Thursday, June 30, 2011

கேடி ப்ரதர்சுக்குப் பிடித்த கேடு காலம்! மந்திரிசபையில் மாற்றம்!

ஜூன் 30, 2001!
ஐயோ  கொல்றாங்களே! ஐயோ கொல்றாங்களே!
இப்படி ஒரு ஓலத்துடன் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட படலம் நடந்தேறிய நாள்.
தாத்தாவுக்காக அந்தப் பிரபலமான 'ஐயோ கொல்றாங்களே!" டயலாகை டப்பிங் கொடுத்தது தயாநிதி மாறன் தான் என்று சொல்லப்பட்டதுமுண்டு!

பேரன்கள், தங்களுடைய ஊடக பலத்தை வைத்து, ஒரு துரும்பை, மலை மாதிரி மாற்றிக் காட்டினார்கள்!  பல நாட்கள், சன் தொலைக்காட்சியில் அதையே திரும்பத்திரும்ப ஒளிபரப்பி, கோயபல்ஸ் சொன்ன மாதிரி, திரும்பத் திரும்பச் சொன்னால் பொய் கூட நிஜமாகிவிடும் என்பதை மெய்ப்பித்துக் காட்டினார்கள். தாத்தா என்னவோ பெரிய வசனகர்த்தா தான்! அது என்றைக்கோ காலாவதியாகிப் போன ஒன்று என்பது உளியின் ஓசை எழுதியவருக்கு இன்றைக்கும் கூடத் தெரியவில்லை என்பது அவருடைய பரிதாபம்!

அன்றைக்கு நடந்தது என்ன என்பதை ஹிந்து நாளிதழ் செய்தியாக  


ஆனால் தாத்தா தான் எழுதிய வசனத்தை விட, பேரன் கொடுத்த டப்பிங் ரொம்பவுமே எஃபெக்டிவாக இருந்ததை, ஒப்புக் கொண்ட மாதிரித்தான் பேரனை 2004 தேர்தலில் எம்பியாக்கி அழகு பார்த்ததும், ஆனா ஆவன்னா கூடத் தெரியாத பேரனைக் காபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக்கிப் பார்த்ததும் இருந்தது. 

ன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட கதையாகி விடப் போகிறது என்று அன்றைக்குத் தாத்தாவுக்குத்  தெரியவில்லை! எல்லாம் அவர் நம்பாத அந்த "விதி" என்றுதான் சொல்ல வேண்டும்!


தாத்தா கூட செய்யத் துணியாத ஒன்றை தயாநிதி துணிந்து செய்தார்!  

ஊழலைச் சொல்லவில்லை! ரத்தன் டாட்டாவை ரொம்ப நேரம் காக்க வைத்துத் தன்னுடைய கித்தாப்பைக் காண்பித்துக் கொண்ட விதம் ஒரு வலிமையான எதிரியை உருவாக்கப் போகிறதென்றோ,வடக்கத்திய கார்பரேட்டுக்கள் தாத்தாவின் அரசியல் வித்தகத்தைவிட அதிக சாமர்த்தியமானவை என்பதோ தயாநிதிக்கு அன்றைக்குத் தெரிந்திருக்கவில்லை! 

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவர்களுக்கு ஆப்பும் அதே மாதிரித்தான்  வரும் என்பது கேடி ப்ரதர்சுக்குத் தெரியவில்லை. மதுரை இளவரசருடன் நேரடியான மோதலில் இறங்கிக் கையைச் சுட்டுக் கொண்டார்கள். இதயம் கனத்துக் கண்கள் பணிக்க ஏற்பட்ட சமரசத்துக்கு கேடி பிரதர்ஸ் அதிக விலை கொடுக்க வேண்டிவந்தது தனிக்கதை!
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவை மிஞ்சிய வசூல் ராசாவாக இருந்தவர் தயாநிதிதான் என்று கூட சொல்கிறார்கள்! சொல்கிற கதையைக் கேட்கும் போதே தலை சுற்றுகிறது.
ன்றைக்கு, தயாநிதி மாறன் மன்மோகன் சிங்கை சந்தித்துத் திரும்பி ருக்கிறார். தன்னுடைய அமைச்சகத்தின் விவகாரங்களைப் பற்றி மட்டுமே பேசி வந்தேன் என்று யாரும் நம்பாத ஒன்றை சொல்லியிருக்கிறார். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற மாதிரி, நான் இன்னும் அமைச்சராகத் தான் இருக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார்! இந்த வார இறுதிக்குள் ராஜினாமா செய்கிற கூத்து அரங்கேறும் என்றும் சொல்கிறார்கள்!

கூடவே அ'னாவும் மத்திய மந்திரிசபையில் இருந்து கழற்றிவிடப்படுவார், கண்டனூர் பானா சீனாவுக்கு இப்போது இறங்குமுகம் ஆனால் ,மந்திரி சபையில் இருந்து கழற்றிவிடப்படமாட்டார் என்றெல்லாம் ஊகங்கள், வதந்திகள் நிறைய உலவிக் கொண்டிருக்கின்றன.   


பரிதாபமாக இருக்கிறது என்று சொல்லி விட முடியாது!



பத்தே ஆண்டுகள் தான்! தயாநிதி மாறன் அரசியல் வால் நட்சத்திரமாகிப் போனதற்கு அதுவே அதிக காலம் தான்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...