Saturday, June 18, 2011

தயாநிதி மாறனை சிபிஐ விசாரிக்க பிரதமர் ஒப்புதல்!

 

  2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிக்கியுள்ள மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விசாரணை செய்ய பிரதமர் அனுமதி அளித்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.

இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அடுத்த வாரம் அவர் ராஜிநாமா செய்வார் என தில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

2-ஜி விவகாரத்தில் ஏர்செல் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டதாக தயாநிதி மாறன் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அவர் தவறாகப் பயன்படுத்தியதாக எழுப்பப்பட்ட பழைய சர்ச்சை இப்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஏர்செல் விவகாரம் தொடர்பாக அதன் முன்னாள் தலைவர் சிவசங்கரன் கொடுத்துள்ள சாட்சியத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்ய சி.பி.ஐ. தயாராகி விட்டது. இது தொடர்பாக பிரதமருக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தயாநிதி மாறனை விசாரிக்க, பிரதமரின் அனுமதி பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சி.பி.ஐ. ஏற்கெனவே மேற்கொண்டிருந்தது.

இந்த நிலையில், தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்வது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்துவதற்கு பிரதமர் அலுவலகம் சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.

தயாநிதி மாறனை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க காங்கிரஸ் தலைமையும் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. இந்நிலையில் தயாநிதி மாறன் தானாகவே பதவியிலிருந்து விலக வேண்டும், அவ்வாறு விலக முன்வராவிட்டால், பிரதமர் அவரை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போர்க்கொடி எழுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...