எனக்கு சேல்ஸ் கேர்ள்களாக கடைகளில் பணிபுரியும் பெண்கள் மீது தனி வாஞ்சையுண்டு. கூடுமானவரை அவர்களிடம் இனிமையாகவும் ஹாஸ்யமாகவும் பேச முற்படுவேன். ரேக்கை அடியோடு பிரட்டாமல் இந்த கலர், அதிக வொர்க் எல்லாம் இருக்க கூடாதுமா நீயே எடுத்து போடு என்று சொல்லிவிடுவேன்.
பெரும்பாலும் மனதுக்குள் இந்த கலர் தான் என்று முடிவெடுத்து போவதால் எளிதில் முடிந்துவிடும். இன்று அது போல கூட்டமில்லாத ஒரு கடைக்கு சென்று நேவி ப்ளு அதிக வொர்க்ஸ இல்லாத ஜீன் டாப்ஸ் ஒண்ணு என்று சாம்பிளுக்கு சில டிசைனை காட்டினேன். ப்ளேயினாக இருந்தால் கூட பரவாயில்லை என்று கூற அந்த பெண்ணும் எடுத்து கொடுத்தார்.
Xl, XXl இரண்டும் கொடுக்க ஒன்று டைட் இன்னொன்று கொட கொட . என்னம்மா இது இரண்டுமே செட் ஆகல என்றேன். அக்கா கொஞ்சம் பிடிச்சுக்கலாம்ல XXl எடுத்து போட்டு பாருங்க என்றார் ட்ரையல் ரூம் போக வேண்டாம்கா டாப்ஸ் மேலமே போடுங்க என்று கூற போட்டால் செட் ஆகல. அக்கா ப்ராண்டுக்கு ப்ராண்ட் சைஸ் வேறயாகும். உங்களுக்கு இந்த கலர் தானே உட்காருங்கள் நான் எடுத்து வருகிறேன் என்று கூறி வேறு வேறு மெட்டீரியல் ப்ராண்டில் எடுத்து வந்து நான் முன்பு போட்டு பார்த்த டாப்ஸை அடையாளமாக வைத்து அந்த பெண்ணே நான்கை கொடுத்து தேர்ந்தெடுக்க சொல்ல தேர்ந்தெடுத்தேன்.
தேங்கஸ் சொல்லி ரொம்ப அழகா கஸ்டமர் கவனிச்சுகிட்டே மா. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு உன் பேரேன்ன என்றேன். அந்த பெண் மலர்ந்து சிரித்து ப்ரவீணா என்றாள். கூடுதல் அழகு. பேக் பண்ணி கொடுத்ததை வாங்கி கொண்டு பில் போடுமிடம் வந்து அங்கு மேலாளரிடம், டாப்ஸ் செக்ஷன் ப்ரவீணா ரொம்ப நல்லா கவனிச்சிகிட்டாங்க என்று சொல்லிவிட்டு வந்தேன்.
துளி கூட முக சுழிப்பு இல்லாமல் செய்யும் வேலையை சிலரால் தான் சிரித்த முகத்துடன் செய்யமுடியும். அத்தகையவர்கள் தான் வாழ்க்கையை அழகாக்குகிறார்கள் :)
No comments:
Post a Comment