Thursday, June 30, 2011

புது தலைமைச் செயலகம் குறித்து விசாரணையா? யாரும் புகார் தரவில்லை என்கிறார் கருணாநிதி

:புதிய தலைமைச் செயலக கட்டுமானம் குறித்து விசாரிக்க, தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளதை கடுமையாக விமர்சித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

 
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:புதிய தலைமைச் செயலக கட்டுமானம் குறித்த புகார்களை விசாரிக்க, நீதிபதி தங்கராஜ் தலைமையில், ஒரு நபர் விசாரணை கமிஷனை, தமிழக அரசு அமைத்துள்ளது. தலைமைச் செயலக கட்டுமானம் குறித்து, யாரும் புகார் கொடுத்ததாக, எந்த செய்தியும் வரவில்லை.விசாரணை வரையறைகளாக, கட்டுமானத் தரத்தில் குறைகள், கட்டுமானப் பணியை முடிக்க காலதாமதம், முறைகேடுகள், தேவையில்லாத செலவினங்கள் என கூறப்பட்டுள்ளது. டில்லியில் பிரதமரை சந்திக்கச் சென்ற போது, முதல்வர் தங்கும் அறை மாற்றப்பட்டது. புதிதாக சாலை போடப்பட்டது. இதற்கு செலவழிக்கப்பட்டது எவ்வளவு, செம்மொழி தமிழாய்வு நூலகத்தை அப்புறப்படுத்திவிட்டு, அங்கு சட்டப்பேரவை உருவாக்க செய்த செலவு எவ்வளவு, பயணிகள் விமானத்தை பயன்படுத்தாமல், தனியார் விமானத்தில் முதல்வர் செல்வதால் ஏற்படும் செலவுகள் எவ்வளவு, இது குறித்து விசாரணை உண்டா?விசாரணை கமிஷன் தலைவர் தங்கராஜ் ஐகோர்ட் நீதிபதியாக இருந்த போது அளித்த தீர்ப்பு, பலத்த சர்ச்சையை கிளப்பியது.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தயாநிதியிடம் பிரதமர் மன்மோகன் சிங் விசாரணை: மந்திரி பதவியில் இன்னும் எத்தனை நாள்?

" ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது என்ன நடந்தது என்பது பற்றிய மர்மம் நீடிக்கிறது.


ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம், தி.மு.க., வின் முக்கிய முகங்களாக இருந்த ராஜா மற்றும் கனிமொழி ஆகியோரை சிறைக்குள் தள்ளி அக்கட்சியை பெரும் இக்கட்டில் தள்ளிவிட்டது. இந்த ஊழல் வழக்கின் மூன்றாவது குற்றப்பத்திரிகையை விரைவில் சி.பி.ஐ., தாக்கல் செய்யவுள்ளது.இதில் தயாநிதியின் பெயர் இடம்பெறலாம் என்று சி.பி.ஐ., வட்டாரங்கள்கூறுகின்றன. இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார். ஜனாதிபதியின் ஐதராபாத் பயணம் காரணமாக, வரும் 10 ம் தேதி வாக்கில் தான் அமைச்சரவை மாற்றம் நடக்கவுள்ளது. இந்த மாற்றத்தில் தயாநிதி தலை தப்புவது சிரமமே. இந்த சூழ்நிலையில்தான் நேற்று டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, தயாநிதி சந்தித்துப் பேசினார். ரேஸ்கோர்ஸ் சாலையின் பிரதமர் இல்லத்தில், மதியம் 12 மணியிலிருந்து 12.15மணிவரை இந்த சந்திப்பு நீடித்தது. பிரதமரை சந்தித்துவிட்டு வந்த தயாநிதி, நேராக தனது அமைச்சகத்திற்கு வந்தார். கடந்த சில நாட்களாகவே அமைச்சரவை பக்கம் வராமல் இருந்த அவர், பிரதமரை சந்தித்துவிட்டு உடனேயே அமைச்சகத்துக்கு வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


பிரதமருடனான சந்திப்பு குறித்து தயாநிதி தரப்பு கூறுகையில், "அமைச்சக ரீதியிலான விஷயங்கள்குறித்து பேசப்பட்டது. வழக்கமான சந்திப்பு தான் இது' என்று தெரிவிக்கப்பட்டது. இதே சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, "சந்திப்பு நடந்தது உண்மை' என்று மட்டும் கூறி நிறுத்திக் கொள்ளப்பட்டது. இருப்பினும்,"ராஜினாமா செய்யச் சொல்லி 10 நாட்களுக்கு முன்பே பிரதமர் தரப்பில் இருந்து தயாநிதிக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தும், அதை செய்யாதது ஏன் என்பது குறித்து விளக்கம் கேட்பதற்காக அழைக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. "தற்போது ராஜினாமா செய்யும்படி வலியுறுத்த வேண்டாம்; விரைவில் நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது தானாகவே பதவி போய் விடும்படி செய்து கொள்ளுங்கள்' என பிரதமரிடம், தயாநிதி கேட்டுக் கொண்டதாகவும் இன்னொரு செய்தி கூறுகிறது.


தயாநிதி மீது கூறப்படும் குற்றச்சாட்டு என்ன? ஸ்பெக்டரம் ஊழல் வழக்கின் மூன்றாவது குற்றப்பத்திரிகையை விரைவில் சி.பி.ஐ., தாக்கல் செய்யவுள்ளது.இதில் தயாநிதியின் பெயர் இடம்பெறலாம் என்று சி.பி.ஐ., வட்டாரங்கள்கூறுகின்றன.


தயாநிதி, முந்தைய ஆட்சியில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். அப்போது, ஏர்செல் நிறுவனம் சார்பில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டது. என்ன காரணத்தினாலோ இந்த ஒதுக்கீடு அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டது. பின், இந்த ஏர்செல் நிறுவனத்தை, மலேசிய கம்பெனி ஒன்று விலை பேசியது. அந்த குறிப்பிட்ட கம்பெனிக்கு ஏர்செல் நிறுவனத்தை விற்பனை செய்ய வேண்டுமென மறைமுக நெருக்கடி தரப்பட்டது. இதையடுத்து, ஏர்செல் நிறுவனம் தனது பங்குகளை மலேசிய கம்பெனிக்கு விற்றது. அவ்வளவு நாட்களாக அளிக்கப்படாத ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, இந்த கம்பெனி விற்பனை நடந்து முடிந்ததும் அளிக்கப்பட்டது. இந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முடிந்த உடனேயே தயாநிதியின் சகோதரரான கலாநிதிக்கு சொந்தமான, "சன் டைரக்ட்' குழுமத்தில், ரூ.600 கோடி வரையில் அந்த மலேசிய கம்பெனி முதலீடு செய்தது. ஸ்பெக்ட்ரம் கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் வழங்காமல், வேண்டுமென்றே நெருக்கடி அளித்து கம்பெனியை விற்பனை செய்ய வைத்து, அதன் பிறகு உடனேயே ஸ்பெக்ட்ரத்தை வழங்கி, அதற்கு பிரதிபலனாக ரூ.600 கோடி பரிமாற்றம் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் தயாநிதி தரப்பு மறுத்து வந்தாலும், ஏர்செல் நிறுவனத்தின் சிவசங்கரன் தரப்பு உறுதியில் இருக்கிறது. நடந்த அனைத்து விவரங்களையும் சி.பி.ஐ.,யிடம் சிவசங்கரன் விரிவான வாக்குமூலமாக அளித்துவிட்டார். இதுதவிர, பி.எஸ்.என்.எல்., போன் இணைப்புகள் பலவற்றை தனது சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதும் அம்பலமாகி தயாநிதிக்கு கடும் நெருக்கடியை அளித்துள்ளது.

விசாரணை கமிஷன் என்றவுடன் மு.க. பயம், நடுக்கம்.

டில்லியில் பிரதமரை சந்திக்கச் சென்ற போது, முதல்வர் தங்கும் அறை மாற்றப்பட்டது. புதிதாக சாலை போடப்பட்டது. இதற்கு செலவழிக்கப்பட்டது எவ்வளவு, செம்மொழி தமிழாய்வு நூலகத்தை அப்புறப்படுத்திவிட்டு, அங்கு சட்டப்பேரவை உருவாக்க செய்த செலவு எவ்வளவு, பயணிகள் விமானத்தை பயன்படுத்தாமல், தனியார் விமானத்தில் முதல்வர் செல்வதால் ஏற்படும் செலவுகள் எவ்வளவு, இது குறித்து விசாரணை உண்டா?என்றுகேள்வி வேறு.

1200 கோடி ரூபாய்க்கு விசாரணை என்றால், லட்சத்தில் உள்ள செலவிற்கு விசாரணை கமிஷன் கேட்கிறார். சம்பந்தமே இல்லாமல் உளறுவது இவரின் வாடிக்கையாகிவிட்டது. ஏன் இவர் இப்படி இருக்கிறார்? விசாரணை கமிஷன் என்றவுடன் பயம், நடுக்கம் வந்துவிட்டது போலும்..... அதனால் நிச்சயம் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது இவற்றின் பயத்திலிருந்து நிரூபணம் ஆகிறது. நிச்சயம் அந்த தண்ணீர் டாங்க் சட்டமன்றம் இருநூறு கோடி ரூபாய் தான் இருக்கும், மீதம் உள்ள 1000 கோடி ரூபாயை ஸ்வாகா செய்துள்ளார்கள், அதனால் கருணாநிதி பதட்டமாக உள்ளார். இது மட்டுமா, விசாரணை கமிஷன் அமைத்தால், இன்னும் தோண்ட தோண்ட ஊழல்கள் வெளிவந்துகொண்டே இருக்கும். சமசீர் கல்வி புத்தகத்திற்கு ஒரு விசாரணை கமிஷன் அமைத்து விசாரித்தால், அதன் உண்மையான செலவு 80 கோடி, 200 கோடி அல்ல என்று தெரியவரும். என்னமோ இவர் அறிக்கையால் தான் அம்மா காஸ் விலை குறைத்ததாக திமுகவினர் கூறினார்கள், அப்படி என்றால், மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்கும் திமுக ஏன் மத்திய அரசை வலியுறுத்தி விலை ஏற்றதை திரும்ப பெறவில்லை?

முன்பு வெங்காயம் விலை அதிகம் என்று மு.க.விடம் கேட்டபோது, பெரியாரிடம் போய் கேள் என்று நக்கல் செய்தார், பெட்ரோல் விலை ஏறியதை கேட்டபோது போய் மன்மோகன் சிங்கிடம் கேள் என்று சொன்னவர் தான் இந்த மு.க. இவர் சொல்லிட்டாராம், அம்மா வரியை நீக்கிவிட்டாராம்? 

ஒரு சின்ன கதை, ஒரு எறும்பு யானையின் தலையில் உட்கார்ந்து அழுத்துமாம், அந்த யானை தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சம் முழ்குமாம், உடனே கரையில் இருக்கும் எறும்புகள், யானையின் தலையில் உள்ள எறும்பை பார்த்து, அப்படி தான், விடாதே, நல்லா அழுத்து, யானை தண்ணீரில் முழ்கி சாகட்டும் என்று கூச்சல் போடுமாம். அந்த எறும்பினால் தான் யானை மூழ்கியது என்று அந்த எறும்புகள் ஒன்றோடு ஒன்று கைகுலுக்கி வாழ்த்து தெரிவிதுகொள்ளுமாம், அது போல இருக்கிறது, நான் விட்ட அறிக்கையால் தான் வரியை குறைத்தார் என்று சொல்லுவது. கருணாநிதி ஆட்சியில் பெட்ரோல் விலை உயர்ந்த போது, ஏன் விற்பனை வரியை குறைக்கவில்லை?

இருபது லட்சம் செலவு, அது மக்கள் வரி பணம், சரி, விசாரணை தேவை, செம்மொழி மாநாட்டிற்கு 500 கோடி செலவழித்தாரே, அது நம்முடைய வரி பணம் இல்லையா? கருணாநிதியின் சொந்த பணமா?2G ஊழல் காரணமாக இது நாள் வரை கருணாநிதி, திமுக உறுபினர்கள், குடும்ப உறுப்பினர்கள் டெல்லி சென்றார்களே, அது யார் பணம்? அவர் சொந்த பணமா? அம்மா ஆட்சி அமைத்து ஒரே முறை தான் டெல்லி சென்றார், அதுவும் அரசாங்க ரீதியாக சென்றார், அதற்க்கு இந்த கூப்பாடு போடுகிறீர்கள்? சரி, மன்மோகன் சிங், சென்னை வந்தால், பயணிகள் விமானத்தில் தான் வரவேண்டும் என்று கூறுவீர்களா? இல்லை வெளிநாடு செல்லும் போது பயணிகள் விமானத்தில் தான் செல்லவேண்டும் என்று கூறுவீர்களா?.  

மன்மோகன் சிங், மற்றும் உயர் பதவியில் இருப்பவர்கள் மற்ற நாடுகளுக்கு செல்லும் போது தனி விமானத்தில் தான் செல்வார், அது போலவே. அம்மா ஒரு மாநில முதல்வர், அதும் வலிமையான முதல்வர், அவர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனி விமானத்தில் செல்லவேண்டும். ஒவ்வொரு மாநில முதல்வர்கள் ஐந்து வருடத்தில் அரசாங்க ரீதியான பயணத்தில் இவ்வளவு பணம் செலவு செய்து கொள்ளலாம் என்று அளவு உள்ளது, அந்த பணத்தில் தான் அவர் செலவு செய்கிறார். தெரிந்தால் பேசுங்கள், சும்மா வரி பணம் வரி பணம் என்று பிதற்றாதீர்கள். எவ்வளவோ லட்சம் கோடிகள் கொள்ளையடித்தார், அது பரவாயில்லையாம், இருபது லட்சம் தான் இவருக்கு மக்களின் வரி பணமாக தெரியுதாம்....

ஒரு ஊழலை விசாரிக்க விசாரணை கமிசன் அமைத்ததற்கே இப்படின்னா இன்னும் நிறைய ஒன்றன் பின் ஒன்றாக வருமே ! தவறு நடந்திருப்பதால் தீர்ப்பு எப்படி வரும்னு முன் கூட்டியே அனுமானித்து அறிக்கை விட்டிருக்கிறார்.

 

கேடி ப்ரதர்சுக்குப் பிடித்த கேடு காலம்! மந்திரிசபையில் மாற்றம்!

ஜூன் 30, 2001!
ஐயோ  கொல்றாங்களே! ஐயோ கொல்றாங்களே!
இப்படி ஒரு ஓலத்துடன் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட படலம் நடந்தேறிய நாள்.
தாத்தாவுக்காக அந்தப் பிரபலமான 'ஐயோ கொல்றாங்களே!" டயலாகை டப்பிங் கொடுத்தது தயாநிதி மாறன் தான் என்று சொல்லப்பட்டதுமுண்டு!

பேரன்கள், தங்களுடைய ஊடக பலத்தை வைத்து, ஒரு துரும்பை, மலை மாதிரி மாற்றிக் காட்டினார்கள்!  பல நாட்கள், சன் தொலைக்காட்சியில் அதையே திரும்பத்திரும்ப ஒளிபரப்பி, கோயபல்ஸ் சொன்ன மாதிரி, திரும்பத் திரும்பச் சொன்னால் பொய் கூட நிஜமாகிவிடும் என்பதை மெய்ப்பித்துக் காட்டினார்கள். தாத்தா என்னவோ பெரிய வசனகர்த்தா தான்! அது என்றைக்கோ காலாவதியாகிப் போன ஒன்று என்பது உளியின் ஓசை எழுதியவருக்கு இன்றைக்கும் கூடத் தெரியவில்லை என்பது அவருடைய பரிதாபம்!

அன்றைக்கு நடந்தது என்ன என்பதை ஹிந்து நாளிதழ் செய்தியாக  


ஆனால் தாத்தா தான் எழுதிய வசனத்தை விட, பேரன் கொடுத்த டப்பிங் ரொம்பவுமே எஃபெக்டிவாக இருந்ததை, ஒப்புக் கொண்ட மாதிரித்தான் பேரனை 2004 தேர்தலில் எம்பியாக்கி அழகு பார்த்ததும், ஆனா ஆவன்னா கூடத் தெரியாத பேரனைக் காபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக்கிப் பார்த்ததும் இருந்தது. 

ன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட கதையாகி விடப் போகிறது என்று அன்றைக்குத் தாத்தாவுக்குத்  தெரியவில்லை! எல்லாம் அவர் நம்பாத அந்த "விதி" என்றுதான் சொல்ல வேண்டும்!


தாத்தா கூட செய்யத் துணியாத ஒன்றை தயாநிதி துணிந்து செய்தார்!  

ஊழலைச் சொல்லவில்லை! ரத்தன் டாட்டாவை ரொம்ப நேரம் காக்க வைத்துத் தன்னுடைய கித்தாப்பைக் காண்பித்துக் கொண்ட விதம் ஒரு வலிமையான எதிரியை உருவாக்கப் போகிறதென்றோ,வடக்கத்திய கார்பரேட்டுக்கள் தாத்தாவின் அரசியல் வித்தகத்தைவிட அதிக சாமர்த்தியமானவை என்பதோ தயாநிதிக்கு அன்றைக்குத் தெரிந்திருக்கவில்லை! 

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவர்களுக்கு ஆப்பும் அதே மாதிரித்தான்  வரும் என்பது கேடி ப்ரதர்சுக்குத் தெரியவில்லை. மதுரை இளவரசருடன் நேரடியான மோதலில் இறங்கிக் கையைச் சுட்டுக் கொண்டார்கள். இதயம் கனத்துக் கண்கள் பணிக்க ஏற்பட்ட சமரசத்துக்கு கேடி பிரதர்ஸ் அதிக விலை கொடுக்க வேண்டிவந்தது தனிக்கதை!
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவை மிஞ்சிய வசூல் ராசாவாக இருந்தவர் தயாநிதிதான் என்று கூட சொல்கிறார்கள்! சொல்கிற கதையைக் கேட்கும் போதே தலை சுற்றுகிறது.
ன்றைக்கு, தயாநிதி மாறன் மன்மோகன் சிங்கை சந்தித்துத் திரும்பி ருக்கிறார். தன்னுடைய அமைச்சகத்தின் விவகாரங்களைப் பற்றி மட்டுமே பேசி வந்தேன் என்று யாரும் நம்பாத ஒன்றை சொல்லியிருக்கிறார். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற மாதிரி, நான் இன்னும் அமைச்சராகத் தான் இருக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார்! இந்த வார இறுதிக்குள் ராஜினாமா செய்கிற கூத்து அரங்கேறும் என்றும் சொல்கிறார்கள்!

கூடவே அ'னாவும் மத்திய மந்திரிசபையில் இருந்து கழற்றிவிடப்படுவார், கண்டனூர் பானா சீனாவுக்கு இப்போது இறங்குமுகம் ஆனால் ,மந்திரி சபையில் இருந்து கழற்றிவிடப்படமாட்டார் என்றெல்லாம் ஊகங்கள், வதந்திகள் நிறைய உலவிக் கொண்டிருக்கின்றன.   


பரிதாபமாக இருக்கிறது என்று சொல்லி விட முடியாது!



பத்தே ஆண்டுகள் தான்! தயாநிதி மாறன் அரசியல் வால் நட்சத்திரமாகிப் போனதற்கு அதுவே அதிக காலம் தான்!

Wednesday, June 29, 2011

திஹார் சிறையில் அண்ணனைக் கண்டதும் கதறியழுத கனிமொழி

 

திஹார் சிறைக்கு தன்னைப் பார்க்க வந்த அண்ணன் மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதுள்ளார் கனிமொழி. அவருக்கு ஆறுதல் கூறி பேசினார் ஸ்டாலின்.

2வது முறையாக நேற்று கனிமொழியை சந்தித்தார் ஸ்டாலின். நேற்று மாலை 4 மணிக்கு சிறையில் கனிமொழியை அவர் சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.


கனிமொழியைப் பார்ப்பதற்காக சிறையின் உதவி கண்காணிப்பாளர் அறைக்கு வந்தார் ஸ்டாலின். அங்கு அண்ணனைப் பார்த்த கனிமொழி உடனே உடைந்து போய் அழுது விட்டார்.

அவரை சமாதானப்படுத்திய ஸ்டாலின் தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தினார். பின்னர் ஸ்டாலின் பேச அதை அமைதியாக கேட்டபடி இருந்தார் கனிமொழி. பின்னர் மனதை தேற்றிக் கொண்டு அவரும் பேசினார். இருவரும் தமிழில் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.

கனிமொழியை சந்தித்துப் பேசிய பின்னர் அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு கிளம்பிய ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ராசா மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்

தமிழக அபிவிருத்திக்கு ஜெயலலிதாவின் அதிரடித் திட்டங்கள்!

வரலாற்றில் இது வரை எவருமே அபிவிருத்திப் புரட்சியினை முன்னெடுத்திராத வகையில், துரித கதியில் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தமிழக மேம்பாட்டிற்கான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவுள்ளார். அவையாவன


*பசுமைப் புரட்சியினையும், நாட்டின் உற்பத்தினையும் பெருக்கும் நோக்கில் விவாசயிகளுக்கு கடனடிப்படையில் பல உதவிகளை வழங்குவதோடு, விவசாயத்தோடு தொடர்புடைய தொழில் நுட்பங்கள் பல வற்றை அறிமுகப்படுத்தி நாட்டில் பசுமைப் புரட்சியினை விரிவாக்குதல்.

*ஏழைகளே நாட்டில் இருக்கக் கூடாது எனும் உயரிய நோக்கில் அனைவருக்கும் இலவசக் கல்வியோடு கட்டாயக் கல்வியினையும் அமுல்படுத்துதல். ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மாதாந்த கொடுப்பனவுகளை வழங்குதல்.

*தொடர்பாடல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளினை அனைத்து மக்களும் சம அளவில் பெற்றுக் கொள்ளும் வண்ணம் தமிழகம் தழுவிய ரீதியில் விஸ்தரிப்பதோடு, கட்டண விகிதத்தினையும் குறைத்தல்.

*போக்குவரத்துத் துறையில் துரித கதியில் வளர்ச்சியினை ஏற்படுத்தும் நோக்கிலும், அனைத்து மக்களும் ட்ராபிக் இன்றிச் சுமூகமான பயணத்தினை நேர விரயமின்றி மேற் கொள்ளும் நோக்கோடும், மொனோ ரயில் திட்டம், வீதிக்கு குறுக்கான மேம்பாலத் திட்டம், சீரான போக்குவரத்துப் பாதைக் காப்பீட்டுத் திட்டம் எனப் பல திட்டங்களை அறிமுகப்படுத்துதல். 

*தெருவோரங்களில் சிறு நீர் கழிப்போர், வீதிகளில் அசுத்தம் பண்ணுவோர், எச்சில் உமிழ்வோர், மீது சுற்றாடல் சுகாதாரத்தைப் பேணும் திட்டத்தின் அடிப்படையில் தண்டப் பணம் அறவிடுவதோடு, தமிழகத்தின் வீதிச் சுத்தத்தினைப் பேணும் வகையில் 24 மணி நேர மாநகர, நகர சபைகளின் ஊடாக சுற்றுச் சூழல் சுகாதாரப் பணிகளினை மேம்படுத்துதல்.
(ரோட்டைப் பார்த்தால், நீங்க சோறு போட்டுச் சாப்பிடுற மாதிரிப் பள பளப்பா இருக்குமாம்)

*மக்களின் நலன், சுகாதாரம் முதலியவற்றைக் கருத்திற் கொண்டு தெருவோரங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளையும், அவற்றினை விற்பனை செய்யும் கடைகளையும் சீல் வைத்து மூடுதல். உணவுச் சுகாதாரத்தினைக் கண் காணிக்கும் நோக்கில் சுகாதார அமைச்சின் செயற்பாடுகளை விரிவு படுத்துதல்.

*ஏழை பணக்காரன் என்ற பேதங்களைக் களைய அனைவருக்கும் ஒரு பொதுவான சம்பளத்தினை அடிப்படையாகக் கொண்டு ஊதியத் திட்டத்தினை தமிழக்த்தின் அனைத்துத் தொழிற் துறை மையங்களும் வழங்கும் வண்ணம் அறிமுகப்படுத்துதல். 

*லஞ்சம், ஊழலற்ற கடமையில் கண்ணியமான் அதிகாரிகளை உருவாக்கும் நோக்கில் அதிகாரிகளின் முதுகில் 24 மணி நேரமும் அவர்களைக் கண்காணிக்கும் கமெராக்களைப் பொருத்திக் கண்காணித்தல்.

டிஸ்கி: நேற்றைக்கு ராத்திரி தூங்கம் வரலைப் பாருங்க. ரேடியோவைப் போட்டுப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது 'பச்சை விளக்குப் படத்தில் இடம் பெற்ற ஒளிமயமான எதிர் காலம் என் உள்ளத்தில் தெரிகிறது எனும் பாடலைக் கேட்டவாறு தூங்கி விட்டேன். 

என் கனவில் நான் கண்டவை தான் மேற்படி திட்டங்கள். திடீரென்று பார்த்தால், என் கனவில்; 
‘மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க! எனும் பாடல் வரிகள் கேட்கத் தொடங்குகிறது. புதிய தமிழகம் என்ற அறிவிப்புப் பலகையுடன் மக்கள் பலர் ஜெயலலிதாவை வாழ்த்த, அவா நடை போட்டு வந்தா...

அடுத்த கைது யார்?அலறும் தி.மு.க., பிரமுகர்கள்: அதிரடிக்கு தயாராகும் போலீஸ்

கடந்த ஆட்சியின் போது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி கோவையில் நிலம், சொத்து அபகரிப்பு குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் 12 நபர்களின் பட்டியலை தயாரித்துள்ளனர் போலீசார்.இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க., பிரமுகர்களுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி வரும் போலீசார், விரைவில் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.

"தமிழகத்தில் முந்தைய தி.மு.க., ஆட்சியின்போது மாநிலம் முழுவதும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான தனியார் நிலம், சொத்துகள் ஆளுங்கட்சியினரால் பறிக்கப்பட்டதாகவும், அரசியல் ரீதியான நெருக்கடி காரணமாக போலீசார் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை' என்றும், முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, நிலம் அபகரிப்பு குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் உளவு போலீசார் ரகசிய தகவல்களை சேகரித்து அரசுக்கு அனுப்பி வருகின்றனர். கோவையில் பண்ணை வீட்டுமனை திட்டம் துவக்கி, ஸ்ரீசர்மா என்பவரிடம் பண மோசடியில் ஈடுபட்ட "கிரீன் ஹோம் லேண்ட் ஸ்கேப் (பி) லிமிடெட்' நிறுவன அதிபரும், மாவட்ட தி.மு.க., துணைச் செயலாளருமான ஆனந்தனை, மாநகர குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

நில மோசடி வழக்கில் கோவையில் கைதாகியுள்ள முதல் தி.மு.க., பிரமுகர் இவர் என்பதால், "அடுத்தது யார்?' என்ற பீதியில் உள்ளனர் அக்கட்சியினர்.கைது பட்டியலில் 12 பிரமுகர்கள்: கோவை மாநகரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தனியார் நிலம், சொத்து அபகரிப்பு குற்றங்களில் யார், யாரெல்லாம் ஈடுபட்டனர், அவர்களின் பின்னணி என்ன, சம்பந்தப்பட்ட சொத்துகளின் மதிப்பு எவ்வளவு, என்பது தொடர்பான தகவல்களை போலீசார் திரட்டியுள்ளனர்.

இதில், தி.மு.க., பிரமுகர்கள் மற்றும் மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள், தனி நபர்கள் என 12 பேரின் விபரங்கள் இடம்பெற்றுள்ளன. அமைச்சரின் ஆதரவாளர் எனக்கூறப்படும் "மீன்கடை' என்ற அடைமொழியை பெயருக்கு முன்னால் வைத்திருக்கும் நபர், கைது பட்டியலில் முதலிடத்தில் உள் ளார். கடந்த தி.மு.க., ஆட்சியின் போது சிங்காநல்லூர் ரயில்வே கேட் அருகிலிருந்த தனியாருக்குச் சொந்தமான ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய நிலத்தை இந்நபரின் தலைமையிலான கும்பல் அபகரித்ததாகவும், அந்நிலத்தின் குத்தகைதாரர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டுக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. அப்போதே இது குறித்து போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இக்குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட மேலும் சில புகார்கள் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள மாநகர போலீசார், அடுத்த கைதுக்கான அஸ்திரத்தை கையிலெடுத்துள்ளனர்.

கோவை போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி கூறியதாவது:கோவை மாநகர போலீஸ் எல்லைக்குள் நிலம், சொத்து அபகரிப்பு குற்றங்கள் தொடர்பான சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்திருந்தால், அதுகுறித்து மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிப்பர்; இதுபோன்ற புகார்களை விசாரிக்க, தனி போலீஸ் "டீம்' ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக என்னை சந்தித்து புகார் அளிக்கலாம். அந்த புகார் மனு சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்காக மாநகர குற்றப்பிரிவுக்கு பரிந்துரைக்கப்படும். நிலம், சொத்து அபகரிப்பு தொடர்பான புகார்கள் போலீஸ் ஸ்டேஷன்களில் விசாரிக்கப்பட மாட்டாது. நிலம், சொத்து பறிப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிலர், டெலிபோனில் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கின்றனர். டெலிபோன் தகவலைக் கொண்டு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.இவ்வாறு, போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி தெரிவித்தார்.

கவர்னரின் உறவினரா? கோவை நகரில் வில்லங்கமான சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, எதிர்தரப்பு நபர்களை மிரட்டும் வேலையில் மூன்று பேர் கும்பல், கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. அந்நபர்களில் ஒருவர், தன்னை, "கவர்னரின் உறவினர்' எனக்கூறி போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்பி வந்துள்ளார். தற்போது, பழைய புகார்கள், வழக்குகள் தொடர்பான ஆவணங்களை தூசு தட்டி எடுத்துள்ள போலீசார், இதுகுறித்தும் தங்களது மேலிடத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். உத்தரவு வந்ததும், அடுத்தடுத்து கைது நடவடிக்கை பாயும் என்கின்றனர், அதிகாரிகள்.

கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி நலனுக்காக காளஹஸ்தி கோவிலில் செல்வி சிறப்புப் பூஜை!

நாத்திகத்தின் அடையாளமாக தங்களைக் கூறிக் கொள்வது திமுக தலைவர் கருணாநிதியின் வழக்கம். ஆனால் அவரது குடும்பத்தினரோ கோவில் கோவிலாக வலம் வருவதைத சமீப காலமாக பகிரங்கமாகவே செய்ய ஆரம்பித்துள்ளனர்.

தனது கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார் என்பதால் கோபமடைந்த கருணாநிதி அதை அழிக்கச் செய்தார் ஒரு காலத்தில். ஆத்திகர்களை கடுமையாக சாடுவார். ஆனால் அவரது குடும்பத்தினர் கோவில் கோவிலாக வலம் வருவதையும், குங்குமம் வைத்துக் கொள்வதையும், பூஜைகள் புனஸ்காரங்களில் ஈடுபடுவதையும் தடுக்க மாட்டார், கண்டிக்க மாட்டோர், விமர்சிக்க மாட்டார்.

அதிலும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் உள்ள முக்கியக் கோவில்களுக்கு அடிக்கடி சென்று பூஜைகள் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். கருணாநிதியின் குல தெய்வம் கோவிலுக்குத்தான் அதிக அளவில் சென்றனர். இதைப் பற்றியெல்லாம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தார் கருணாநிதி.

இந்த நிலையில் கருணாநிதி நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டி அவரது மூத்த மகள் செல்வி காளஹஸ்தி கோவிலுக்குப் போய் ராகு கேது சர்ப்ப தோஷ பூஜையை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது தனது சகோதரர் ஸ்டாலின், தங்கை கனிமொழி ஆகியோருக்காகாகவும் இந்த பரிகார பூஜையை நடத்தயுள்ளார் செல்வி.

சென்னையிலிருந்து குடும்பத்தினருடன் காரில் திருப்பதி சென்ற செல்வி அங்கு விஐபி வரிசையில் போய் ஏழுமலையானை வணங்கினார். பின்னர் காளஹஸ்தி கோவிலுக்குப் போனார். அங்கு ராகு கேது சர்ப்ப தோஷ பரிகார பூஜையை செய்தார். செல்வியுடன் அவரது குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டனர்.

பின்னர் வாயுலிங்கேஸ்வரர், ஞான பிரசுனாம்பிகா தாயாருக்கு கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி பெயர்களில் சிறப்பு பூஜை செய்து பயபக்தியுடன் செல்வி உள்ளிட்டோர் சாமி கும்பிட்டனர். பிறகு வேத பண்டிதர்களை சந்தித்து சிறப்பு ஆசியும் பெற்று வெளியே வந்தனர்.

கண்ணே, கனி அமுதே, கனி மொழியே....


மாநிலங்கள் அவை உறுப்பினரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் சிறைவாசம் ஆரம்பித்து ஏறத்தாழ நாற்பது நாட்கள் ஆகிவிட்டன. மகள் சிறைக்கு சென்றதில் இருந்து கட்சியின் உயர்மட்டக் குழுவை கூட்டுகிறார், கவிதைகளை எழுதுகிறார், அறிக்கைளில் அழுகிறார் கருணாநிதி. ‘உங்களுக்கு ஒரு மகள் இருந்து செய்யாத தவறுக்கு அம்மகள் தண்டிக்கப்பட்டால் உங்கள் மனநிலை எந்த நிலையில் இருக்குமோ அதே நிலையில் நான் உள்ளேன்’ என்ற கருணாநிதியின் வார்த்தைகள் இனி பல காலங்கள் மக்கள் மனதில் இருந்து மறைய வாய்ப்பில்லை.
ஏறத்தாழ ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்களையும் தெளிவாக கூறும் கருணாநிதி அவர்களுக்கு பதினான்கு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்களை மறந்திருக்க வாய்ப்பில்லை. 1997 நவம்பரில் நடைபெற்ற கோவை கலவரம் 1998-ல் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தமிழக முஸ்லிம் சமூகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின. அதுவரை தங்களின் நண்பனாக இருந்த கருணாநிதி இவ்வளவும் தூரம் மாறிச் செல்வார் என்று முஸ்லிம்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
அவரது கழுத்தில் ஏறிய மஞ்சள் துண்டின் உண்மையான நிறத்தினை முஸ்லிம்கள் அன்று கண்டுகொண்டனர். பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்களை, குறிப்பாக இளைஞர்களையும் பெண்களையும் அரசாங்கமும், காவல்துறையும் நடத்திய விதங்களை எழுத ஏடுகள் தாங்காது. பேருந்துகள், ரயில்கள், பணியிடங்கள், மேன்சன்கள் என அனைத்து இடங்களிலும் முஸ்லிம்கள் தனிமைபடுத்தப்பட்டு கேவலப்படுத்தப்பட்டனர்.
1998 டிசம்பர் 6யை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே காவல்துறை செய்த கெடுபிடிகளை எவரும் மறப்பதற்கில்லை. இரவோடு இரவாக முஸ்லிம்கள் தங்கியிருக்கும் பணியிடங்களுக்கு சென்று எவ்வித காரணமும் இன்றி அப்பாவிகளை கைது செய்து சென்றனர். மறுநாள் விடிந்த பின்னர் தான், ஒரு கட்டிடத்திற்கு ஒருவர் என்ற கணக்கில் காவல்துறை முஸ்லிம்களை கைது செய்து சென்றுள்ளனர் என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொண்டனர்.
செல்வாக்குமிக்கவர்களும், செல்வந்தர்களும், தாய்ச்சபையாம் முஸ்லிம் லீக்கின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களும் அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து பார்த்தனர், கெஞ்சியும் பார்த்தனர். ‘எதுவும் செய்ய முடியாது, பத்து நாள் கழித்துதான் விடுவிப்போம்’ என்ற பதில்தான் கிடைத்தது.
குண்டுவெடிப்பை காரணம் காட்டி அப்பாவிகளை சிறையில் வைத்து அழகு பார்த்தீர்கள். பெற்றோர்களின் மரணத்திற்கும், மனைவியை பார்ப்பதற்கும்…ஏன் திருமணத்திற்கு கூட பரோலில் தானே வந்து சென்றார்கள் அந்த அப்பாவிகள். அன்று அவர்களின் குடும்பத்தினரும் இதே வார்த்தைகளை தானே சொல்லியிருப்பார்கள். நாற்பது நாட்கள் மகன் ஆதித்யாவை பார்க்க முடியாமல் கனிமொழி ஏங்குவதாக இன்று உங்கள் பரிவாரங்கள் கூறுகின்றனர்.
எத்தனையோ பெற்றோர்கள் பதினான்கு ஆண்டுகளாக இதே சோகத்தை அனுபவித்து வருகின்றனர் என்பது இப்போதாவது புரிகிறதா? உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறையில் மரணித்தவர்களின் குடும்பத்தினர் நிலை இப்போதாவது புரிகிறதா?
2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் உங்களை சிறையில் அடைத்தார். இரவில் லுங்கியுடனும் காலில் செருப்பில்லாமலும் அழைத்து செல்லப்பட்டீர்கள். அனைவரும் உங்களுக்காக பரிதவித்தனர். தவறுகளை உணர்ந்து நீதியை நிலைநாட்டுவீர்கள் என்று அனைவரும் நம்பி 2006-ல் உங்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி அழகு பார்த்தார்கள். ஆனால் என்ன நடந்தது…அண்ணா நூற்றாண்டு விழா,செம்மொழி மாநாடு என பல நிகழ்வுகள் வந்த போது, இப்பொழுதாவது அப்பாவிகள் விடுவிக்கப்படுவார்களா? என ஏங்கிய பொழுது மீண்டும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.
கோவையில் வெடிகுண்டு நாடகம் நடத்திய உளவுத்துறையை சார்ந்த ரத்தின சபாபதிக்கு தண்டனையை வழங்காமல் பதவியை வழங்கி அழகு பார்த்தீர்கள். நீங்கள் இன்னும் பாடம் படிக்கவில்லை என்பதை தான் இச்சம்பவங்கள் உணர்த்தின.
உங்கள் குடும்பத்தினர் லட்சத்திலும் கோடியிலும் அடித்த ஊழல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளன. அதற்காக அறுவடையும் ஆரம்பித்துள்ளது. தற்போது அழுது புலம்புகிறீர்கள். காலம் மிகவும் வேகமாக சுழல்கிறது. எவரும் அதே நிலையில் நிலைத்திருப்பதில்லை. இந்த இடத்தில் ஒரு சிறிய நினைவூட்டல், உங்களுக்கு.
உலகத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் ஒரு அருமையான பொன்மொழியை கூறினார்கள். ‘அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைகளுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். ஏனென்றால் அவனுக்கும் படைத்தவனுக்கும் மத்தியில் திரைகள் ஏதுமில்லை’. படைத்தவன் உங்கள் ஆயுளை நீட்டியிருப்பது செம்மொழி மாநாடு நடத்துவதற்கும் கலைப்பணி செய்வதற்கும் அல்ல என்று நினைக்கிறோம். தவறுகளை களைந்து புதிய வாழ்க்கையை அமைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
படிப்பினை கருணாநிதிக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் தான்.

Tuesday, June 28, 2011

ஊழல் இல்லாத இந்தியாவை நம்மால் உருவாக்க முடியும்: முன்னாள் ஜனாதிபதி கலாம்

ஊழல் இல்லாத இந்தியாவை நம்மால் உருவாக்க முடியும்,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.
ஒவ்வொரு மாணவர்களும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும்.அவர்களுக்குதான் உலக வரலாற்று புத்தகத்தில் தனி இடம் ஒதுக்கப்படும்.இதற்காக உயர்ந்த குறிக்கோள், துறை சார்ந்த அறிவை வளர்த்தல், கடின உழைப்பு,விடா முயற்சி ஆகிய பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்னிய முதலீட்டில் கிராம சாலைகள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம்.இன்று ஆண்களுக்கு நிகராக விண்வெளி ஆராய்ச்சியில் 30சதவீத பெண்கள் பணிபுரிகின்றனர்.நாம் சூரியன்,காற்று,கடல் அலைகளில் இருந்து எடுக்கப்படும் சக்தியை முழுமையாக பயன்படுத்த வேண்டும். அணு தொழில் நுட்பத்தை குறை சொல்லாமல், அணு மின் நிலையங்களை பாதுகாப்பான முறையில் அமைப்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.இன்று 170 மில்லியன் எக்டேர் நிலத்தில் 235 மில்லியன் டன் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கிறோம்.


2020ல் விளை நிலத்தின் அளவு 100 மில்லியன் எக்டேராக குறையும். உணவுப் பொருட்களின் தேவை இரு மடங்கு அதிகரிக்கும். இதற்கு உயர்ந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி விளைச்சலை பெருக்குவது தான் தீர்வாகும். மாணவர்களுக்கு ஆரம்ப கல்வியை நன்கு கற்பித்தால் தான் உயர் கல்வியில் சாதிக்க முடியும்.இதற்கு ஏற்றாற் போல் பாடத்திட்டத்தையும் , ஆசிரியர்களையும் தயார் செய்ய வேண்டும்.இந்தியாவில் 200 மில்லியன் குடும்பங்களில் 80 மில்லியன் குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் ஊழலில் ஈடுபடுகின்றனர். இவர்களை மாணவர்கள் அன்பால் மாற்றலாம்.இதன் முலம் ஊழல் இல்லாத இந்தியாவை நம்மால் உருவாக்க முடியும், என்றார்.

தமிழுக்கும் அமுதென்று பேர்


தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
- பாரதிதாசன்

அதுவும் தங்கள் தொழிலுக்கு சாதமாக இருக்கும் பதவி வேண்டும்.

குற்றச்சாட்டே சாட்சியானது



ஜீன் 30ந் தேதி. 2001. அப்போது தமிழகத்து முதலமைச்சர் ஜெயலலிதா. அன்று தான் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டார். அந்த கைது சம்பவத்தை ஒரு அனுதாப அலையாக மாற்றிக் காட்டியது சன் டிவி.

தமிழகமே கொந்தளித்துவிட்ட நிலைதான். அப்போது நான் ஜெயா டிவியில் இருந்தேன். நானும் `தராசு' ஆசிரியர் ஷ்யாம் அவர்களும் இந்த கைது சம்பவத்தைப் பற்றி பேசினோம்.

நான் பேசியது இதுதான். ` சன் டிவி தன் ஜால வித்தைகளைக் காட்டி,அதன் உரிமையாளர் கலாநிதி மாறன் தாத்தாவிற்கு தன் நன்றிக் கடனை செலுத்தியிருக்கிறார். சன் டிவி என்ன திருக்குவளையில் நிலத்தை விற்று கொண்டு வந்த பணத்தில் துவங்கப்பட்டதா என்ன ? திமுக தலைவர் கட்சிக்கு நிதி வேண்டுமென்று முரசொலியில் கடிதம் எழதுவார். உடனே விசுவாச கழக உடன்பிறப்புக்கள் துண்டேந்தி எட்டணாவும் ஒரு ரூபாயுமாக பல லட்சங்களை திரட்டி கட்சிக்கு நிதி சேர்ப்பார்கள். அப்படி சேர்ந்த நிதியிலிருந்து கட்டப்பட்டதுதான் அண்ணா அறிவாலயம். பேரன் மாறன் சன் டிவி துவங்க பணம் தேவைப்பட்டது. அப்போது கட்சி நிதியிலிருந்த 8 கோடியை பணயமாக வங்கியில் கொடுத்து கடன் வாங்கி துவங்கப்பட்டதுதான் சன் டிவி. தாத்தா அறிவாலயத்தின் மாடியையே பேரனுக்கு `வாடகை'க்கு கொடுத்தார். அது என்ன வாடகை என்பது தாத்தாவுக்கும், முரசொலி மாறனுக்கும், பேரனுக்கு தான் தெரியும்.

அப்படி உருவாக்கப்பட்ட சன் டிவி துவங்கியவுடன் அதன் அதிபர் கலாநிதி மாறன் போட்ட முதல் உத்தரவே கீழே உள்ள கட்சி கரை வேட்டிகள் மாடிக்குள் நுழையக் கூடாது என்பதுதான். எந்த பேரன்களுக்காக கலைஞர் இதையெல்லாம் செய்தாரோ அதே பேரன்களால்தான் அவரது குடும்பத்திற்கே ஒரு நாள் ஆபத்தாக முடியப்போகிறது.'

இந்த பேட்டி ஜெயா டிவியில் ஜீன் 30 துவங்கி அடுத்த பல நாட்கள் ஒளிபரப்பினார்கள்.
அந்தப் பேரன்களால் வந்த ஆபத்துதான் 2007ல் நடந்த மதுரை தினகரன் எரிப்பு சம்பவம். அதற்கு பிறகு குடும்பம் பிரிந்ததும், பிறகு சேர்ந்ததும், அதற்காக கலைஞர் கண்கள் பனித்து, நெஞ்சம் இனித்த கதையெல்லாம் நாடே அறியும்.

கட்சிக்காரன் பணத்தில் தொலைக்காட்சியை துவங்கிவிட்டு அந்தக் கட்சிக்காரனையே உள்ளே அனுமதிக்கவில்லை என்பதை நான் அன்று ஒரு குற்றச்சாட்டாக சொன்னேன். அதுவே இன்று அவர்களுக்கு ஒரு சாட்சியாகிவிட்டது. 31ந்தேதி டைம்ஸ் நெள் தொலைக்காட்சியில் அலைக்கற்றை ஊழலில் தயாநிதி மாறனின் அத்துமீறலைப் பற்றி ஒரு விவாதம் நடத்தினார்கள்.

அதில் மாறன் சகோதரர்களின் ஊதுகுழலாக பேசினார் மூத்த பத்திரிகையாளர் ஆர். ரங்கராஜ்.`சன் டிவிக்கும் திமுகவிற்கும் எந்த தொடர்புமில்லை. கட்சிக்காரர்கள் மாடியிலுள்ள தங்கள் அலுவலகத்திற்கே வரக்கூடாது என்று உத்தரவு போட்டவர் கலாநிதி மாறன்' என்றார்.

கட்சி வேண்டும். அதில் தன் சகோதரர் தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவி வேண்டும். அதுவும் தங்கள் தொழிலுக்கு சாதமாக இருக்கும் பதவி வேண்டும். அதன் மூலம் ஒரு தொலைபேசி இணைப்பகத்தையே தங்கள் தொழிலுக்காக மட்டுமே உருவாக்கிக் கொள்ளவும் வேண்டும். ஆனால் ஊழல் என்று வந்தால் சன் டிவி நடுநிலையான தொலைக்காட்சி, அதற்கு திமுகவிற்கு எந்த தொடர்புமில்லை என்று சொல்வதுதான் அவர்களுடைய கார்பரேட் தர்மம்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் உடன்பிறப்புக்கள் அடுத்த ஐந்து வருடத்திற்காக காத்துக்கொண்டு, `சூரிய சின்னத்தை பாத்து போடுங்கம்மா ஒட்டு' என்று கோஷ்ம் போட்டு திரிய வேண்டியதுதான். நீ உழைப்பது உன் கட்சிக்காக அல்ல. கட்சித்தலைவரின் குடும்ப தொழிலுக்கு நீ கூலி பெறாத ஒரு தொழிலாளி என்பது எப்போது அவர்களுக்கு புரியும். தலைவர் குடும்பத்து உயர்மட்டக்குழ் திஹார் சிறையில் கூடும்போது உடன்பிறப்புகளுக்கு புரியவருமோ?

தமிழில் மொழிபெயர்ப்பு கருவி..

நண்பர்களே.. தமிழ் மொழி மட்டுமே தெரிந்துக்கொண்டு உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் தற்போது நாம் கடிதங்கள் எழுதலாம்.... அதேப்போன்று, பிற மொழிகளில் உள்ள கடிதத்தை தமிழுக்கு மாற்றி படிக்கலாம்.
ஆம். நிச்சயமாக மேற்சொன்னவாறு செய்ய முடியும் நம்மால்.
கூகுள் இணையதளம் வெறும் இணையதளங்களை தேடித்தரும் சேவையை மட்டும் செய்யாமல், உலகை மொழி பாகுபாடின்றி ஒன்றிணைக்க முயற்சி செய்திருக்கிறது.
தங்கள் தாய்மொழியிலேயே உலகின் பல்வேறு மொழிக்காரர்களுடன் உறவை மேம்படுத்த உதவும் வகையில் மொழி கருவிகளை நமக்கு படைத்திருக்கிறது கூகிள்.
குறிப்பாக தமிழில் உள்ள கருவிகள் என்று பார்த்தால்..
செய்திகள், மின்ன்ஞ்சல், தட்டச்சு கருவி, மொழிப்பெயர்ப்பு, தேடல், காணொளி, படங்கள், ஆவணம், என ஏராளமான சேவைகள் வழங்குகிறது
தற்போது தமிழுலகிற்கு கூகுள் வழங்கியுள்ள சேவையானது கூகுள் மொழிமாற்றி ஆகும். Google Translate.
இந்த கருவி முதற்கட்டமாக சோதனை அடிப்படையிலேயே வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சேவையை பெற நாம் http://translate.google.com/ என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
இப்போது, கீழ்காணும் பக்கம் தோன்றும்.


இப்போது, (மூலம்) From என்பதில் மொழி மாற்றம் செய்ய வேண்டிய வாக்கியத்தின் மொழியையும், (பெறுநர்) TO என்பதில் மாற்ற வேண்டிய மொழியையும் தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் மொழிப்பெயர் (Translate) என்ற பொத்தானை சொடுக்கினால் அருகில் மொழி பெயர்க்கப்பட்ட வாக்கியம் தோன்றும். 

இந்த வாக்கியங்களில் பிழைகள் தோன்றலாம். அதனை சரி செய்ய கூகுள் நமக்கு வசதிகளை செய்து தருகிறது...
அதன் மூலம், நாமே பிழை திருத்திவிடலாம்.
இதனால் அடுத்த முறை பிழை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
ஆனால், ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் ஓரளவு சரியாக மொழிபெயர்க்கப்படுகிறது.
இந்த வசதியை முழுமையாக பெற நமக்கு வெகு நாட்கள் எடுக்கலாம். ஆனால் நாமெல்லோரும் ஒத்துழைத்தால் விரைவில் முழுமையான மொழி பெயர்ப்பு கருவி உருவாகிவிடும்.
நாம் வெறும் வாக்கியங்களை வைத்து மொழி பெயர்க்காமல், ஒரு இணையதளத்தையோ அல்லது ஆவணத்தையோ மொழி பெயர்க்க முடியும்...
உதாரணமாக... உரைப்பெட்டியில் இணையதள முகவரியை இட்டால், அந்த தளம் எளிதாக மொழி மாற்றமாகிவிடும்..





கூடுதலாக மொழி மாற்றம் செய்யப்பட்ட வாக்கியங்கள் நமக்கு ஒலி வடிவிலும் கிடைக்கிறது.
பொதுவாக ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே கையாளும் நிலையிலிருந்து சாதாரணமாக வெறும் தாய்மொழியை தெரிந்தாலே போதும் கணினி கற்று, கையாளவும் செய்யலாம் என்ற நிலை தற்போது வந்துள்ளது.
இதுப்போன்ற மொழி கருவிகள் தகவல் தொழில்நுட்பம் மூலம் பெருகினால், தகவல் தொடர்பு எளிதாகிவிடும் என்பது திண்ணம்.

குறிப்புகள்:
1.       1. பொதுவாக ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்பு கருவி என்பது எளிமையானதாக அமைந்துவிடும். காரணம், வாக்கிய அமைப்புகளும், பொருளும் வேறுபடுமே ஒழிய எழுத்துகள் ஒரே மாதிரியானதாக தான்  இருக்கும்..
2.       கூகுள் இதுவரை 63 மொழிகளில் மொழி பெயர்க்க கூடிய அளவிற்கு சொல்வளம் கொண்டுள்ளது. அதில் தமிழ், இந்தி, உட்பட 6 இந்திய மொழிகளும் அடக்கம்.
3. கணினி துறையில் Artificial Intelligence (செயற்கை நுண்ணறிவு) பிரிவின் கீழ் வரும் Natural Language Processing ( இயற்கை மொழி செயலாக்கம்) என்பது மனிதர்கள் பேசும் மொழியிலேயே கணினியானது சமிக்ஞைகளை ஏற்று செயல்படக்கூடிய தன்மை பற்றியதாகும். இந்த இயற்கை மொழி செயலாக்கத்தின் கீழ் வருவது தான் Machine Translation. இது குறித்த ஆராய்ச்சிகள் பல்கலைக்கழகங்கள் மேற்கொண்டுள்ளன. ஆனால், நமது கல்லூரிகள் மாணவர்களுக்கு Artificial Intelligence குறித்த போதிய அறிவுறுத்தலை தருவதில்லை. இந்த துறை சவாலானதும், தேவையானதுமாகும்.
பொறியியலில் ஆராய்ச்சிக்கான ஆர்வத்தை மாணவர்கள் பெற இதுப்போன்ற திட்டங்களை, திட்டப்பணிகளை எடுத்து செயல்படுத்தவேண்டும். 
கணினி தமிழ் துறை இதற்கான உதவிகளை அதிகரிக்க வேண்டும்.

என் மகள் கனிமொழி ஒரு மலர்!!---மற்றவர்கள் எல்லாம் களிமண்ணா

திருவாரூரில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் கூட்டத்தில் கலைஞர் கலந்துகொண்டு பேசினார்.

அவர், ’ ’என் மகள் கனிமொழி இன்று மத்திய அரசின் உத்தரவினாலோ,  அலட்சியத்தாலோ சிறையில் இருக்கிறார்.

வழக்கு நடந்து கொண்டிருப்பதால் நான் வழக்கின் ஆழத்திற்கு செல்லவில்லை.  கனிமொழி செய்த ஒரு தவறு கலைஞர் டிவியில் ஒரு பங்குதாரராக இருந்ததுதான்.

பங்குதாரரை அந்த நிறுவனத்திலே ஏற்பட்ட, ஒரு கோளாறுக்காக பங்குதாரரை பாதிக்கின்ற செயலில் ஈடுபடமுடியுமா என்ற வாதத்தை நம்முடையை மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துக்கேட்டார். அதற்கு இன்னும் பதில் வரவில்லை.

இப்பொழுது கனிமொழி சிறையிலே  வாடிக்கொண்டிருக்கிறார்.  திகார் சிறைச்சாலை எப்படிப்பட்டது என்பதை சொல்கிறேன். ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில்.  அப்படிப்பட்ட இடத்தில்தான் இருக்கிறார் என் மகள் கனிமொழி.

  உங்கள் வசனங்களை கண்டு ஏமாந்த காலங்கள் எல்லாம் மலையேறி போயிவிட்டது. சட்டம் தன் கடமையை செய்யும் இந்த வசனம் நீங்கள் ஆட்சி கட்டில் இருக்கும் போது பல சந்தர்ப்பங்களில் சொன்னது தான்.  அதுபோலத்தான் இப்பொழுதும் சட்டம் தன் கடமையை செய்கிறது.

உங்கள் மகள் கனிமொழி மலர் மற்றவர்கள் எல்லாம் களிமண்ணா. நீங்கள் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் இருந்து அரசியலுக்குள் வரும் போது கஞ்சிக்கு வக்கத்தவர். எப்படி இவ்வளவு சொத்துக்கும் அதிபதி ஆக முடிந்தது.
மற்ற கொள்ளைக்காரன் எல்லாம் வெளியே இருக்கான் என் குடும்பத்தினர் மீது மட்டும் ஏன் நடவடிக்கை இது உங்கள் கேள்வியாக இருக்குமே ஆனால் அதை நாங்களும் ஒத்துக்கொள்கிறோம்.

அதை விட்டு விட்டு கொள்ளை அடிக்கவில்லை என்று வீர வசனம் எல்லாம் பேச வேண்டாம். பலநாள் கள்ளன் ஒரு நாள் பிடிபடுவான். ஒழுங்கான ஆட்சி வந்து எல்லா கொள்ளைக்காரர்களையும் பிடிக்கணும் என்பதுதான் மக்களின் விருப்பம்.


அமைச்சரவை மாற்றத்தின்போது தயாநிதி மாறன் பதவி பறிப்பு?


ழல் புகார்களில் சிக்கியுள்ள ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் பதவி, அமைச்சரவை மாற்றியமைக்கப்படும்போது பறிக்கப்படும் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஏர்செல் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டதாக பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் தயாநிதி மாறன். மேலும் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை அவர் தவறாக பயன்படுத்தியதாகவும் பழைய சர்ச்சை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.


இதைத் தொடர்ந்து தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அவரை பிரதமர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் ஏர்செல் விவகாரம் தொடர்பாக அதன் முன்னாள் தலைவர் சிவசங்கரன் கொடுத்துள்ள சாட்சியத்தின் அடிப்படையில் எப்ஐஆரைத் தாக்கல் செய்ய சிபிஐ தயாராகி விட்டது. இதற்கான அனுமதியை பிரதமரிடமிருந்து அது எதிர்பார்த்துள்ளது. பிரதமருக்கும் இதுதொடர்பாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தயாநிதி மாறன் பதவியைப் பறிக்க பிரதமரும், காங்கிரஸும் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த அமைச்சரவை மாற்றத்தின்போது தயாநிதி மாறன் பதவி பறிக்கப்படும் என்று டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

ஏற்கனவே பெரும் பெரும் ஊழல்களில் சிக்கி ஐக்கிய முற்போக்குக்கூட்டணி உடைந்த கப்பலாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தயாநிதி மாறன் மீதும் ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் அது மக்கள் மத்தியில் கட்சி மற்றும் ஆட்சியின் பெயரை மேலும் நாறடித்து விடும் என்று காங்கிரஸ் கட்சியும் அச்சத்தில் உள்ளதாக தெரிகிறது. எனவே தயாநிதி மாறனை பதவியிலிருந்து நீக்க காங்கிரஸ் கட்சியும் ஆர்வமாக உள்ளதாக தெரிகிறது.

முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி ஆகியோரைத் தொடர்ந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் சிக்கியிருக்கும் மூன்றாவது திமுக தலைவர் தயாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்களில் ஏன் இந்த கண்ணீர் அது யாராலே..? – கருணாநிதி

தன் மகள் கனிமொழியை, தி.மு.க., தலைவர் கருணாநிதி டில்லி, திகார் சிறையில் சந்தித்து, கண்ணீர் மல்க ஆறுதல் தெரிவித்தார். கனிமொழியை கண்டதும், தன் கறுப்புக் கண்ணாடியை கழற்றிவிட்டு பார்த்தபோது, கண்ணிலிருந்து, தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது. கனிமொழியை தனியாக 15 நிமிடங்கள் சந்தித்தார் கருணாநிதி. ராஜா, சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார். 


குல்குஸ்மா :

பழம் அதிகமா பழுத்தால் அழுகிவிடும் .. அதிலும் நீங்கள் பழுத்த பழம் அல்லவா ஊழலில் அதுனால் அழுது விட்டீர்களோ என்னவோ....


காவிரி ஆறே கஞ்சியா ஆனாலும் நாய்க்கு நக்கித்தான் குடிக்கனும். அதிமாதிரி தான் யாராகா இருந்தாலும் தன் மகள் சிறையில் இருப்பதை பார்க்கும் பொழுது கண்களில் ஏற்படும் கண்ணீர் இயற்கையானதே.. இதை ஒரு செய்தியாக போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும்.  தன் மகள் சந்திப்பிற்கு பிறகு பத்திரிக்கைகளுக்கு “கனிமொழிக்கு உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார். சரத்குமார், சிறையில் பலவீனமாக காணப்பட்டார். கனிமொழியை மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் அடைத்துள்ளனர் “ என்று ஒரு பேட்டி கொடுத்தீர்களே இப்பொழுது தான் உங்களுக்கு இது மனிதாபிமானமற்ற செயலாக தெரிகிறதா..?? கோவை குண்டு வெடிப்பு வழக்கில் என் சமுதாய சகோதரர்களை விசாரணை கைதிகளாகவே பல வருடம் வைத்தீர்களே அப்பாழுது அவர்கள் குடும்பம் வடித்த கண்ணீரை பார்க்கும் பொழுது உங்களுக்கு மனிதாபிமானமற்ற செயலாக தெரியவில்லையா..?. இலங்கையில் நம் தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவிப்பதை கண்டும் கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்துவிட்டு பிறகு உண்ணாவிரதம் இருப்பதாக போலி நாடகம் ஒன்று நடத்தினீர்களே அப்பொழுது எங்கே போனது உங்கள் மனிதாபிமானம்

கடைசியா ஒன்னு சொல்றேன் “ என்னதான் பத்து LIFE BOY  சோப்பு குளிச்சாலும் காக்கை வெள்ளை ஆவாது அது மாதிரி தான் இனி நீங்க என்னதான் அழுது புரண்டாலும் இனி இந்த ஊர் உங்கள நம்பாது “.

புதிய அமைச்சராக முகம்மது ஜான் நியமனம்..


2011062711.jpg தமிழக அமைச்சரவையில் இன்று சிறிய அளவிலான மாற்ற் மேற்கொள்ளபப்ட்டது. புதிய அமைச்சராக ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகம்மது ஜான் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் புதன்கிழமை பதவியேற்கிறார்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் மரியம் பிச்சை. ஆனால் எம்.எல்.ஏவாக பதவியேற்பதற்கு முன்பாகவே அவர் சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.

இந்த நிலையில் தற்போது அவரது இலாகாவுக்கு புதிய அமைச்சரை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.
ராணிப்பேட்டையிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முகம்மது ஜான் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக செயல்படுவார். புதன்கிழமையன்று இவர் பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

இலாகாக்கள் மாற்றம்

இதேபோல வேறு சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளன.

மு.சி.சம்பத் வசம் இருந்த ஊரக வளர்ச்சித்துறை சி.சணமுகவேலுவுக்குத் தரப்பட்டுள்ளது. எஸ்.பி. வேலுமணி வகித்து வந்த திட்ட அமலாக்கம் சம்பத்திடம் தரப்பட்டுள்ளது.

சண்முகவேலுவிடம் இருந்த தொழில்துறை எஸ்.பி.வேலுமணிக்கு தரப்பட்டுள்ளது.

கால்நடை மற்றும் பால்வளத்துறை கருப்பசாமியிடமிருந்து என்.ஆர்.சிவபதிக்கும், சிவபதியிடமிருந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை கருப்பசாமிக்கும் தரப்பட்டுள்ளது.

டி.எம்.சின்னையா சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அமைச்சராக நீடிப்பார். மரியம் பிச்சை வகித்து வந்த துறைகளை இவர்தான் இத்தனை நாட்களாக கூடுதல் பொறுப்பாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கேஸ் விலை குறைகிறது...


தமிழகத்தில் கேஸ் விலை குறைகிறது: முதல்வர் ஜெயலலிதாமத்திய அரசு கேஸ் விலையை உயர்த்தியது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் கேஸ் விலையை குறைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
 
இதன் பயனாக ஜூலை 1-ம் தேதி முதல்  தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் மீதான மதிப்பு கூட்டு வரி 4 சதவீததை நீக்க   முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
இந்த வரி குறைப்பு மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் விலை உயர்விற்கு பின்  கேஸ் சிலிண்டர் விலை ரூ 402.35 ஆக விற்கப்பட்டது தமிழக அரசு  கேஸ் சிலிண்டர் விலை குறைப்புக்கு பிறகு  கேஸ் சிலிண்டர் ஒன்றிற்கு ரூ 387.62  ஆக இருக்கும். இதனால் சிலிண்டர்
 
ஒன்றிற்கு 14.73 பைசா குறைகிறது.

தேர்தலில் மோசடி செய்து சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார்

காங்கிரஸ் கட்சிக்கு இனி ஆதரவு அளிக்க மாட்டேன்: ஜெயலலிதா

இதை நீங்கள் 18 வது நபராக வாசிக்கிறீர்கள்
தேசிய அரசியலில் நுழையும் எண்ணமில்லை எனவும், தேசிய அளவில் 3வது அணி அமையுமா என்பதை எதிர்காலம் என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த முதல்வர் ஜெயலலிதா காங்கிரசுக்கு ஆதரவளிப்பேன் என கடந்த 2010ம் ஆண்டு கூறினேன். 2010க்கு பிறகு சூழ்நிலைகள் மாறிவிட்டன.
தி.மு.க.வுடன் காங்கிரஸ் தொடர்ந்து கூட்டணியில் உள்ளது. என்னுடைய ஆதரவை ஏன் ஏற்கவில்லை என காங்கிரஸ் கட்சியிடம் தான் கேட்க வேண்டும். ஆதரவளிப்பது என்பது அப்போது எடுக்கப்பட்ட முடிவு.
தற்போது அது போன்ற சூழல் நிலவவில்லை. ஊழல்வாதிகளுக்கு எதிராக பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக பிரதமரின் நடவடிக்கை தேவை.
தயாநிதி பதவி விலக வேண்டும் என நான் கூறியுள்ளேன். தயாநிதி பதவி நீக்கப்படுவாரா என பிரதமர் தான் விளக்கமளிக்க வேண்டும்.
தேர்தலில் மோசடி செய்து சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார். சிதம்பரம் தேர்தலில் தோல்வியடைந்தது தான் உண்மை. அடுத்த தேர்தலுக்குள் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படலாம். இது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது.
அரசியலில் எதுவும் நிகழலாம். மாற்றம் என்பதே அரசியலில் சூத்திரமாக உள்ளது. அரசியலில் ஒருவர் நெகிழ்ந்து கொடுக்க வேண்டும். அரசியலில் இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படும் போது அதனை சமாளிக்கும் திறன் எங்களுக்கு உள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர். 3வது அணி அமையும் என்பதை எதிர்காலம் என்ன சொல்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்க தேவையில்லை. ஒரு கட்சி ஆட்சி என்பது முடிந்து விட்டது.
கூட்டணி கட்சிகள் இல்லாமல் எந்த கட்சியும் நீண்ட நாட்கள் ஆட்சி நடத்த முடியாது. தேசிய அரசியலில் நுழையும் எண்ணமில்லை தேசிய அரசியல் குறித்த குறிக்கோள் எதுவும் இல்லை. எதிர்கால இந்தியா குறித்த எண்ணம் எனக்கு உண்டு. என்னை பற்றி இல்லை என ஜெயலலிதா கூறினார்
.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...