Monday, June 13, 2011

தலை நிமிர்ந்த தமிழனும்,தலை குனிந்த இந்தியனும்!

வணக்கம் பாஸு... எப்போ எழுதினாலும் தொடர்ந்து ஆதரவு குடுத்திட்டு வர்ற உங்கள மாதிரி நண்பர்கள் இருக்குறத நெனச்சி பாக்குறப்போ என் நெஞ்சமெல்லாம் புளங்காகிதம் அடையுது...(ஸாரி..பாஸு கம்பெல்லாம் வேணாம்,வலிக்கும்.)
 

இனிமே வாரத்துக்கு ரெண்டு,மூணு பதிவாவது எழுதலாம்னு இருக்கேன்.அதனால என்னோட பேங்க் அக்கௌண்ட்ல ஒரு பத்து லட்சம் ரூபாயை போடுங்கன்னு காசா கேக்கப்போறேன். ச்சே..ச்சே.. வேறென்ன உங்ககிட்ட கேட்கப்போறேன்? என்னோட பதிவுகளுக்கு வழக்கமான உங்க மகத்தான ஆதரவு தான்...

தமிழகத்துல தேர்தல் நடந்து முடிஞ்சி ஒரு மாற்றம் வந்திருக்கு.தமிழ்,தமிழன்னு பேசிப் பேசியே தமிழர்களோட உயிரை துச்சமா மதிச்சி,அவனோட உசுர மட்டுமில்லாம கொஞ்சம் நஞ்சம் இருந்த மானம்,மரியாதையையும் காத்துல பறக்க விட்ட ஒரு குடும்பத்தோட ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.

மூணாவது தடவையா வந்திருக்குற ஜெ அம்மாகிட்டேயும் ஒரு நல்ல மாற்றம் தெரியுது. முந்தின காலங்கள்ல அவங்க நடவடிக்கைகளும், இப்போ அவங்களோட நடவடிக்கை களிலும் நெறைய வித்தியாசங்களை பாக்க முடியுது. இந்த மாற்றம் அவங்களை நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு ஒரு நல்ல மாற்றமா இருக்கணும்.

அதே மாதிரி போன வாரம் தமிழக சட்டமன்றத்துல “இலங்கை அரசு மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்”,”கச்சத்தீவை மீட்க வேண்டும்”னு வரலாற்று சிறப்பு மிக்க ரெண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. உண்மையிலேயே ஒரு தமிழனா நாம அந்த தீர்மானங்களை உச்சி முகர்ந்து வரவேற்கணும்.

பல ஆயிரக்கணக்குல ரூபாயை செலவு பண்ணி செம்மொழி மாநாடும்,செம்மொழிப் பூங்காவும் தொறந்த தமிழினத் தலைவர்னு தனக்கு தானே சொல்லிக்கிற முன்னாள் முதல்வர் கூட இதை செய்யலை. ஆனா,ஜெ துணிச்சலா,தைரியமா இந்த தீர்மானங்களை சட்டசபையில நிறைவேத்திருக்காங்க.’ஜெ’வோட ஸ்பெஷாலிட்டியே இந்த துணிச்சல் தான்.

இந்த தீர்மானங்கள் மூலமா யார் உண்மையிலே தமிழர்கள் நலன் மேல ரொம்ப அக்கறை வெச்சிருக்காங்க?யார் வச்சிருக்குற மாதிரி நடிக்கிறாங்க?ங்கிறதும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு.
இப்படி தமிழனுக்கும்,தமிழ்நாட்டுக்கும் ஒருவழியா நல்ல பேர் கிடைக்க ஆரம்பிச்சிருச்சி, ஆனா மத்தியில இருக்குற காங்கிரஸ் கட்சியினால ஒரு இந்தியனா உலக அரங்கத்துல  நாம தலை குனிஞ்சி நிக்க வேண்டியிருக்கு. கருப்பு பணம் விவகாரத்துல சோனியாகாந்தி தலமையில நடக்குற காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கூட மக்கள் மனசை புரிஞ்சி நடந்துக்குற மாதிரி தெரியல. அன்னா ஹசாரே,பாபாராம்தேவ் இவங்களோட உண்ணாவிரத்தை நசுக்கி விட்டதன் மூலமா காங்கிரஸ் கட்சியோட கொள்கை எந்த லட்சணத்துல இருக்குன்னு தெரிஞ்சி போச்சி.

குறிப்பா திக்விஜய்சிங் போன்ற காங்கிரஸ் தியாகிங்க எல்லாரும் தயவு பண்ணி அரசியலை விட்டு வெளியில போனா உண்மையிலேயே இந்த நாடு உருப்படும். நான் பாராம்தேவுக்கு வக்காலத்து வாங்கல, பாபாராம்தேவை சகட்டு மேனிக்கு திட்டி தீக்குற திக்விஜய்சிங் ஊழல்,மற்றும் கறுப்பு பண விவகாரத்துல இதுவரைக்கும் மத்திய அரசு என்ன பண்ணிச்சி? இனிமே என்ன பண்ணப்போவுது?ன்னு மட்டும் சொல்லவே மாட்டேங்குறாரு. அத விட்டுட்டு சம்பந்தம்,சம்பந்தம் இல்லாம பேசி காங்கிரஸ் கட்சியோட குற்றங்களை மறைக்க முயற்சிக்கிறாரு.

பாவம் பிரதமர் வாயிருந்தும்,பேசமுடியாம,காதிருந்தும் கேட்க முடியாம,கண்ணிருந்தும் பாக்க முடியாம ரொம்பவே அவதிப்படுறாரு...மனுஷன், தெனமும் வீட்டுக்கு போனவுடனே ரூம் போட்டு அழுவார் போலிருக்கு. கறுப்புப் பணம்,ஊழல் இந்த ரெண்டுக்கும் மத்தியில மாட்டிக்கிட்டு இருதலைகொள்ளி எறும்பா அவர் துடிக்கிறதை விட பேசாம பிரதமர் பதவியை ராஜினாமா பண்ணிக்கிட்டு வீட்ல ஹாயா...ரெஸ்ட் எடுக்கலாம்.

அப்புறம் என்னங்க,யார் எந்த கேள்வி கேட்டாலும் உடனே பதில் சொல்லாம மௌனவிரதம் இருக்குறாரு. இதுவும் ரொம்ப தப்பு.ஒரு நாட்டோட பிரதமர் இப்படிய எதுக்கெடுத்தாலும் மௌனமூடியா இருக்குறது, இது தேசத்தோட நலனுக்கு மட்டுமில்ல,அவரோட நலனுக்கு நல்லது கிடையாது. பாத்து ஸார்,ஒரு நாள் இல்லேன்னா ஒருநாள் உண்மையிலேயே நீங்க ஊமையா ஆயிடப்போறீங்க, அதனால அப்பப்போ ஏதாவது பேசுங்க, அப்போ தான் ஹெல்த்துக்கு நல்லது.
கறுப்புப் பணம் பதுக்கல்ல இந்தியா தான் முதல் இடத்துல இருக்கு,அதே மாதிரி இந்தியா சுதந்திரம் வாங்கின பின்னாடி இந்த நாட்டை காங்கிரஸ் கட்சி தான் அதிகப்படியான ஆண்டுகள் ஆட்சி செஞ்சிருக்கு. அதுக்கு ஓட்டு போட்டு பல தடவை ஆட்சிக்கட்டில்ல வெச்ச நாம ஒரு இந்தியனா தலை குனிஞ்சி தான் ஆகணும்.

அதனால இனிமேலாவது சிந்திச்சி செயல்படுவோம்!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...