Sunday, June 12, 2011

ஜெயலலிதா தொடங்கி வைத்த இலவச அரிசியை வாங்க பெண்கள் ஆர்வம்; இதுவரை 65 சதவீதம் பேர் வாங்கி விட்டனர்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை கடந்த 1-ந்தேதி தொடங்கி வைத்தார். அதேநாளில் இருந்து தமிழ்நாடு முழுவதும் இலவச அரிசி அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா தொடங்கி வைத்த
இலவச அரிசியை வாங்க பெண்கள் ஆர்வம்; இதுவரை 65 சதவீதம் பேர் வாங்கி விட்டனர்
 
அரிசி தரமாக இருப்பதால் பெண்கள் ஆர்வமுடன் வந்து அரிசி வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர். சிலர் புழுங்கல் அரிசி வாங்குகிறார்கள். பச்சரிசி சமைத்து சாப்பிடுபவர்கள் பச்சரிசியை கேட்டு வாங்கிச் செல்கிறார்கள். மக்கள் எந்த அரிசியை கேட்கிறார்களோ அந்த அரிசியை ரேசன் கடைக்காரர்கள் வழங்குகிறார்கள்.
 
தமிழ்நாட்டில் 1 கோடியே 65 லட்சத்து 91 ஆயிரத்து 482 குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசியும், அந்தியோதையா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 18 லட்சத்து 62 ஆயிரத்து 268 பேர்களுக்கு 35 கிலோ இலவச அரிசியும் வழங்கப் பட்டு வருகிறது.
 
இதில் இதுவரை 65 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்கள் இலவச அரிசியை வாங்கி விட்டதாக சிவில் சப்ளை உயர் அதிகாரி தெரிவித்தார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பச்சரிசியை அதிகம் பேர் வாங்கி உள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் புழுங்கல் அரிசியை அதிக மக்கள் வாங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 
சில மாவட்டங்களில் பச்சரிசி 10 கிலோ புழுங்கல் அரிசி 10 கிலோ என பாதி பாதியாக பிரித்து வாங்கி சென்றுள்ளதாகவும் அவர் கூறினார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் 20 கிலோ இலவச அரிசியின் தரம், எடை குறைய கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் அவ்வப் போது ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்று கண்காணித்து வருகின்றனர்.
 
இலவச அரிசியை எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம் என அரசு அறிவித்துள்ளதால் ரேஷன் கடைகளில் அதிகம் கூட்டம் கூடவில்லை. அரிசி தரமாக இருப்பதால் மக்களிடம் அமோக வரவேற்பு இருப்பதை அறிந்த அதிகாரிகள் ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி மூட்டைகளை உடனுக்குடன் அனுப்பி வருகின்றனர்.
 
ரேஷன் அரிசியை கடத்தி வெளி மார்க்கெட்டில் யாரும் விற்காமல் இருக்க பறக்கும் படையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்கள் மாவட்டம் தோறும் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர். மணப்பாறை, வேலூரில் பதுக்கப்பட்ட ரேஷன் அரிசியை கண்டுபிடித்தும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...