Sunday, June 12, 2011

கலைஞர் – கலைஞர் தான் !

தமிழக சட்ட மன்ற  தேர்தலில் படுதோல்வி.
எதிர்க்கட்சி  அந்தஸ்து கூட கிடைக்காத நிலை.

கடந்த ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்கள்
வரிசையாக, ஒவ்வொன்றாக
வெளிச்சத்திற்கு வரும் நிலை.

காங்கிரஸ் தலைமை  பாராமுகம்.
சோனியா காந்தி இவருக்கு பிறந்த நாள்
வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை !
வேண்டாவெறுப்பாக உறவு நீடிக்கும் நிலை.

வரிசையாக   ராசா,  கனிமொழி கைதை
அடுத்து எந்நேரமும் தயாநிதி மாறனின் மீது
நடவடிக்கை வரக்கூடும் என்கிற நிலை.

குடும்பத்தில் பெரும் குழப்பம் – வருத்தம்.
மகள் சிறை சென்ற துயரில் துணைவியார்
விடுக்கும் சாடல்கள்.

மனதில் ஒரு இரக்க உணர்வோடு,
நான் கூட நினைத்தேன் – அய்யோ பாவம்
கலைஞர் உடல் நிலை பாதிக்கப்படுமோ என்று.

ஆனால் -இவை எதுவுமே அவரை
பாதிக்கவில்லை ! கவலைப்பட்ட  நான் தான்
மடையனானேன் !

அகம்பாவமும், ஆணவமும்,
கேட்பவர்கள் அத்தனை பேரும் வாத்து
மடையர்கள் – தான் என்ன
சொன்னாலும் கேட்டுக் கொள்வார்கள் என்கிற
இறுமாப்பும் கலைஞரை எப்படி எல்லாம்
பேச வைக்கிறது பாருங்கள் -

அண்மையில் கொடுத்த நிருபர்கள் பேட்டியிலும்,
இன்று கலந்து கொண்ட ஒரு திருமண
நிகழ்ச்சியிலும் கலைஞரின் பேச்சு -

முதலில் பேட்டி -
கேள்வி: “கூடா நட்பு” என்று சொன்னீர்களே,
அது யாரைப் பற்றி?

பதில்: உங்களில் ஒருசிலரோடு இருக்கின்ற
நட்பாகக் கூட இருக்கலாம் அல்லவா?

கேள்வி:  இன்று நீங்கள் நிறைவேற்றிய
தீர்மானத்தில் சி.பி.ஐ. பற்றி ஒரு தீர்மானம்
நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மத்திய அரசு,
சி.பி.ஐ. நிறுவனத்தை ஒரு அரசியல்
ஆயுதமாகப் பயன்படுத்துவதாக
நினைக்கிறீர்களா?

பதில்:  ஆயுதமாக இருக்கலாம்,
அரசியல் ஆயுதமாக இருக்க முடியாது.

கேள்வி:  எக்காரணம் கொண்டும் காங்கிரசுடன்
உங்கள் கூட்டணியில் சிக்கல் இல்லை,
பிரச்சினை இல்லை என்று கூறுவீர்களா?

பதில்: நிச்சயமாகச் சொல்வேன்.
காங்கிரஸ் கட்சியுடன் எப்படியாவது
விரோதத்தை உண்டாக்க வேண்டும்,
பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு
திட்டமிட்டு ஒரு சிலர் முடிவு செய்து
அதை இங்கே வந்து கேள்வியாகக்
கேட்கிறீர்கள் !

கேள்வி:  காங்கிரஸ் கட்சியின் அதிகார
பூர்வமான பத்திரிகை ஒன்றில் 2 ஜி
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தான் தேர்தல்
தோல்விக்குக் காரணம் என்று எழுதி
இருக்கிறார்களே?

பதில்:  ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை
பூதாகரமாக சில சுயநலவாதிகள்,
சில பொறாமைக்காரர்கள் ஊதிவிட்ட
காரணத்தால், அதை எடுத்து
வைத்துக்கொண்டு அந்தப் பத்திரிகையிலே
எழுதியிருப்பார்கள்.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சினை இந்தத்
தோல்விக்குக் காரணமா இல்லையா?

பதில்:  இல்லை. தி.மு.க. தோல்விக்கு
முக்கியமான காரணம் ஒரு சில
“பார்ப்பனர்களின்” முயற்சிதான்.

கேள்வி:  அடுத்து வரவிருக்கும் சி.பி.ஐ.
மூன்றாவது குற்றப் பத்திரிகையிலே
தயாநிதிமாறன் பெயர் இடம் பெறப்போவதாகச்
செய்தி வந்திருக்கிறதே?

பதில்:  நீங்கள் முயற்சி செய்தால் -அது
நடக்கலாம்.

கேள்வி: ஈழத் தமிழர்கள் பிரச்சினையில்
கடந்த காலத்தில் நீங்கள் சரியாகச்
செயல்படவில்லை என்று விஜயகாந்த்
சொல்லியிருக்கிறாரே?

பதில்: நான் அவருக்கெல்லாம் பதில்
சொல்ல மாட்டேன்.

——————-
இன்று ஒரு திருமணத்தில் -

“இங்கே பேசிய போது தேர்தலிலே நாம்
வெற்றியடையவில்லை என்றும்
நாம் இப்போது ஆட்சியிலே இல்லை என்றும்
சிலர் இங்கே பேசும்போது குறிப்பிட்டார்கள்.

புராணத்தில், ராமாயணத்தில் கூடத்தான்
14 ஆண்டு காலம் ராமன் ஆட்சியிலே இல்லை -
ஆட்சியிலே இல்லாத காலத்தில் தான் அவன்
தாடகைக்கு புத்தி கற்பித்தான் !
(புத்தி எப்படி போகிறது பாருங்கள் -
மக்கள் இவருக்குத்  தான்  புத்தி
கற்பித்துள்ளனர் என்பதை எவ்வளவு
சகஜமாக, சாமர்த்தியமாக ஒதுக்கி விட்டார்
பாருங்கள் !)”

இவரை மாற்ற  யாராலாவது முடியுமா ?
இனிமேல் பிறந்து வந்தால் தான் உண்டு !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...