Wednesday, June 15, 2011

தமிழினப் படுகொலையை மூடி மறைக்கும் தீவிர முயற்சியில் இலங்கை அரசு!

 
  

இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றதாக கூறப்படும் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளிகள் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையினால் உருவாக்கப்பட்டது.

என்று அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர ஐ.பி.ரி.வி. சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும், டிஜிட்டல் வீடியோ பயிற்சிப் பிரிவின் முன்னாள் தலைவருமான சிறி ஹேவவித்தாரன தெரிவித்துள்ளார்.

சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கிறிஸ்டோபர் ஹெய்ன்ஸ் அண்மையில் ஜெனீவாவில் இடம்பெற்ற மனிதஉரிமைகள் மாநாட்டின் போது செனல் 4 வெளியிட்ட காணொளிகளை காட்சிப்படுத்தினார்.

நிராயுதபாணிகளான தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்படும் காணொளிகள் உண்மையானவை என்று அமெரிக்க காணொளி நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக கிறிஸ்டோபர் ஹெய்ன்ஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து ஹேவவித்தாரன கருத்து தெரிவிக்கையில், வாடகைக்கு அமர்த்தப்பட்ட நிபுணர்கள் எவ்வித ஆதரமுமின்றி காணொளியில் அடங்கியுள்ள விடயங்கள் உண்மையானது எனக்கூறுவது புதுமையான விடயமாகும்.

இவர்களை விசேட நிபுணர்களாக அறிமுகப்படுத்துவது நகைப்புக்குரிய ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் வெளியிடப்பட்ட காணொளிகள், ஏற்கனவே, காணொளிகளை தயாரித்தவரினால் அவற்றில் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும்.

சனல் - 4 தொலைக்காட்சியின் ஒளிபரப்பப்பட்ட காணொளிகள் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்டவையல்ல.

இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இவை புகைப்படக் கருவியினாலேயே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று ஹேவவித்தாரன மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...