தேர்தலுக்கு பிறகு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று காலை 8 மணிக்கு, விமானம் மூலம் திருச்சிக்கு வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மாலை ஸ்ரீரங்கத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், "என் பூர்வீகம் ஸ்ரீரங்கம் தான். எனவே, நான் இங்கு அடிக்கடி வருவேன்' என்று பேசி, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா ஓட்டு சேகரித்தார்.
தேர்தலில் 41 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, முதல்வராக பொறுப்பேற்றார். முதல்வரான பிறகு, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்கவும் 19ம் தேதி (இன்று) முதல்வர் ஜெயலலிதா திருச்சி வருகிறார் என, அறிவிப்பு வெளியானது. அதன்படி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, விமானம் மூலம் இன்று காலை 8 மணிக்கு, திருச்சி வருகிறார். வரவேற்பு முடிந்ததும் முதல்வர் ஜெயலலிதா, சங்கம் ஓட்டலில் ஓய்வெடுக்கிறார்.
மாலை 5 மணியளவில், ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, தோட்டக்கலைத் துறை சார்பில், திருச்சியில் கட்டப்பட உள்ள தோட்டக்கலை கல்லூரி உட்பட, 306 கோடி ரூபாய் மதிப்பிலான, 38 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 430 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
நாளை மாலை, ஸ்ரீரங்கம் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். 21ம் தேதி மாலை, விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். முதல்வர் நிகழ்ச்சி என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment