்திடம் சொல்லி ஒருமிரட்டு
மிரட்டினேனா..அதற்குஅறைவாடகை
டி.ஏ என பில்போட்டு வாங்கிவிடும்
கில்லாடி.நம்ம பாரதிமணி என்ற
பலே ஆசாமியே அசந்துபோய்விடு
வாராம்
சென்னையிலே ஒரு நாடகம் கோமல்
என்று நினைக்கிறேன்.சுப்புடு நாடக
த்திற்குப்போகாமலே வீட்டில் தூங்கி
விட்டு ஹிண்டுவிற்கும் விமரிசனமும்
எழுதிவிட்டார்."டிராமா அட்டர் ஃப்ளாப்"
ஆனால் அன்று நாடகம் நடக்கவே
இல்லை.ரத்தாயிருந்தது.
ஆயிரம் இருந்தாலும் சுப்புடு ஒரு
மிரட்டல்காரராக படு செல்வாக்
கோடு வலம்வந்தவராகவே இருந்தார்.
நல்லவேளை இலக்கியபக்கம் வராத
து பேரதிஷ்டம்.ஏற்கெனவே குழப்பிக்
கிடக்கும் தமிழ்ப் படைப்புலகம் தாங்க
வே தாங்காது.யப்பாடி...!!
---


No comments:
Post a Comment