Tuesday, June 28, 2011

ஊழல் இல்லாத இந்தியாவை நம்மால் உருவாக்க முடியும்: முன்னாள் ஜனாதிபதி கலாம்

ஊழல் இல்லாத இந்தியாவை நம்மால் உருவாக்க முடியும்,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.
ஒவ்வொரு மாணவர்களும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும்.அவர்களுக்குதான் உலக வரலாற்று புத்தகத்தில் தனி இடம் ஒதுக்கப்படும்.இதற்காக உயர்ந்த குறிக்கோள், துறை சார்ந்த அறிவை வளர்த்தல், கடின உழைப்பு,விடா முயற்சி ஆகிய பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்னிய முதலீட்டில் கிராம சாலைகள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம்.இன்று ஆண்களுக்கு நிகராக விண்வெளி ஆராய்ச்சியில் 30சதவீத பெண்கள் பணிபுரிகின்றனர்.நாம் சூரியன்,காற்று,கடல் அலைகளில் இருந்து எடுக்கப்படும் சக்தியை முழுமையாக பயன்படுத்த வேண்டும். அணு தொழில் நுட்பத்தை குறை சொல்லாமல், அணு மின் நிலையங்களை பாதுகாப்பான முறையில் அமைப்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.இன்று 170 மில்லியன் எக்டேர் நிலத்தில் 235 மில்லியன் டன் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கிறோம்.


2020ல் விளை நிலத்தின் அளவு 100 மில்லியன் எக்டேராக குறையும். உணவுப் பொருட்களின் தேவை இரு மடங்கு அதிகரிக்கும். இதற்கு உயர்ந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி விளைச்சலை பெருக்குவது தான் தீர்வாகும். மாணவர்களுக்கு ஆரம்ப கல்வியை நன்கு கற்பித்தால் தான் உயர் கல்வியில் சாதிக்க முடியும்.இதற்கு ஏற்றாற் போல் பாடத்திட்டத்தையும் , ஆசிரியர்களையும் தயார் செய்ய வேண்டும்.இந்தியாவில் 200 மில்லியன் குடும்பங்களில் 80 மில்லியன் குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் ஊழலில் ஈடுபடுகின்றனர். இவர்களை மாணவர்கள் அன்பால் மாற்றலாம்.இதன் முலம் ஊழல் இல்லாத இந்தியாவை நம்மால் உருவாக்க முடியும், என்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...