சென்னை நகரில் ரவுடிகள் மீதான வேட்டை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், கடந்த 40 நாட்களில் 60 ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டுள்ளதாகவும் மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை நகரில் ரவுடிகள் மற்றும் கிரிமினல்கள் மீதான வேட்டை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 40 நாட்களில் மட்டும் 60 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் ரவுடி மாமூல் வாங்குபவர்கள் 14 பேர், கொலை வழக்கில் ஈடுபட்டவர்கள் 15 பேர், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்கள் 13 பேர், திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் 14 பேர். இது தவிர விபச்சார புரோக்கர்கள் ஒருவரும், திருட்டு விசிடி வியாபாரம் செய்தவர்கள் 3 பேரும் ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெறும் என சென்னை போலீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment