Wednesday, June 29, 2011

தமிழக அபிவிருத்திக்கு ஜெயலலிதாவின் அதிரடித் திட்டங்கள்!

வரலாற்றில் இது வரை எவருமே அபிவிருத்திப் புரட்சியினை முன்னெடுத்திராத வகையில், துரித கதியில் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தமிழக மேம்பாட்டிற்கான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவுள்ளார். அவையாவன


*பசுமைப் புரட்சியினையும், நாட்டின் உற்பத்தினையும் பெருக்கும் நோக்கில் விவாசயிகளுக்கு கடனடிப்படையில் பல உதவிகளை வழங்குவதோடு, விவசாயத்தோடு தொடர்புடைய தொழில் நுட்பங்கள் பல வற்றை அறிமுகப்படுத்தி நாட்டில் பசுமைப் புரட்சியினை விரிவாக்குதல்.

*ஏழைகளே நாட்டில் இருக்கக் கூடாது எனும் உயரிய நோக்கில் அனைவருக்கும் இலவசக் கல்வியோடு கட்டாயக் கல்வியினையும் அமுல்படுத்துதல். ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மாதாந்த கொடுப்பனவுகளை வழங்குதல்.

*தொடர்பாடல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளினை அனைத்து மக்களும் சம அளவில் பெற்றுக் கொள்ளும் வண்ணம் தமிழகம் தழுவிய ரீதியில் விஸ்தரிப்பதோடு, கட்டண விகிதத்தினையும் குறைத்தல்.

*போக்குவரத்துத் துறையில் துரித கதியில் வளர்ச்சியினை ஏற்படுத்தும் நோக்கிலும், அனைத்து மக்களும் ட்ராபிக் இன்றிச் சுமூகமான பயணத்தினை நேர விரயமின்றி மேற் கொள்ளும் நோக்கோடும், மொனோ ரயில் திட்டம், வீதிக்கு குறுக்கான மேம்பாலத் திட்டம், சீரான போக்குவரத்துப் பாதைக் காப்பீட்டுத் திட்டம் எனப் பல திட்டங்களை அறிமுகப்படுத்துதல். 

*தெருவோரங்களில் சிறு நீர் கழிப்போர், வீதிகளில் அசுத்தம் பண்ணுவோர், எச்சில் உமிழ்வோர், மீது சுற்றாடல் சுகாதாரத்தைப் பேணும் திட்டத்தின் அடிப்படையில் தண்டப் பணம் அறவிடுவதோடு, தமிழகத்தின் வீதிச் சுத்தத்தினைப் பேணும் வகையில் 24 மணி நேர மாநகர, நகர சபைகளின் ஊடாக சுற்றுச் சூழல் சுகாதாரப் பணிகளினை மேம்படுத்துதல்.
(ரோட்டைப் பார்த்தால், நீங்க சோறு போட்டுச் சாப்பிடுற மாதிரிப் பள பளப்பா இருக்குமாம்)

*மக்களின் நலன், சுகாதாரம் முதலியவற்றைக் கருத்திற் கொண்டு தெருவோரங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளையும், அவற்றினை விற்பனை செய்யும் கடைகளையும் சீல் வைத்து மூடுதல். உணவுச் சுகாதாரத்தினைக் கண் காணிக்கும் நோக்கில் சுகாதார அமைச்சின் செயற்பாடுகளை விரிவு படுத்துதல்.

*ஏழை பணக்காரன் என்ற பேதங்களைக் களைய அனைவருக்கும் ஒரு பொதுவான சம்பளத்தினை அடிப்படையாகக் கொண்டு ஊதியத் திட்டத்தினை தமிழக்த்தின் அனைத்துத் தொழிற் துறை மையங்களும் வழங்கும் வண்ணம் அறிமுகப்படுத்துதல். 

*லஞ்சம், ஊழலற்ற கடமையில் கண்ணியமான் அதிகாரிகளை உருவாக்கும் நோக்கில் அதிகாரிகளின் முதுகில் 24 மணி நேரமும் அவர்களைக் கண்காணிக்கும் கமெராக்களைப் பொருத்திக் கண்காணித்தல்.

டிஸ்கி: நேற்றைக்கு ராத்திரி தூங்கம் வரலைப் பாருங்க. ரேடியோவைப் போட்டுப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது 'பச்சை விளக்குப் படத்தில் இடம் பெற்ற ஒளிமயமான எதிர் காலம் என் உள்ளத்தில் தெரிகிறது எனும் பாடலைக் கேட்டவாறு தூங்கி விட்டேன். 

என் கனவில் நான் கண்டவை தான் மேற்படி திட்டங்கள். திடீரென்று பார்த்தால், என் கனவில்; 
‘மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க! எனும் பாடல் வரிகள் கேட்கத் தொடங்குகிறது. புதிய தமிழகம் என்ற அறிவிப்புப் பலகையுடன் மக்கள் பலர் ஜெயலலிதாவை வாழ்த்த, அவா நடை போட்டு வந்தா...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...