சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம்
என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம்.
என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம்.
தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்கு காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும் சொல்கிறார்கள். அது தவறு.
அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.
பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சாதம் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.
சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும்.
அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.
சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால்
நீர்க்கடுப்பை நீக்கும்.
நீர்க்கடுப்பை நீக்கும்.
கொதிக்கக்கொதிக்க சோறு
சாப்பிடக்கூடாது.
சாப்பிடக்கூடாது.
மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும்.
அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.
பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்லதெம்புடனும்
ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள்.
ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள்.
முதல் நாள் தண்ணீர் சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை
சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் எதுவும் பாதிக்காமல் பாதுகாக்கிறது.
சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் எதுவும் பாதிக்காமல் பாதுகாக்கிறது.
பழைய சோற்றில் தயிர் ஊற்றி
சாப்பிடக்கூடாது. மோரைக்கடைந்து
ஊற்றி சாப்பிட வேண்டும்.
சாப்பிடக்கூடாது. மோரைக்கடைந்து
ஊற்றி சாப்பிட வேண்டும்.
சோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால்
தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.
தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.
பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச்சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.
சிலர் சாம்பார், ரசம், வற்றல்குழம்பு என்று சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு மோர் போட்டு சாப்பிடாமல் எழுந்து விடுவார்கள். இது உடம்புக்கு மிகவும் கெடுதல்.
மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.
மாதாந்திர பிரச்சினை உள்ள பெண்களுக்கு சிவப்பரிசி சாதம் மிகவும் நல்லது.
சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.
வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து
நன்மை செய்கிறது.
நன்மை செய்கிறது.
No comments:
Post a Comment