பொண்டாட்டி சொன்னா கேளுங்க! – இத நான் சொல்லல, உளவியலாளர்கள் சொல்றாங்க!
பொண்டாட்டி சொன்னா கேளுங்க! – இத நான் சொல்லல, உளவியலாளர்கள் சொல்றாங்க!
உடல்ரீதியாக பெண்கள் மென்மையானவர்களாக இருந்தாலும் உளவியல் ரீதியாக

தம்பதியரிடையே எதிர்மறையான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்து
வதை தவிர்க்க வேண்டும். எதற்குமே இல்லை என சொல்வதற்குமுன், இருமுறை சிந்தியுங்கள். ஏனெ னில், நீங்கள் ஆம்! என்று கூறுவதனால் உறவு பலப் படுகிறது, என்பதை அறிந்து நீங்களே ஆச்சரிய மடைவீர்கள்.

குடும்பத்திற்காக பணம் செலவழிப்பது என்பது அவசியமானதுதான்.
ஆனால் அதுவே அத்தியாவசியமாகிவிடாது. பணத்தைவிட அவர்களோடு எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்பது முக்கியமானது. ஏனெனில் பணத்தை விட மனைவிக்காகவும், குழந்தைகளுக்காகவும் செலவழிக்கின்ற நேர மே அதிகம் நன்மை தரக்கூடியது.

கணவன்-மனைவியே தொடர்பற்று இருப்பது சிக்கலுக்கு வழிவகுக்கும்.
எனவே எதை பற்றி வேண்டுமானாலும் பேசுங்கள். எந்த சூழ்நிலையிலும், கணவன்-மனைவி இடையே பேச்சு வார்த் தை குறைந்து விடக்கூடாது. மாறாக அவர்களோடு உங்க பிள்ளைகள், காலநிலை, வீட்டு விவகாரம் செலவினங்கள் பற்றி பேசுங்கள். பேச்சு தொடர்பு குறை கின்றபோது மண வாழ்க்கை சிக்கலில் முடிவடையும்.

தவறுசெய்யாதவர்கள் என்று இவ்வுலகில் எவரும் இல்லை. மனைவி தவறு செய்தால் அவற்றை குத்திக்காட்டி பேசுவதைவிட பிழை களைச்சுட்டிக்காட்டி திருத்தவே முற்பட
வேண்டும். ஏனெனில் மன்னித்தல் என்பது தெய்வ குணத்திற்கு ஒப்பானது. தம்பதியரிடையே மன்னிக்கும் அம்சம் இல்லா விட்டால் எந்த உறவும் நிலைத்திருக்க முடியாது.

வீட்டு வேலைகளை யார் செய்வது என்ற பிரச்சனையில்தான் அதிகமான குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன. பிள்ளைகளை பராமரிப்பது என்பது பெண்கள் மீது மட்டும் திணிக்கப்பட்ட சுமையல்ல. மனைவியானவர் அதை எதிர்ப்பார்க்கா விட்
டாலும் நீங்கள் அறிந்து உதவவேண்டும். ஒருவருக்கொருவர் அன்பாக இரு க்கவேண்டும் என்பதையே சில தம்பதியர் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்

காதல்திருமணம் என்றாலும்சரி பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணம் என்றாலும்
சரி சின்ன சின்ன பிரச்சனைகளுக்குகூட தற்போது நீதிமன்ற வாசலையே தேடி செல்கின்றனர். மனதிற்கு பிடித்தவ ரை சேர்ந்து வாழ்வோம், இல்லாத பட்சத்தில் சந்தோ ஷமா பிரிந்துவிடுவோம் என்ற மனநிலை இன்றைக் கு சாதாரண மாகிவிட் டது.

உயிருக்குஉயிரான தம்பதியராக இருந்துவிட்டு, திடீரென பிரிவது உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிற து. ஆனால் இதை உணராமல் விவாகரத்தையே தீர்வாக நினைக்கிறார்கள். ஆகவே உளவியலாளர் கள் சொல்படி நடங்க அதாவது உங்க பொண்டாட்டி சொல்றதை நீங்க கேளுங்க!

உயிருக்குஉயிரான தம்பதியராக இருந்துவிட்டு, திடீரென பிரிவது உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிற து. ஆனால் இதை உணராமல் விவாகரத்தையே தீர்வாக நினைக்கிறார்கள். ஆகவே உளவியலாளர் கள் சொல்படி நடங்க அதாவது உங்க பொண்டாட்டி சொல்றதை நீங்க கேளுங்க!
நல்ல மனைவி கிடைக்கப்பெற்ற ஆண்களுக்கு மட்டுமே மேற்சொன்ன வாசகங்கள் பொருந்தும்.
No comments:
Post a Comment