பிரபல மலையாள நடிகை அனுஸ்ரீ, அவரது தோழி ஒருவருடன் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.
அங்கு அவர்கள் இருவரும் ஒரு உணவகத்தில் பப்ஸ் சாப்பிட்டு காபி குடித்தனர். இதை அடுத்து, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ரசீதில், 2 சிக்கன் பப்சின் விலை ரூ.500, ஒரு காபி ரூ.100, பால் இல்லாத ஒரு காபி ரூ.80 என்று ரூ.680 என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகை, இது குறித்து அந்த உணவகத்தில் உள்ளவர்களிடம் கேட்ட போது, யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை. மேலும், அந்த உணவகத்தில் உள்ள உணவுகளின் விலை பட்டியலும் அங்கு வைக்கப்படவில்லை. அவர் தான் தோழியுடன் பப்ஸ் சாப்பிட்டதற்கான விலை பட்டியலை பேஸ்புக்கில் வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இது இணையத்தில் வைரலாக, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த செபின் என்பவர் இந்த ரசீதை பார்த்து, மனித உரிமை ஆணையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். இதை அடுத்து, விமான நிலைய இயக்குநர், உணவக மேலாளர், நுகர்வோர் துறை செயலாளர் ஆகியோர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் அவர்களுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது.
No comments:
Post a Comment