ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கிட்டில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய மந்திரி ராசாவை சி.பி.ஐ. கைது செய்தனர். அவர் திகார் சிறையில் உள்ளார். முன்னதாக ராசாவின் வீடுகள் திருச்சி திருவானைக் காவலில் உள்ள அவரது அண்ணன் ராமச்சந்திரனின் வீடு, சகோதரி வீடுகளில் சி.பி.ஐ. சோதனை செய்தது. அப்போது சொத்துக்கள் சம்பந்தமாக பல ஆவணங்களை சி.பி.ஐ. கைப்பற்றியது.
இந்த சொத்துக்கள் சம்பந்தமான ஆவணங்களை சி.பி.ஐ. மத்திய வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தது. இது தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ராசா, அவரது அண்ணன் மற்றும் சகோதரி, வருமான விபரம், சொத்து விபரம், ஆகியவற்றை திரட்டினர். இதில் அவரது குடும்பத்தினர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்திருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ராசாவின் மனைவி பரமேஸ்வரி, அண்ணன் ராமச்சந்திரன் ஆகியோர் திருச்சி கண்டோன்மென்டில் உள்ள மத்திய வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. உடனே நேற்று முன்தினம் 2 பேரும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அவர்களிடம் மத்திய வருமான வரித்துறை, புலனாய்வு பிரிவுதுறை இயக்குனர் ஆல்பர்ட், மனோகரன் குழுவினர் விசாரணை நடத்தினர்.
அப்போது ராசாவின் சகோதரர், சகோதரி அளித்த விபரங்களை வாக்குமூலமாக பதிவு செய்தனர். பிறகு அந்த வாக்குமூலம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை வருமானவரித்துறை அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கையாக ஆ.ராசாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். இதற்காக டெல்லியில் உள்ள திகார் சிறைக்கு அதிகாரிகள் செல்கிறார்கள். அப்போது ராசாவின் மனைவி மற்றும் சகோதரர் அளித்த வாக்குமூலங்கள் அடிப்படையில் சொத்துக்கள் விபரம் அவை வந்தது எப்படி? என்பது பற்றி விசாரணை நடக்க உள்ளது.
ஒருபுறம் சி.பி.ஐ. விசாரணை நடந்து வரும் நிலையில் மத்திய வருமானவரித்துறையும் விசாரணையை தீவிரப்படுத் துவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment