Saturday, June 18, 2011

தயாநிதிமாறனை பழிவாங்கும் கனிமொழி

 

தயாநிதிமாறன் தான் இத்தனைக்கும் காரணம் என நினைக்கிறார்களாம் ராசாவும்,கனிமொழியும்.ஏர்செல் சிவசங்கரனை தூண்டிவிட்டு,தயா மீது புகார் கொடுக்க கனிமொழிதான் காரணம் என்ற தகவலை கேள்விபட்டு ஆடிப்போயிருக்கிறார் தயாநிதிமாறன்.இதனால் அழகிரி மூலம் திகார் சிறையில் இருக்கும் கனிமொழியை சந்தித்து சமாதானம் பேசி வருகிறார்கள்.

தயாநிதிமாறனை இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என கடும்கோபத்தில் இருக்கும் கனிமொழி,எனக்கும் சிவ ஷங்கரன் மேட்டருக்கும் சம்பந்தம் இல்லை என கூலாக சொல்கிறாராம்...


ஸ்பெக்ட்ரம் சம்பந்தமான பல ஆதரங்களை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது தயாநிதிமாறன் தான் என கனிமொழியிடம் உறுதியாக சொல்லி சிவஷங்கரன் புகார் கொடுத்தால் தயாநிதிமாறனும் திகார் வருவது உறுதி என ஐடியா கொடுத்ததே ராசா தான் என்கிறார்கள்.

-நேற்றைய ரிப்போர்ட்டர் வார இதழ் செய்தி.
---------------------------------------
ஈரோட்டின் பிரபலமான,பெரிய மெட்ரிகுலேசன் பள்ளி கொங்கு வேளாளர்.இங்கு படிக்கும் எல்.கே.ஜி குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் முன்பு 15,000 அளவில் இருந்தது.இப்போது 4500 என ரவிராஜன் கமிட்டி அறிவித்துள்ளது.என்னை பொறுத்தவரை இது பெரிய வெற்றி.மெட்ரிகுலேசன் பள்ளிகளின் கட்டண கொள்ளை முக்கால்வாசி கட் ஆகிவிட்டது என்பது மட்டும் உறுதி.புதிய கட்டண விவரங்களை தங்கள் பள்ளி நோட்டீஸ் போர்டில் தெரிவிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் சி.வொஇ.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

அப்படியே சீருடை,நோட்டு புத்தகங்கள் பள்ளியில் தான் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமைச்சரே..
----------------------------------------------
.ஈரோடு கலெக்டர் தன் குழந்தையை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார் என்ற செய்தி இனிப்பாக இருக்கிறது..அரசு பள்ளியின் தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை.மந்திரி குழந்தைகளும் அரசு பள்ளியில் படித்தால் போதும்..எல்லா நடவடிக்கையும் எடுத்துருவாங்க.
--------------------------------
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, 9 லட்சத்து 12 ஆயிரம் இலவச லேப்-டாப் வழங்குவதற்காக, சர்வதேச அளவிலான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. லேப்-டாப் தயாரிக்க விரும்பும் நிறுவனங்கள், அந்நிறுவனத்தின் லேப்-டாப் மாதிரியை, "எல்காட்' நிறுவனத்திடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.லேப்டாப் இனி எல்லா வீடுகளிலும் இருக்கும்..நெட் கனெக்சனுக்கும் ஒரு வழி பிறந்துட்டா,இன்னும் புது பதிவர்களும்,வாசகர்களும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கு...வலைப்பதிவு ஹிட் அதிகரிக்கும்(எப்படியும் ஹிட்டடிப்போர் சங்கம்)
---------------------------------------------

கனிமொழியின் ஜாமீன் கோரும் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் இருவரின் திடீர் விலகல் சந்தேகத்தை கிளப்பியுள்ளது....ரொம்பவும் குடைச்சல் கொடுப்பாங்களோ...
லேசா தீயற வாசம் அடிக்குதே!!



 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...