Tuesday, June 28, 2011

தமிழில் மொழிபெயர்ப்பு கருவி..

நண்பர்களே.. தமிழ் மொழி மட்டுமே தெரிந்துக்கொண்டு உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் தற்போது நாம் கடிதங்கள் எழுதலாம்.... அதேப்போன்று, பிற மொழிகளில் உள்ள கடிதத்தை தமிழுக்கு மாற்றி படிக்கலாம்.
ஆம். நிச்சயமாக மேற்சொன்னவாறு செய்ய முடியும் நம்மால்.
கூகுள் இணையதளம் வெறும் இணையதளங்களை தேடித்தரும் சேவையை மட்டும் செய்யாமல், உலகை மொழி பாகுபாடின்றி ஒன்றிணைக்க முயற்சி செய்திருக்கிறது.
தங்கள் தாய்மொழியிலேயே உலகின் பல்வேறு மொழிக்காரர்களுடன் உறவை மேம்படுத்த உதவும் வகையில் மொழி கருவிகளை நமக்கு படைத்திருக்கிறது கூகிள்.
குறிப்பாக தமிழில் உள்ள கருவிகள் என்று பார்த்தால்..
செய்திகள், மின்ன்ஞ்சல், தட்டச்சு கருவி, மொழிப்பெயர்ப்பு, தேடல், காணொளி, படங்கள், ஆவணம், என ஏராளமான சேவைகள் வழங்குகிறது
தற்போது தமிழுலகிற்கு கூகுள் வழங்கியுள்ள சேவையானது கூகுள் மொழிமாற்றி ஆகும். Google Translate.
இந்த கருவி முதற்கட்டமாக சோதனை அடிப்படையிலேயே வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சேவையை பெற நாம் http://translate.google.com/ என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
இப்போது, கீழ்காணும் பக்கம் தோன்றும்.


இப்போது, (மூலம்) From என்பதில் மொழி மாற்றம் செய்ய வேண்டிய வாக்கியத்தின் மொழியையும், (பெறுநர்) TO என்பதில் மாற்ற வேண்டிய மொழியையும் தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் மொழிப்பெயர் (Translate) என்ற பொத்தானை சொடுக்கினால் அருகில் மொழி பெயர்க்கப்பட்ட வாக்கியம் தோன்றும். 

இந்த வாக்கியங்களில் பிழைகள் தோன்றலாம். அதனை சரி செய்ய கூகுள் நமக்கு வசதிகளை செய்து தருகிறது...
அதன் மூலம், நாமே பிழை திருத்திவிடலாம்.
இதனால் அடுத்த முறை பிழை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
ஆனால், ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் ஓரளவு சரியாக மொழிபெயர்க்கப்படுகிறது.
இந்த வசதியை முழுமையாக பெற நமக்கு வெகு நாட்கள் எடுக்கலாம். ஆனால் நாமெல்லோரும் ஒத்துழைத்தால் விரைவில் முழுமையான மொழி பெயர்ப்பு கருவி உருவாகிவிடும்.
நாம் வெறும் வாக்கியங்களை வைத்து மொழி பெயர்க்காமல், ஒரு இணையதளத்தையோ அல்லது ஆவணத்தையோ மொழி பெயர்க்க முடியும்...
உதாரணமாக... உரைப்பெட்டியில் இணையதள முகவரியை இட்டால், அந்த தளம் எளிதாக மொழி மாற்றமாகிவிடும்..





கூடுதலாக மொழி மாற்றம் செய்யப்பட்ட வாக்கியங்கள் நமக்கு ஒலி வடிவிலும் கிடைக்கிறது.
பொதுவாக ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே கையாளும் நிலையிலிருந்து சாதாரணமாக வெறும் தாய்மொழியை தெரிந்தாலே போதும் கணினி கற்று, கையாளவும் செய்யலாம் என்ற நிலை தற்போது வந்துள்ளது.
இதுப்போன்ற மொழி கருவிகள் தகவல் தொழில்நுட்பம் மூலம் பெருகினால், தகவல் தொடர்பு எளிதாகிவிடும் என்பது திண்ணம்.

குறிப்புகள்:
1.       1. பொதுவாக ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்பு கருவி என்பது எளிமையானதாக அமைந்துவிடும். காரணம், வாக்கிய அமைப்புகளும், பொருளும் வேறுபடுமே ஒழிய எழுத்துகள் ஒரே மாதிரியானதாக தான்  இருக்கும்..
2.       கூகுள் இதுவரை 63 மொழிகளில் மொழி பெயர்க்க கூடிய அளவிற்கு சொல்வளம் கொண்டுள்ளது. அதில் தமிழ், இந்தி, உட்பட 6 இந்திய மொழிகளும் அடக்கம்.
3. கணினி துறையில் Artificial Intelligence (செயற்கை நுண்ணறிவு) பிரிவின் கீழ் வரும் Natural Language Processing ( இயற்கை மொழி செயலாக்கம்) என்பது மனிதர்கள் பேசும் மொழியிலேயே கணினியானது சமிக்ஞைகளை ஏற்று செயல்படக்கூடிய தன்மை பற்றியதாகும். இந்த இயற்கை மொழி செயலாக்கத்தின் கீழ் வருவது தான் Machine Translation. இது குறித்த ஆராய்ச்சிகள் பல்கலைக்கழகங்கள் மேற்கொண்டுள்ளன. ஆனால், நமது கல்லூரிகள் மாணவர்களுக்கு Artificial Intelligence குறித்த போதிய அறிவுறுத்தலை தருவதில்லை. இந்த துறை சவாலானதும், தேவையானதுமாகும்.
பொறியியலில் ஆராய்ச்சிக்கான ஆர்வத்தை மாணவர்கள் பெற இதுப்போன்ற திட்டங்களை, திட்டப்பணிகளை எடுத்து செயல்படுத்தவேண்டும். 
கணினி தமிழ் துறை இதற்கான உதவிகளை அதிகரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...