Tuesday, June 14, 2011

கருணாநிதியின் மாத வருமானம் வெளியிட்ட ஜெயலலிதா

இலவச கலர் "டிவி' வழங்குவதற்காக 7.48 லட்சம் "டிவி'கள் சப்ளை செய்வதற்கான ஆர்டர் ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ள 1.27 லட்சம் கலர் "டிவி'க்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக் கூடங்கள், ஊராட்சிகள், துணை சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கு வழங்கப்படும்,'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். "ஒரு ஆண்டுக்கு 4,000 கோடி என்றால், ஐந்து ஆண்டுகளில், கேபிள் கட்டணம் மூலம் கருணாநிதி குடும்பம் பெற்றது, 20 ஆயிரம் கோடி ரூபாய்' என்ற திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டார்.

 இந்த கலர் "டிவி'யை பார்க்க கட்டணம் பெற்றது, கேபிள் தொழிலில் கோலேச்சி இருக்கும் கருணாநிதியின் பேரன்கள், கலாநிதி, தயாநிதி, துரை தயாநிதி போன்றவர்கள் தான். கருணாநிதியின் குடும்பத்துக்கு கேபிள் கட்டணமாக, ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் மக்கள் செலுத்தினர்.மக்கள் வரிப்பணத்தில், 3,687 கோடி செலவழித்து, ஆண்டுக்கு 4,000 கோடி தனது குடும்பம் பெற வழி செய்துவிட்டார். ஒரு ஆண்டுக்கு 4,000 கோடி என்றால், ஐந்து ஆண்டுகளில், கேபிள் கட்டணம் மூலம் அந்த குடும்பம் பெற்றது 20 ஆயிரம் கோடி ரூபாய். எனவே, கலர் "டிவி' வழங்கும் திட்டம், சொந்த நலனுக்காக தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என ஆணித்தரமாக சொல்வேன்.

சபாஷ் மேடம்....பல தனியார் நிறுவன்ங்கள்,சின்ன சின்ன ஃபைனான்ஸ் அலுவலகங்களில் முடிவெட்டும் சலூன் கடைகள்,பல லாட்ஜ்களில் கூட இலவச தொலைக்காட்சி இருக்கிறது இதை எங்கள் ஊரிலேயே நிறைய பார்க்கிறேன்..அப்போ தமிழ்நாடு பூரா எவ்ளோ இருக்கும்..வெளி மாநிலங்களுக்கு எவ்வளவு போயிருக்கும்..இப்படி மக்கள் பணம் வீணா போனா தமிழ்நாடு அரசு கடன் சுமையில சிக்கி தவிக்காம என்னவாகும்..?
-------------------------------------------

காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையான "சந்தேஷில்' நேற்று எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலால், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் இந்த மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளன.கூட்டணிக் கட்சிகளின் தவறுகளால், தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தன் ஓட்டு வங்கியை இழப்பது சரியல்ல. அதனால், இந்த மாநிலங்களில் கூட்டணி தொடர்பான கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்து, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக சட்டசபை தேர்தலில் ஓட்டளித்துள்ளனர்.

பூனை மெதுவா வெளியே வருது..காங்கிரஸ் செய்தி பத்திரிக்கையில் இந்த செய்தி வருதுன்னா தி.மு.க வை கழட்டிவிட காங்கிரஸ் ரெடி ஆகிடுச்சின்னு அர்த்தம்..இப்ப தயாநிதியும் மாட்டப்போவதால் தி.மு.க மந்திரிகள் ஊழல் வழக்குகளில் மாட்டி காங்கிரஸ் பெயரும் வட மாநிலங்களில் நாறிவிட்டது....இதனால் சமயம் பார்த்த காங்கிரஸ் தன் பத்திரிக்கை செய்தி மூலம் வாலை நீட்டியிருக்கிறது...இன்னும் சில நாட்களில் தலையும் நீட்டும்...உள்ளாட்சி தேர்தல் இன்னும் மூணு மாசத்துல வருதே!!
-------------------------------
உலகம் முழுவதும் தமிழர்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு பெருகுகிறது...நல்ல இமேஜ் உருவாகிவிட்டது...இலங்கை மீத் பொருளாதார தடை விதிக்க வேண்டும்....ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்...என்ற தீர்மானங்கள் பெரும் வரவேற்பை பெற்று தந்திருக்கின்றன...

இலங்கை மீது பொருளாதார தடை கூடாது..அது அங்குள்ள தமிழர்களை பாதிக்கும் என பேசிய கம்யூனிஸ்டுகளுக்கும் உலக தமிழர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்..இலங்கைக்கு உதவினால் அது இலங்கை தமிழர்களுக்கு சென்று சேருவதே இல்லை..தமிழக அரசு அனுப்பிய நிவாரண பொருட்கள் முறையாக போய் சேர்ந்ததா..?அப்புறம் எதுக்கு அவங்களுக்கு தண்டனை தரக்கூடது என்கிறார்கள்..
-----------------------------------------------------
முந்தைய அதிமுக ஆட்சியில், வடசென்னை அருகே வல்லூரில் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையமும், தூத்துக்குடியில் அதே அளவு திறன் கொண்ட அனல் மின் நிலையமும் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 
ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் 95 மெகாவாட் திறன் கொண்ட எரிவாயு சுழலி மின் நிலையமும், 500 மெகாவாட் திறன் கொண்ட குந்தா நீரேற்று மின் நிலையம் அமைப்பதற்கான திட்டமும் தொடங்கப்பட்டது.

 இந்தத் திட்டங்களை திமுக அரசு தொடர்ந்திருந்தால் தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டை தவிர்த்திருக்க முடியும். மின் உற்பத்தி நிலையங்களை முந்தைய திமுக அரசு சரிவர நிர்வகிக்கவில்லை. இதனால் மின் உற்பத்தி இழப்பு ஏற்பட்டது

மூன்று மணி நேர மின்வெட்டு இரண்டு மணி நேரமாக குறைந்தால் தமிழகத்தில் உற்பத்தி திறன் அதிகரிக்கும்..சிறு தொலில் நடத்துவோருக்கு இது இனிப்பு செய்திதான்..கோவை,திருப்பூரில் இந்த ஒரு மணி நேரம் பல பிரச்சனைகளை தீர்க்கும்!!.

------------------------------------
ஊழலுக்கு எதிராக வரும் ஜூன் 23 முதல் 26 வரை நாடு தழுவிய அளவில் பாஜக சார்பில் போராட்டங்கள் நடைபெறும். நாடு முழுவதும் 100 இடங்களில் நடைபெறும் இந்த போராட்டங்களில் பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள்.

   
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அமைச்சர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய வேண்டும். அப்போதுதான் உண்மைகள் வெளிவரும்.

மீண்டும் ஒரு ரத யாத்திரை புறப்பட்டால் நிச்சயம் பாரதீய ஜனதா செல்வாக்கு உயரும்..அடுத்த முறை ஆட்சியை பிடிக்க உதவும்..ஊழலுக்கு எதிரான கடும் சட்டங்களை காங்கிரசும் போடும்..!!
தயாநிதி தப்பிக்க இனி வாய்ப்பே இல்லை..இன்னும் சில நாட்களில் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் அழகிரி,த்யா இருக்கப்போவதில்லை என்கிறார்கள்..அதுக்குத்தான் ஜெ..டெல்லி போகிறாரோ என்னவோ..?


 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...