Monday, June 20, 2011

சாதாரணப் பெண்கள் படும் துயரங்களை கனிமொழி அனுபவித்ததுண்டா?

 2 ஜி அலைக்கற்றை வழக்கில்  முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகளும் தி.மு.க. எம்பியுமான   கனிமொழியும், கலைஞர் தொலைக்காட்சி   நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் தாக்கல் செய்த பிணை  மனுவை உச்சநீதிமன்றம்   தள்ளுபடி செய்துள்ளது. சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்ட பின்னர் அவர்கள் இருவரும் அந்த நீதிமன்றத்தையே பிணை  கோரி அணுகலாம் என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. 


          இன்றைய விசாரணையில், கனிமொழி ஒரு எம்.பி.என்றும் , எனவே  அவர் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பாரென்றும், சாட்சிகளை கலைப்பார் என்றால் நீதிமன்றம் கருதினால் இவரது வீட்டில் ரகசிய காமிரா வேண்டுமானாலும் ‌பொருத்திக்கொள்ளட்டும் என்ற இவரது வழக்கறிஞர்  வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை.
 
        கனிமொழியும், சரத்குமாரும் முக்கிய சதியாளர்கள். அவர்களை விடுவித்தால் சாட்சிகளையும், ஆதாரங்களையும் அழித்து விடுவார்கள்.எனவே அவர்களுக்கு பிணை  வழங்கக் கூடாது என்று சி.பி.அய்.தாக்கல் செய்த  மனுவில் கூறியது. இருவரும் கூறுவதுபோல் கலைஞர் டி.வி.க்கு பரிமாற்றம் செய்யப்பட்ட ரூ.214 கோடி ஊழல் பணம்தானே தவிர   கடன்தொகை அல்ல என்றும் சி.பி.அய். குற்றம் சுமத்தியது. இதை ஏற்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சௌகான் ஆகியோர் அடங்கிய அமர்வு, கனிமொழி,சரத்குமார் ஆகியோரின் பிணை மனுவை இன்று (20 .06 .2011 )  விசாரித்து பிணை  வழங்க மறுத்து விட்டது.

இதற்கிடையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் இந்த மனுவை விசாரிப்பதில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தனர். இதற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை. நீதிபதிகள் பி.எஸ்.,சவுகான் மற்றும் ஜி.எஸ்., சிங்வி ஆகியோர் தற்போது விசாரித்தனர். நீதிபதி சிங்வியின் சிறப்பு என்னவெனில் 2 ஜி விவகாரம் தொடர்பான வழக்கை கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
   

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...