Thursday, June 30, 2011

விசாரணை கமிஷன் என்றவுடன் மு.க. பயம், நடுக்கம்.

டில்லியில் பிரதமரை சந்திக்கச் சென்ற போது, முதல்வர் தங்கும் அறை மாற்றப்பட்டது. புதிதாக சாலை போடப்பட்டது. இதற்கு செலவழிக்கப்பட்டது எவ்வளவு, செம்மொழி தமிழாய்வு நூலகத்தை அப்புறப்படுத்திவிட்டு, அங்கு சட்டப்பேரவை உருவாக்க செய்த செலவு எவ்வளவு, பயணிகள் விமானத்தை பயன்படுத்தாமல், தனியார் விமானத்தில் முதல்வர் செல்வதால் ஏற்படும் செலவுகள் எவ்வளவு, இது குறித்து விசாரணை உண்டா?என்றுகேள்வி வேறு.

1200 கோடி ரூபாய்க்கு விசாரணை என்றால், லட்சத்தில் உள்ள செலவிற்கு விசாரணை கமிஷன் கேட்கிறார். சம்பந்தமே இல்லாமல் உளறுவது இவரின் வாடிக்கையாகிவிட்டது. ஏன் இவர் இப்படி இருக்கிறார்? விசாரணை கமிஷன் என்றவுடன் பயம், நடுக்கம் வந்துவிட்டது போலும்..... அதனால் நிச்சயம் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது இவற்றின் பயத்திலிருந்து நிரூபணம் ஆகிறது. நிச்சயம் அந்த தண்ணீர் டாங்க் சட்டமன்றம் இருநூறு கோடி ரூபாய் தான் இருக்கும், மீதம் உள்ள 1000 கோடி ரூபாயை ஸ்வாகா செய்துள்ளார்கள், அதனால் கருணாநிதி பதட்டமாக உள்ளார். இது மட்டுமா, விசாரணை கமிஷன் அமைத்தால், இன்னும் தோண்ட தோண்ட ஊழல்கள் வெளிவந்துகொண்டே இருக்கும். சமசீர் கல்வி புத்தகத்திற்கு ஒரு விசாரணை கமிஷன் அமைத்து விசாரித்தால், அதன் உண்மையான செலவு 80 கோடி, 200 கோடி அல்ல என்று தெரியவரும். என்னமோ இவர் அறிக்கையால் தான் அம்மா காஸ் விலை குறைத்ததாக திமுகவினர் கூறினார்கள், அப்படி என்றால், மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்கும் திமுக ஏன் மத்திய அரசை வலியுறுத்தி விலை ஏற்றதை திரும்ப பெறவில்லை?

முன்பு வெங்காயம் விலை அதிகம் என்று மு.க.விடம் கேட்டபோது, பெரியாரிடம் போய் கேள் என்று நக்கல் செய்தார், பெட்ரோல் விலை ஏறியதை கேட்டபோது போய் மன்மோகன் சிங்கிடம் கேள் என்று சொன்னவர் தான் இந்த மு.க. இவர் சொல்லிட்டாராம், அம்மா வரியை நீக்கிவிட்டாராம்? 

ஒரு சின்ன கதை, ஒரு எறும்பு யானையின் தலையில் உட்கார்ந்து அழுத்துமாம், அந்த யானை தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சம் முழ்குமாம், உடனே கரையில் இருக்கும் எறும்புகள், யானையின் தலையில் உள்ள எறும்பை பார்த்து, அப்படி தான், விடாதே, நல்லா அழுத்து, யானை தண்ணீரில் முழ்கி சாகட்டும் என்று கூச்சல் போடுமாம். அந்த எறும்பினால் தான் யானை மூழ்கியது என்று அந்த எறும்புகள் ஒன்றோடு ஒன்று கைகுலுக்கி வாழ்த்து தெரிவிதுகொள்ளுமாம், அது போல இருக்கிறது, நான் விட்ட அறிக்கையால் தான் வரியை குறைத்தார் என்று சொல்லுவது. கருணாநிதி ஆட்சியில் பெட்ரோல் விலை உயர்ந்த போது, ஏன் விற்பனை வரியை குறைக்கவில்லை?

இருபது லட்சம் செலவு, அது மக்கள் வரி பணம், சரி, விசாரணை தேவை, செம்மொழி மாநாட்டிற்கு 500 கோடி செலவழித்தாரே, அது நம்முடைய வரி பணம் இல்லையா? கருணாநிதியின் சொந்த பணமா?2G ஊழல் காரணமாக இது நாள் வரை கருணாநிதி, திமுக உறுபினர்கள், குடும்ப உறுப்பினர்கள் டெல்லி சென்றார்களே, அது யார் பணம்? அவர் சொந்த பணமா? அம்மா ஆட்சி அமைத்து ஒரே முறை தான் டெல்லி சென்றார், அதுவும் அரசாங்க ரீதியாக சென்றார், அதற்க்கு இந்த கூப்பாடு போடுகிறீர்கள்? சரி, மன்மோகன் சிங், சென்னை வந்தால், பயணிகள் விமானத்தில் தான் வரவேண்டும் என்று கூறுவீர்களா? இல்லை வெளிநாடு செல்லும் போது பயணிகள் விமானத்தில் தான் செல்லவேண்டும் என்று கூறுவீர்களா?.  

மன்மோகன் சிங், மற்றும் உயர் பதவியில் இருப்பவர்கள் மற்ற நாடுகளுக்கு செல்லும் போது தனி விமானத்தில் தான் செல்வார், அது போலவே. அம்மா ஒரு மாநில முதல்வர், அதும் வலிமையான முதல்வர், அவர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனி விமானத்தில் செல்லவேண்டும். ஒவ்வொரு மாநில முதல்வர்கள் ஐந்து வருடத்தில் அரசாங்க ரீதியான பயணத்தில் இவ்வளவு பணம் செலவு செய்து கொள்ளலாம் என்று அளவு உள்ளது, அந்த பணத்தில் தான் அவர் செலவு செய்கிறார். தெரிந்தால் பேசுங்கள், சும்மா வரி பணம் வரி பணம் என்று பிதற்றாதீர்கள். எவ்வளவோ லட்சம் கோடிகள் கொள்ளையடித்தார், அது பரவாயில்லையாம், இருபது லட்சம் தான் இவருக்கு மக்களின் வரி பணமாக தெரியுதாம்....

ஒரு ஊழலை விசாரிக்க விசாரணை கமிசன் அமைத்ததற்கே இப்படின்னா இன்னும் நிறைய ஒன்றன் பின் ஒன்றாக வருமே ! தவறு நடந்திருப்பதால் தீர்ப்பு எப்படி வரும்னு முன் கூட்டியே அனுமானித்து அறிக்கை விட்டிருக்கிறார்.

 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...