Tuesday, June 14, 2011

மதுரை தி.மு.க., மேயருக்கு எதிரான புகார்:விசாரிக்க லஞ்ச ஒழிப்புக்கு கோர்ட் உத்தரவு

மதுரை மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து, வீடு கட்ட துணை போனதாக தி.மு.க., மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின் உட்பட 13 பேர் மீதான புகாரை விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,க்கு, தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது.

மதுரை வக்கீல் ஜெயராம் தாக்கல் செய்த புகார் மனு:மதிச்சியம் வடக்கு தெரு சமுதாயக்கூடம் பின்புறம் தி.மு.க., இலக்கிய அணி வார்டு செயலர் சுந்தர்ராஜன், மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடத்தில் வீடு கட்டுகிறார். அவர் மாநகராட்சி கான்ட்ராக்டர் மாணிக்கத்தின் சைக்கிள் ஸ்டாண்டில் பணிபுரிகிறார்.நிலத்தை ராமமூர்த்தியிடம், சுந்தர்ராஜன் மனைவி ரங்கம்மாள் கிரையம் பெற்றதாக, ஆவணங்கள் தயாரித்துள்ளனர். மேயர் தேன்மொழி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்றியதாக அதிகாரிகள் பொய் தகவலை தெரிவித்தனர்.


கடந்த 2011, ஜன., 10ல், அதிகாரிகள் மீண்டும் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த போது, மேயர் மற்றும் கமிஷனர் தூண்டுதல் பேரில், சர்வேயர் குருசாமியிடம், சுந்தர்ராஜன், ரங்கம்மாள் லஞ்சம் கொடுத்தனர். இதுகுறித்து, ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. உடனே, மாநகராட்சி அதிகாரிகள், சில ஆவணங்களை தயாரித்து கொடுத்துள்ளனர். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கோரப்பட்டது.இதை விசாரித்த தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் ஜோசப் டேவிட், மனுதாரர் புகாரில் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால், விசாரித்து, ஜூலை 15 அல்லது அதற்கு முன், லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கோர்ட்டில், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...