Wednesday, October 5, 2016

நதி நீரில் நம் பங்கைக் கேட்பது நம் உரிமை

திராவிடக் கட்சிகள் ஆளும் போதெல்லாம் தமிழ்நாட்டில் அணைகள் கட்டி நீரை சேமித்து வைத்திருந்தால் கர்நாடகாவிடம் கேட்க வேண்டிய தேவை இல்லையே என்று சில புத்திகாலிகள் தொடர்ந்து உளறி வருகிறார்கள்.
அணை கட்டி விட்டிருந்தால் மட்டும் அவனுங்க நீரைத் திறந்து விட்டிருக்கப் போகிறார்களா?
சரி.. கர்நாடகாவில் அவ்வளவு அணைகள் கட்டி வைத்திருக்கிறார்களே. அப்போது அவர்கள் அனைத்தையும் சேமித்து வைத்துக் கொண்டு இல்லை என்று புழுகுகிறார்கள் என்று ஒத்துக் கொள்கிறீர்களா?
அல்லது அவர்கள் அணையிலேயே சேமித்து வைத்துக் கொள்ள தண்ணீர் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? அவர்களுக்கே சேமித்து வைத்துக் கொள்ள தண்ணீர் இல்லையென்றால் அப்புறம் இங்கே அணை கட்டி என்ன செய்ய முடியும்? சுற்றுலாத்தலமாக வைத்து சுண்டல், கடலை விற்பனை செய்வதற்காக அணையா?
நதி நீரில் நம் பங்கைக் கேட்பது நம் உரிமை. அந்த விஷயம் கூடப் புரியாமல் ஏன் சப்பைக்கட்டு?
கல்லணை என்றைக்காவது நிரம்பியிருக்கிறதா? அப்புறம் இன்னும் பத்து, பதினைந்து அணைகளைக் கட்டி என்ன செய்ய முடியும்? எங்களுக்கு உரிமையான நீரைத் திறந்து விட்டு விட்டு அப்புறம் நொட்டை, நொண்ணைகளை கொஞ்சமாச்சும் லாஜிக்கலா பேசுங்கப்பா.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...