தமிழக அரசியலில் மிகப்பெரிய இடத்திற்கு முன்னேறிய ,தி.மு.க தலைவர் கருணாநிதியின் அரசியல் யுக்திகளில் டாப் 10 பார்ப்போம்..!!
1.பெரியார் கொள்கைகளை புரிந்துகொண்டது....மேல்மட்ட மக்களுக்கு நிகராக உயர மேல்மட்ட மக்களை கேள்வி கேட்க வேண்டும்....புதுசா வியாக்கியானம் சொன்னா...புரியாத மாதிரி பேசினா சீக்கிரம் புகழ் அடையலாம் என்ற யுக்தி.திருவாரூரில் இருந்து சென்னைக்கு ரயில் ஏறியது...
2.அண்ணாவுடன் இணைவு..வெகு சீக்கிரம் அண்ணாவை மயக்கியது...நல்ல பேச்சு திறமையால் சுவையான பேச்சால்,அடுக்கு மொழியால் அறிஞரோ என எண்ண வைத்தது..!
3.அண்ணாவின் சாமர்த்தியத்தால் காங்கிரஸ் ஒதுக்கப்பட்டு தி.மு.க எம்.ஜி.ஆர் துணையுடன் முண்ணனிக்கு வருதல்...தன்னை சாமர்த்தியமாக முக்கியமானவராக தி.மு.க வில் முன்னிலை படுத்திக்கொள்ளுதல்...
4.இந்தி எதிர்ப்பு போராட்டம்..ரயிலே வராத தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம்...தமிழக மக்களை பயமுறுத்தி...பெரும் ஆபத்து வந்துவிட்டது போல கத்தி கூப்பாடு போட்டு,போராடி ஹிந்தியை தமிழகத்துக்கே வரவிடாமல் செய்த மனிதர் கருணாநிதி.ஹிந்தி அப்போதுவந்திருந்தால் இன்று கருணாநிதி செல்வங்கள் அழகிரியும்,கனிமொழி டில்லியில் தவிக்க மாட்டார்கள்..நாமும் இந்தியா முழுவதும் சென்று வரலாம்...
5.அண்ணா மறைவும் ,கலைஞர் தி.மு.க வை கைப்பற்றுதலும்....
6.தி.மு.க வின் தூண்கள் என இருந்த ஐவர் குழுவை சுருக்கி...தி.மு.க என்றால் கருணாநிதி என மாற்றியது..இன்றுவரை அன்பழகன் டம்மியாக இருக்கிறார்..
7.எம்.ஜி.ஆர் வைகோ போன்றோரை வெளியேற்றி கட்சி தன் மகனுக்கு மாத்திரமே சொந்தம் என ரூட் க்ளியர் செய்தது..அடுத்த தலைமுறைக்கும் துண்டு போட்டு வைத்தது...
8.தமிழினதலைவராக தன்னை காட்டிக்கொள்ள தமிழை எதற்கெடுத்தாலும் இணைத்துக்கொள்வது..தமிழ்,தமிழ் என உச்சரித்துக்கொண்டே இருந்தால் தமிழினதலைவர் ஆகிவிடலாம் என நம்பிய அப்பாவி தலைவர்.பஞ்சாயத்து அலுவலகங்களில் தமிழ் வாழ்க...என நியான் விளக்கு மின்னுகிறது..
9.செந்தமிழ் மாநாடு நடத்தினால் தமிழ் வளரும் என தமிழனை நம்ப வைத்தது..!
10.ஒரு மணி நேரம் உண்ணாவிரதம்,பிரதமருக்கு தந்தியடித்தல்,மனித சங்கிலி போராட்டம்,சகோதர உத்தம் வேண்டாம் என அறிக்கை.. இவையெல்லாம் செய்தால் தமிழினத்திற்கு பெரிய தொண்டாற்றியதாக உலகத்தமிழர் நினைப்பார்கள் என யதார்த்தமாகநம்புவது...5 வருடத்தில் ஒரு முறை கூட தமிழக சட்டமன்றத்தில் ஈழத்தமிழர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் இயற்றவில்லையே ஏன் என்று கேட்டால்.......ஜெவை..பாராட்ட என்னை பிறாண்டுகிறர்கள் என வழக்கம்போல..பிரச்சனையை திசை திருப்பும் ,அரசியல் செய்வது!!
No comments:
Post a Comment