Saturday, June 18, 2011

கலைஞர் டிவி வசமா சிக்கிக்கிச்சு...

ஸ்பெக்டரம் ஊழலில் ஆ.ராசாவுடன் சேர்ந்து கூட்டு சதி செய்ததாக கனிமொழி பெயர் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டதும் ,முதல்வர் கருணாநிதி ஆலிவர் சாலையில் ஆலோசனை நடத்தினார். 

நீண்ட நேர ஆலோசனைக்குப்பின்,தி.மு.க  பொதுசெயலாளர் அன்பழகன் பெயரில்,’’2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ,கலைஞர் டிவி வாங்கிய கடன் 214 கோடி திருப்பித்தரப்பட்டுவிட்டது.அதற்கான ஆவணங்களை சி.பி.ஐ யிடம் ஒப்படைத்த பிறகும் ,குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி பெயரை சேர்த்துள்ளது .,சி.பி.ஐ.இதைப்பற்றி விவாதிக்க தி.மு.க வின் உயர்நிலைக்குழு கூடுகிறது என்று ஒரு அறிக்கை வெளியானது.

ஆனால் உண்மை நிலையோ வேடிக்கையானது.

கலைஞர் டிவியின் 20 சதவீத பங்குகள் கனிமொழிக்கும் ,20 சதவீத பங்குகள் சரத்குமார் ரெட்டிக்கும் ,60 சதவீத பங்குகள் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கும் உள்ளது.டி.பி.ரியாலிட்டி மூலம் ஊழல் பணம் 214.8 கோடி கைமாறியதாக சொல்லப்படும் குற்றச்சாட்டில் இருந்து ,தயாளு அம்மாளை விடுவிக்க வேண்டும் என்று 27.7.07 -ல் கலைஞர் டிவி போர்டு மீட்டிங் நடந்தது போல மினிட்ஸ் ரெடியானது என்கிறது சி.பி.ஐ தரப்பு.

தயாளு அம்மாளுக்கு ,தமிழ் தவிர வேறு மொழி தெரியாது..மேலும் வயதாகிவிட்டது.எனவே அவருடைய பங்குக்கு உள்ள அதிகாரத்தை கவனிக்கும் பொறுப்பு சரத்குமார் ரெட்டிக்கு கொடுக்கும் முடிவு எடுக்கப்பட்டது..என்று உள்ள அந்த மினிட்ஸ் நகலை டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் நடந்த விசாரணையின் போது ,சரத்குமார் ரெட்டி கொடுத்தாராம்,அந்த மினிட்ஸின் அடிப்படையில் தான் 60 சதவீத பங்குகள் இருந்தும்,குற்றப்பத்திரிக்கையில் தயாளு அம்மாளை சேர்க்கவில்லை என்கிறார்கள்.

கலைஞர் டிவி ஒப்படைத்த வரவு செலவு கணக்கில் ,டி.பி.ரியாலிட்ட்யின் இணை நிறுவனம் மூலம் பெறப்பட்ட 214.8 கோடி எந்த ஆவணமும் இல்லாமல் பெறப்பட்ட கடன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் அந்த தகவலின் படி கலைஞர் டிவியின் கலைஞர் டிவியின் ஆண்டு வரவு 63.12 கோடி.செலவு 61.47 கோடி.

நிகர லாபம் வரி செலுத்தும் முன்பு 1.65 கோடி .வரி செலுத்திய பின்பு லாபம் 1.36 கோடி மட்டும்தான் ஆனால் இப்படி இருக்கும் நிறுவனத்துக்கு ஆவணம் இல்லாமல் 214.8 கோடியை எப்படி கடனாக கொடுக்க முன்வந்தது டி.பி.ரியாலிட்டி நிறுவனம்..?
கடன் கொடுத்துவிட்டது என்றே வைத்துக்கொள்வோம்.பிறகு அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வட்டியுடன் ஏழு மாதங்களில் திருப்பி கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐயிடம் கூறப்பட்டு உள்ளது.ஏழு மாதங்களில் 214 .8 கோடி யை வட்டியுடன் திருப்பி கொடுக்க கலைஞர் டிவிக்கு பணம் எப்படி வந்தது..?மீண்டும் யார் கடன் கொடுத்தார்கள்..?

மேலும் ,கலைஞர் டிவியின் வரவு -செலவு கணக்கில் கண்ணுக்கு புப்படாத சொத்து ,2008 -09 -ல் 123.25 கோடி என்றும் அது 2009-10 -ல் 159.16கோடி என்றும் காட்டப்பட்டு உள்ளது.கண்ணுக்கு தெரியாத சொத்தின் மதிப்பு மட்டும் எப்படி ஆண்டுக்கு ஆண்டு உயரும்..?அதை எப்படி கண்டுபிடித்தார்கள்..?என்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள்...கலைஞர் டிவியின் சரத்குமார் ரெட்டியிடம் கேட்டு வருகிறார்கள்.

என்ன பதில் சொல்லப்போகிறார் சார்..?

------------------------------------------------

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் கனிமொழி,சரத்குமார்,சினியுக் கரீம் முரானி ஆகியோர்தான் இன்னும் கைது செய்யப்படவில்லை.மற்றவர்கள் கைதாகி சிறையில் உள்ளனர்.சம்மன் அனுப்பப்பட்ட மேற்க்கண்ட மூவரும் வரும் மே-6 ஆம் தேதி டெல்லியில் ஆஜராகும்போது ,சிறைக்கு அனுப்பப்படலாம்.இதில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் முடிவே இறுதியானது.மற்ற நிறுவனங்களின் இயக்குனர்கள் எல்லாம் சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில்,கனிமொழியும் சிறை செல்வார் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி-ஜூனியர் விகடன்

டிஸ்கி; தி.மு.க உயர் நிலை கூட்டத்தில் கலைஞர்,பேசும்போது,நான் எப்போதும் கட்சியை காட்டிக்கொடுப்பவனல்ல..என்னை கைது செய்தபோதெல்லாம் சந்தோசமாக ஏற்றுக்கொண்டு சிறை சென்றவன்..(கிழிஞ்சது லம்பாடிலுங்கி..அய்யோஅய்யோன்னு கத்துனது ஞாபகமில்லையா..அந்த வீடியோவை போட்டுக்காமிங்கப்பா சன் டிவிக்காரா..)


என்று கலைஞர் பேசினார்..இது தொண்டர்களுக்கு சொல்லப்பட்ட செய்தி அல்ல...கனிமொழிக்கு சொல்லப்பட்ட செய்தி...கட்சியை காட்டிக்கொடுத்துறாதே...சிரிச்சுகிட்டே ஜெயிலுக்கு போன்னு அதுக்கு அர்த்தம்....!

கனிமொழி தன் தந்தையின் தந்திரம் புரிந்து,பாம்பின் கால் பாம்பறியும் என்பதால்,நான் மனம் விட்டு பேச நிறைய இருக்கிறது என பூடகமாக மீடியாக்களிடம் சொல்லியிருக்கிறார்.

ம்...தாயும் ,புள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேற..வேறதானே..!







 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...