Monday, June 27, 2011

டில்லியில் கருணாநிதி விடும் கண்ணீர்

ஈழத்தமிழர்களின் துயரம் கண்டு பொறுக்காத நம் முன்னாள் முதல்வர் பிரதமருக்கு தந்தி மேல் தந்தி அடித்தார்..சரி வயசான காலத்துல பாவம் பாத்ரூம் போறதே சிரமம்...டில்லி போய் போராட முடியுமா என நினைத்தோம்..இன்று ஸ்பெக்ட்ரம் பணத்தை கையாடல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, திகார் சிறையில் இருக்கும் மகள் கனிமொழியை காண இரண்டாம் முறையாக சென்றிருக்கிறார் தந்தை கருணாநிதி..
கிராமத்தில்,சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்பார்கள்..அது சரியாத்தானே இருக்கு.

பாவம் அந்த மனுசன் என்னய்யா பாவம் பண்ணினான்..?இவங்களுக்கு விளக்கு பிடிச்சதை தவிர என்னதான் பாவம் பண்ணினான் ..?இந்த சரத்...இப்படி இவரையும் களி திங்க வெச்சு..அவர் குடும்பத்த நடுத்தெருவுல நிறுத்திட்டீங்களே..என்ன கொடும..?

இன்று தாரை தாரையாய் டில்லியில் கண்ணீர் விடும் கலைஞர் அவர்களே...கொஞ்சம் ஸ்லிப் ஆனா அதள பாதாளம்தான் என்பதை இத்தனை ஆண்டு காலம் அரசியல் செய்தும் புரிந்துகொள்ளாமல் ,கடைசி வரை சுயந்லமாய் வாழ்ந்து விட்டீர்களே...தமிழ் வரலாறு நினைவுபடுத்த ,உங்கள் வாழ்வில்,ஒன்றும் இல்லாமல் போய்விட்டதே...உங்கள் உடன்பிறப்புகள் சொல்லலாம்...திருவள்ளுவர் சிலை,சென்னை கண்ணகி சிலை,வள்ளுவர் கோட்டம்..இதெல்லாம் சோத்துக்கு ஆகுமா...இலவசமா டிவி கொடுத்தேன்..அரிசி கொடுத்தேன்னு சொல்லியே அஞ்சு வருசம் ஓட்டுனீங்களே...ஆயிரம் ஆயிரம் கோடியா இந்திய மக்கள் வரிப்பணம் காணாம போவது தெரியாம நாங்களும் வாயை பிளந்துகிட்டு கேட்டுகிட்டு இருந்தோம்...

ஆட்சி மாறி மாறி வரணும்..அப்பத்தான் ஒருத்தர் வண்டவாளம் முழுசா வெளியில வரும்...

இலவச மிக்சி,கிரைண்டர் இலவச டிவி கொடுத்தீங்களே ..அது மாதிரி குப்பையா இருக்காது...சும்மா நச்சுன்னு இருக்கும்...ஏன்னா அதன் தொழில் நுட்ப விவரங்கள்...ரொம்ப நுணுக்கமா இருக்கு..ரெண்டு வருசம் கியாரண்டியாம்..நீங்க..இலவச டிவிக்கு 6 மாசமாவது கியாரண்டி கொடுத்தீங்களா அய்யா..?

ஸ்டாலிந்தான் பாவம்..முதல்வர் பதவி கானல் நீராகவே போயிருச்சி..ம்..என்ன பண்றது..நீங்க கொடுத்து வெச்சது அவ்வளவுதான்!

இது பற்றி ஒரு பிரபல இணையத்தில் வாசகர் கருத்து ஒன்று பாருங்கள்;

கருணாநிதி அவர்கள் முன்னாள் முதல்வராக தில்லி செல்லவில்லை. ஒரு கருணையுள்ளம் கொண்ட தந்தையாய் சிறையில் வாடும் தவறே செய்யாத தனது மகளை காண தான் தில்லிக்கு இந்த தள்ளாத வயதிலும் செல்கிறார். இரண்டு பெண்கள் அல்லது மூன்று பெண்கள் தொலைபேசியில் இந்திய நலன் குறித்தும் தமிழக நலன் குறித்தும் பேசுவது தவறேததும் இல்லை என்றவர் நமது முன்னால் முதல்வர். பகுத்தறிவு பகலவன் மற்றும் கட்சியின் கொ ப செ வான தம்பி ராசா அவர்கள் தமக்கு முன்னால் இருந்த அமைச்சர்கள் கடை பிடித்த கொள்கையோடு இந்திய மக்கள் குறைந்த செலவில் செல் பேச வேண்டும் என்பதற்காக சிறை சென்று தியாகம் செய்தவர். 

ஒருவேளை இவரை சந்திக்க கூட சென்று இருக்கலாம். தமது ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ஏறத்தாழ 5 அல்லது 6 முறை மட்டுமே தில்லி சென்றவர் நமது முன்னால் முதல்வர். தனது தள்ளாத வயதிலும் தமிழுக்காக, தமிழர்களுக்காக தில்லி சென்று போராடி வெற்றியுடன் திரும்பி வருவார் பாருங்கள்.. பின் குறிப்பு: தில்லி சென்றதெல்லாம் மந்திரி சபை விரிவாக்கம் பற்றி விவாதிக்கவும், பசையா னா பல துறைகளை போராடி வாங்குவதற்காகவும் மட்டுமே!!! 

ஆகவே.. சமசீர் பாட திட்டத்தில் (அடுத்த முறை ஆட்சிக்கு வரும்போது) சிறை மீண்ட சின்ன குயில், தொலை தொடர்பு புரட்சியில் தி மு க விண் தொலை நோக்கு பார்வை, நதிகளை இணைத்த நல்லவர், இந்திய பாம்புகளை விட அதிகமாக படம் எடுத்த பண்டிதர் போன்ற மிக நல்ல பாடங்களை சேர்த்து விடும்படி வருந்தி கேட்டுக் கொள்கிறேன்..


 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...