Saturday, June 18, 2011

கனிமொழி கைதுக்கு தயாநிதி காரணமா? தயாநிதியும் கைது..?-தெஹல்கா

கனிமொழி கைது பற்றி நாம் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க,அடுத்த வாரம் வெளிவரப்போகும் சி.பி.ஐ..ஸ்பெக்ட்ரம் மூன்றாவது குற்றப்பத்திரிக்கை..இன்னும் பல அதிர்ச்சிகளை வெளியிடப்போகிறது என்பது கண்கூடு...தி.மு.க தமிழ்கத்தில் பெரும் தோல்வி அடைந்த நிலையில் காங்கிரஸ் ஆதரவும் கைநழுவும் நிலையில்...இந்த குற்றப்பத்திரிக்கை முழு சுதந்திரமாக வெளிவரும் என நம்புகிறேன்....கனிமொழி கைதின் பிண்ணனியில் நடந்த தில்லு முல்லுகள் பற்றி தெக்ல்ஹா வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது..அது அப்படியே உங்களுக்காக..;




கனிமொழி கைது என்பதுகருணாநிதிக்கு அதிர்ச்சியைக் கொடுத்ததாஇல்லையா என்பது செய்தியல்ல. ஆனால் அந்த கைதை செயல்படுத்தநடந்த " பின்சதிகள்" எங்கிருந்து ஏவப்பட்டன என்பதே செய்தி. அதை இந்திய ஊடகங்கள் வெளியிட தகுதி இருக்கிறதா என்பது அதைவிடப் பெரிய செய்தி. நடந்த ஸ்பெக்ட்ரம் கதை ஒரு கார்பரேட் மோதல். அதவாது மக்களது வரிப்பணத்தையும்சந்தையையும் வளைத்துப் போட்டுஅதில் சிக்கிய அரசியல்வாதிகளையும்அதிகாரிகளையும் வைத்து,சீ.பி.ஐ. மூலம்கைகளை நகர்த்திஒரு "செஸ்" விளையாட்டு இங்கே நடைபெற்று வருகிறது.

கைபேசிகளில் அலைக்கற்றை ஒதுக்கீடுஆரம்பத்தில் கேட்பாரற்று கிடந்தது. அது 2001 ஆம் ஆண்டும்அதற்கு முந்திய ஆண்டுகளும் காட்டும் படம். அதற்குபிறகுசிறிதுசிறிதாக நமது நாட்டு மக்களும்கைபேசியில் ஆர்வம் காட்டத்தொடங்கினர். அதனால் அது சந்தையில் எடுபடத் தொடங்கியது. முதலாளிகள்பெரு முதலாளிகளாக மாறிஅவர்களும் பன்னாட்டு முதலாளிகளாககாற்பரேட்களாக மாறிவரும் காலகட்டத்தில், " சந்தையைப்" பற்றி ஒரு தீர்க்கமான பார்வை அந்த நிறுவனகளுக்கு கிடைக்கத் தொடங்கின. இந்தியாவில் இதுபோன்ற புதிய வளரும் தொழில்களில்போட்டி போடும் நிலையில்,டாடாவும்ரிலையன்சும்சுனில் மிட்டலும்முதன்மையாக நிற்பதும் தெரிந்த செய்திதான்.

திடீர் பணக்காரனாக ஆகவேண்டும் என்று எண்ணியமுரசொலி மாறன் வாரிசுகள் கலாநிதியும்தயாநிதியும்மத்திய அமைச்சரவையில் புகுந்து என்ன செய்யலாம் என்று சிந்திக்கும் காலம் அது. தனத்தை மாறன்தோஹா உலக வர்த்தக அமைப்பின் மாநாடு சென்றுஇந்திய வணிக அமைச்சர் என்ற கோதாவில்கையெழுத்திட்டுஅந்நிய ஏகபோகங்க நிறுவனங்களை " தாரளமயமாக்கல்" மூலம் இந்த நாட்டிற்குள்கண்டபடி இறக்க ஏற்பாடு செய்தார். அதை நன்கு கவனித்த வாரிசு மாறன்கள் அதன் பலனை பற்றிக் கொள்ள திட்டமிட்டார்கள். அதற்காக மத்திய அமைச்சரவையில் இடம் பெறத் துடித்தார்கள்.

முரசொலி மாறனின் மறைவுக்காக காத்திருந்த கருணாநிதிஉடனடியாக பி.ஜே.பி. கட்சி உறவை தூக்கி எறிந்துவிட்டு,காங்கிரசுடன் கை சேர்த்தார். இதற்கான ஏற்பாட்டையும் கார்பரேட்கள் கற்றுக் கொடுக்கஅமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொடர்பில் இருந்த முரசொலி மாறனின் மைந்தர்கள் போட்ட திட்டம்தான் என்று அப்போது கலைஞருக்கு தெரியவில்லை. அமெரிக்க பி.ஜே.பி.யைவிட காங்கிரசை கையாள்வது எளிது என்ற எண்ணம் கொண்ட நாடு. பி.ஜே.பி.யுடன் கூட்டணியில் இருந்த அல்லது அந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைமை வகித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ்ஒரு அமெரிக்க எதிரி என்ற கருத்தே அமெரிக்காவிற்கு மேலோங்கி இருந்தது.

அவரும் அவ்வாறே நடந்துகொண்டார். இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைய 1991 இல் ராஜீவ் கொலைக்கு பிறகு வந்த நரசிம்மராவ் ஆட்சியே காரணம் என்று ஜார்ஜ்கூறிவந்தார். அமெரிக்க பொருளாதார கொள்கைகளை அந்த ஆட்சி அனுமதித்ததால்தான் இந்திய பொருளாதாரம் கேட்டுவிட்டது என்று ஜார்ஜ் பரப்புரை செய்து வந்தார்.
ஆகவே ஜார்ஜ் தலைமையிலான என்.டி.ஏ. என்ற "தேசிய ஜனநாயக கூட்டணியை" விட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியே தங்களுக்கு சாதகமானது என்று அமெரிக்க கருதியர்குதிமுக எப்போதுமே அமேரிக் சார்பு நிலை எடுக்கும் கட்சி என்பதால்அவர்கள் காங்கிரஸ் தலைமயிலான கூட்டணியையே விரும்பினர். தவிர தோஹா புகழ் முரசொலி மாறனின் மைந்தர்கள்தந்தையின் உணர்ச்சிமிகு பி.ஜே.பி. உறவை அறுத்தெறிந்துசோனியா காங்கிரஸ் உறவை எடுக்க,கலைஞரைவற்புறுத்தினர்.அதனால் யு.பி.ஏ. என்றஐக்கியமுற்போக்கு கூட்டணியில் திமுக சேர்ந்தது. நியுயார்கை சார்ந்து வணிக உறவுகளை பலப்படுத்தி வந்த கலாநிதி அதையே விரும்பினார். .




அதனாலேயே தங்குதடையின்றி தயாநிதி முக்கிய அமைச்சர் பதவியை பெறமுடிந்தது. அதற்கும்அன்றே டில்லி சென்ற மு.க. மூன்று நாள் உட்கார்ந்துதயாநிதி கெட்டஐ.டி.அமைச்சரவையை விடாப்பிடியாக போராடி பெற்றது நினைவுக்கு வரவேணும். அந்த அளவுக்கு அந்த அமைச்சகத்தில் உள்ள "கொள்ளை வாய்ப்புகளை" தயா அறிந்தே வைத்திருந்தார். அதனால்தான் அதையே கலைஞரிடம் முரண்டு படித்து வாங்கினார். அதற்கு தங்களது தொழிலான "காட்சி ஊடகம்" சம்பந்தப்பட்டது என்று போய் கூறினார். கலைஞரும் அதை நம்பிவிட்டார்.
தன்னிடம் கொடுக்கப்பட்ட அந்த ஐ.டி. அமைச்சகம் மூலம்ஒரு புறம் ஸ்பெக்ட்ரம் வணிகமும்மறுபுறம் டி.ஆர்.ஏ.ஐ.மூலம் ஊடக இத்து விளையாட்டுகளையும் தயா நடத்தத் தொடங்கினார். அனைவரும் அவரது காட்சி ஊடக சார்பு சித்து விளையாட்டுகளையே கவனித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் அவர் சிறிதுசிறிதாக " ஸ்பெக்ட்ரம்" பெரும் அளவில் கொள்ளையடிக்க ஏதுவான தொழில் என்பதைப் புரிந்து அதன் உரிமங்களைகார்பொரேடகளுக்கு பழைய அடிமாட்டு விலையில் விற்கத் தொடங்கினார். அதற்காக பிரதமர் மன்மோகனை தன் கையில் போட்டுக் கொண்டார்.


சோனியாவை " அத்தை" என்றும்மன்மோகனை "மாமா" என்றும் தயா அழைக்கத் தொடங்கினார். இளம் "தயா" வின் அந்த அங்கில அழைப்பிலேயே அவர்கள் மயங்கிவிட்டனர். அமைச்சரவை ஒப்புதல் என்று கூறிபழைய 2001 ஆம் ஆண்டு விலைக்கே உரிமங்களை அவர் விற்றதையாரும்கண்டுகொள்ளவில்லை. கிடைக்கும் லாபங்களில்சோனியா குழுவினரையும் கவனித்து வந்தார்.
இந்தியாவில் பாரம்பரிய முதல்லை "டாடா". அவர் எந்த புதிய தொழில் வந்தாலும் அதை ஆக்கிரமிக்க எண்ணுவார். மிகவும் தாமதமாக புரியப் பட்டகைபேசி தொழிலின்ஸ்பெக்ட்ரம் உரிமத்தை அவரும் வேண்டினார். ஆனால் புதிய திடீர் பணக்காரர்"ரிலயன்ஸ் அதில் நுழிந்து போட்டியிட்டது. அம்பானி சகோதரர்கள் "எதை கொடுத்தாலும்" அதிக கமிசன் கொடுத்து உரிமம் வாங்குவதில் கெட்டிக்காரகள். அதனால் அவர்கள் "தயா" வை பிடித்துவிட்டார்கள். சுனில் மிட்டல் தயாவிற்கு வேண்டியவரானார்.


"டாடா" விற்கும், "தாயா"விற்கும் தகராறு ஏற்பட்டது. அதை ஊடக வணிக முரண்பட்டுஎன்று அப்போது தமிழகத்தில் வர்ணித்துக்கொண்டார்கள்.அது ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தப்பட்டது என்பது அப்போது அமபலத்திற்கு வரவில்லை.
உரிமம் கிடைக்காமல் கோபமடைந்த "டாடா" திமுக குடும்ப "தாத்தா"வை தொடர்புகொள்ள ஆரம்பித்தார். அப்போதே உதவியவர் "நீரா ராடியா". அவர் தனது முதலாளிக்கு விசுவாசமாக "அரசியலில் தரகு வேலை" செய்வதில் கெட்டிக்காரராக இருந்தார். அதனால் "டாடா" சார்பாக மு.க.விற்கு, "தயா"வை ஓரங்கட்ட "அறநூறு" கோடி கொடுக்கப்பட்டது. அதை வாங்கிய கலிஞர், " ஓடுமீன் ஓடஉறுமீன் வரும் வரையில்வாடி இருக்குமாம் கொக்கு" எண்பதை உணர்ந்தவர்.




அவருக்கும் சாதகமாக் நிகழ்வுகள் வந்தன. "தினகரன்"ஏட்டின் "கருத்து கணிப்பின்" மூலம்மூத்தவன் அழகிரிக்கும்கே.டி. சகோதரர்களுக்கும்சண்டை மூண்டது. கே.டி. சகோதரர்களின் "வைக்கோல் கன்னுக்குட்டி" போல இளையவர் ஸ்டாலின் செயல்பட்டு வந்தார். அதனால் அப்படி ஒரு கருத்துகணிப்பின் மூலம்ஸ்டாலினுக்கு நிறைய மதிப்பெண் என்றும்அழகிரிக்கு இரண்டு அம்திப்பேன் என்றும் "தயா" போட்டுவிட்டார். அப்போதே "கருத்து கணிப்பு" மூலம் "கருத்துருவாக்கம்" செய்யும் அமெரிக்க கலையை "சகோதரர்கள்" அமுல்படுத்தி வந்தனர்.இன்றுவரை, "ஊடகங்களை" அவ்வாறு தவாறாக பயன்படுத்துவதில் வெற்றிபெற்றுள்ளனர்.




காத்திருந்த கருணாநிதிதயாவை குறிப்பிட்ட மைச்சகத்திளிருந்து கழட்டுவதர்ககவேகட்சியிலிருந்தும்அதையொட்டி மத்திய அமைச்சரவியிளிருந்தும் கழட்டினார். குடும்பத்திற்குள், "ராஜாத்தி" எதிர்ப்பில், "தயாளுவின் பிள்ளைகளான "அழகிரியும்,ஸ்டாலினும்" ஒன்றாக இருந்துவந்தனர். ஸ்டாலினுக்கு "தயா" ஆதரவு என்பதால் பதிக்கப்பட்ட அழகிரிபுதிய கூட்டணியை" கனிமொழி"யுடன் கட்டிக் கொண்டார். '




மீண்டும் "தாத்தா"வுடன் சேர்வதற்காகவும் மத்திய அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்காகவும் "தயா" தயாளு மூலம் ஒரு அறநூறு கோடியை " தட்சிணையாக" செலுத்தினார். அதற்குள் "டாடா" மூலம், "தாத்தா"விற்கு அந்த செய்தி போய் சேர்ந்தது. 2004முதல் 2007 வரைஸ்பெக்ட்ரம் ஊழலில், "தயா" அடித்த கோடிகள் பற்றிய செய்தி "குடும்ப தலைவர் "வசம் போய் சேர்ந்தது. அந்த ஸ்பெக்ட்ரம் ஆசை அவரையும் தொற்றிக் கொண்டது.
திமுக தலைவர் ஏற்கனவே மருமகன் "முரசொலி மாறனிடம்" "கரையடிமையாக" அதாவது பினாமியாக இருந்த ஆ.ராஜாவையே தேர்ந்தெடுத்தார். ஐ.டி. அமைச்சகம் மீண்டும் திமுக விற்கு வேண்டும்அதுவும் தனது பினமிக்கே வேண்டும் என்பது தலைவரின் ஆசை. அதுதான் ராஜாவிடம் அது வந்து சிறந்த கதை. அடஹ்ர்கு முழுமையாக பயன்பட்டவர்" ராஜாத்தி அம்மையார்". அவர் தனது மகளையும் அதற்கு பயன்படுத்திக் கொண்டார்.




இலக்கியத்திலுமபெண்ணுரிமையிலும் லயித்துவந்த கனிமொழியைமெல்லமெல்ல கருணாநிதி, "அரசியலுக்கு" இழுத்து கரைக்க தொடங்கினார். "தாய்--தந்தையின்" அழுத்தத்தில் மகள்ஒழ்ழல் அரசியலில் கரையத்தொடங்கினார். "டாடா" அந்த மன்னர் குடும்பத்தின் முழு ஓத்துழைப்பாளராக மாறினார். அதுவே "சாத்தான்குளம் டைடேனியும் திட்டத்தில் எதிரொலித்தது. அந்த தைடேனியும் கொண்டு வரகலைஞர் பட்ட பாடு நாடு அறியும். அதில் வர வெற்றிபெற வில்லை.
இப்போதும் "டாடா" கொடுத்த "வோல்டாஸ்" நிலம்அண்ணாசாலையில் குடும்பத்தின்சீ.ஐ.டி. காலனியை ஆட்டுவித்து வருகிறது. அதுவே கனிமொழி மீது இன்னொரு வழக்காக வரும். "டாடாவிற்கு "தாத்தா" கொடுக்கும் சலுகைகள், "ராஜா" மூலம் வலுப்பெற்றன. இப்போது "டாடா" ஆட்கள் "நீரா"ராஜா"," மும்பை பால்வா"கனிமொழி" என்று வரிசையாக மாட்டிக்கொண்டார்கள். அவர்களும் திஹார் சிறையில் கம்பி எண்ணுகிறார்கள். இடையில் "அழகிரியை" சமாதானம் ஆனபிறகு,தன்வசம் இழுத்துக் கொண்டார் "தயாநிதி" அதுவே "ராஜாத்தி - ராஜா - கனிமொழி" கும்பலுக்கு எதிராக இன்றுவரை அழகிரியை நிறுத்திவிட்டது.




"தயா"வின் எதிரிகள் இப்படி வரிசையாக மாட்டினால்அதை 2007 ஆம் ஆண்டில்தான் ஏமாற்றப்பட்ட போதுதனது "தினகரன்" நாளேட்டிலும், "சன்" காட்சி ஊடாத்திலும்முதலில் மபலப்படுத்தியதுதயாநிதிதான் எண்பதை யார் மறப்பார்கள்அந்த "சதி" தாத்தாவிற்கும் தெரியும்ராஜாவிற்கும் தெரியும்கனிமொழிக்கும் தெரியும்ராஜாத்திக்கும் தெரியும்டாடாவிற்கும் தெரியும். அதனால் அவர்களும் பதிலடி கொடுக்காமல் விடப்போவதில்லை. ''கெடுவான் கேடு நினைப்பான்''




மத்திய புலனாய்வு துறையின் அடுத்த இலக்கு தயாநிதி மாறன்?




ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு துறை ஆ.ராசாவுக்கு முன் மத்திய தொலைதொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறனிடம் விசாரணை நடத்தக் கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. 2004 மே மாதம் முதல் 2007 மே மாதம் வரை தொலைதொடர்பு துறை அமைச்சராக பதவி வகித்தவர் தயாநிதி மாறன். 2007ல் இவருடைய சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான தினகரன் நாளிதழில் வெளியான ஒரு கருத்து கணிப்பை தொடர்ந்து முதல்வர் கருணாநிதி குடும்பத்துக்கும் மாறன் சகோதரர்களுக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தயாநிதி மாறன் வசம் இருந்த தொலைதொடர்பு துறை,அது வரை சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவுக்கு வழங்கப் பட்டது. ராசா பதவியேற்ற பின் நடந்ததை நாடறியும்.




தயாநிதி மாறன் பதவி காலத்தில் தொலைதொடர்பு துறை அபரிமித வளர்ச்சி அடைந்தது. தொலைதொடர்பு சேவைகளில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்ந்தது. அலைபேசி அழைப்புகள் மற்றும் தொலைபேசி கட்டணங்கள் மிகவும் குறைந்ததற்கு தயாநிதி மாறன் ஒரு காரணம் என்பது மறுப்பதற்கில்லை. இருப்பினும்ஸ்பெக்ட்ரம் முறைகேடு தயாநிதி மாறனின் பதவி காலத்திலேயே தொடங்கியிருக்கலாம் என சிபிஐ சந்தேகிப்பதாக தெரிகிறது. அவருடைய பதவி காலத்தில் ஏர்செல் நிறுவனத்துக்கு அதிக கரிசனம் காட்டியதால்அந்நிறுவனத்தில் அவருக்கு மறைமுக பங்குகள் இருக்குமோ என மத்திய புலனாய்வு துறையால் கருதப் படுகிறது.




தயாநிதி மாறன் தொலைதொடர்பு அமைச்சராக பதவியேற்பதற்கு மாதங்களுக்கு முன் சி.சிவசங்கரனால் தமிழ்நாட்டில் பிரபல படுத்தப் பட்ட நிறுவனம் ஏர்செல். சிவசங்கரன், 90களில் முரசொலி மாறனுக்கு நெருக்கமாக இருந்தவர். அதே காலக்கட்டத்தில்,டாடா ஸ்கை டிடிஹெச் நிறுவனம் சன் குழுமத்திற்கும் இடையே கடுமையான தொழில் போட்டி நிலவி வந்தது. ஏர்செல் நிறுவனம்டாடா நிறுவனத்துடன் தொழில் ஒப்பந்தம் செய்து கொண்டதால்சிவசங்கரன் மீது தயாநிதி மாறனுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப் படுகிறது. அந்த சமயத்தில்தொலைதொடர்பு அமைச்சராக பதவியேற்ற தயாநிதி மாறன்டாடாவையும் ஏர்செல்லையும் பழி வாங்க நினைத்தாக பரவலாக கூறப் படுகிறது.


தமிழகத்தில் காலூன்றி சில மாதங்களிலேயே ஆர்பிஜி நிறுவனத்தை வாங்கியது ஏர்செல். இதனால் ஏர்செல் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 22 லட்சமாக உயர்ந்தது. தயாநிதி மாறன் பதவியேற்று ஒரே ஆண்டில்ஏர்செல் நிறுவனத்தில் தனக்கு இருந்த பங்குகளை மேக்ஸிஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற மலேசிய நிறுவனத்துக்கும்அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் அதிபர் பிரதாப் ரெட்டிக்கும் விற்று விட்டார் சிவசங்கரன். நல்ல வளர்ச்சி இருந்த போதே ஏர்செல் நிறுவனத்தில் இருந்து சிவசங்கரன் விலகியது தற்போது சிபிஐ கண்ணை உறுத்த ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஏர்செல் மீது கரிசனம் ஏன்?




இது ஒரு புறமிருக்கஅப்போலோ மருத்துவமனை அதிபர் பிரதாப் ரெட்டி ஏர்செல் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை வாங்கியவுடன்தயாநிதி மாறன் அந்நிறுவனத்துக்கு அதிக கரிசனம் காட்டத் தொடங்கி விட்டதாக கூறப் படுகிறது. 2000ம் ஆண்டு இருதய நோய் காரணமாக முரசொலி மாறன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட போது அவரை குணப் படுத்தினார் பிரதாப் ரெட்டி. அப்பொழுதுதான் மாறன் சகோதரர்களுக்கும்பிரதாப் ரெட்டிக்குமிடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதாக சொல்லப் படுகிறது.


2004ம் ஆண்டுஒருங்கிணைந்த சேவை உரிமம் பெற டிஷ்நெட் நிறுவனமும் (தற்போதைய ஏர்செல்) டாடா நிறுவனமும் விண்ணப்பித்த போதுமேலும் விவரம் கோரி தயாநிதி மாறன் வசமிருந்த தொலைதொடர்பு துறை அமைச்சகம்,விண்ணப்பத்தை திருப்பி அனுப்பியதாக நீதிபதி சிவராஜ் பாட்டீலின் விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.


ஏர்செல் நிறுவனத்தில் இருந்து சிவசங்கரன் ஒதுங்கிபிரதாப் ரெட்டி அந்நிறுவனத்தில் பங்குகளை பெற்ற பின்கோல்கத்தா வட்டாரத்தில் டிஷ்நெட் நிறுவனத்துக்கு ஒரே நாளில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்டது.


ஏர்செல் நிறுவனத்தில் 74 சதவீத பங்குகளை வைத்திருக்கும் மேக்ஸிஸ் நிறுவனம்சன் குழுமத்துக்கு சொந்தமான ஆஸ்ட்ரோ நிறுவனத்திலும் கணிசமாக முதலீடு செய்திருப்பதாக கூறப் படுகிறது.


மாறன் பற்றி சிவராஜ் அறிக்கை கூறுவது என்ன?




தொலைதொடர்பு துறையில் முதன்மை முடிவுகளை எடுக்கும் போது தொலைதொடர்பு ஆணையத்தை தயாநிதி மாறன் கலந்தாலோசித்ததே இல்லை. அனைத்து முடிவுகளும் தன்னிச்சையாகவே எடுக்கப் பட்டன.
இந்திய அரசின் தொழில் பரிவர்த்தனைகள் விதிமுறைகள் படிஅரசின் திட்டத்தில் பண பரிவர்த்தனைகள் இருந்தால் நிதியமைச்சகத்தின் அனுமதி பெற்றே அது தொடர்பான முடிவுகள் எடுக்கப் பட வேண்டும். தொலைதொடர்பு உரிமம் பெறுவதற்கான நுழைவு கட்டணத்தை நிதியமைச்சகத்தின் அனுமதி பெறாமல் தயாநிதி மாறனே இறுதி செய்தார்.


நிதியமைச்சகத்தின் ஆட்சேபனையை மீறி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான கட்டணத்தை தீர்மானித்தவர் தயாநிதி மாறனே. இந்த விவகாரத்தில் பிரதமர் அமைத்த அமைச்சர் குழுவின் அறிவுரையையும் தயாநிதி மாறன் நிராகரித்துள்ளார்.


அடுத்து என்ன?


ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தோண்ட தோண்ட பூதங்கள் கிளம்புவதால்சிவசங்கரன்அப்போலோ மருத்துவமனை அதிபர் பிரதாப் ரெட்டிமேக்ஸிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களை விசாரிக்க சிபிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேக்ஸிஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பற்றிய விவரங்களைப் பெற சிபிஐ நீதிமன்றம்மலேசிய நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதப் போவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் தயாநிதி மாறனையும் விசாரிக்க சிபிஐ திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இந்த விசாரணைகளில் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என சிபிஐ எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


[''மத்திய புலனாய்வு துறையின் அடுத்த இலக்கு தயாநிதி மாறன்?'' - செய்தி உதவி: தெஹல்கா வார இதழ்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...