பெரும்பாலான வீடுகளில் பூச்சித் தொல்லை ஓயாத பிரச்சினையாக இருக்கும். அதிலும் கரப்பான் பூச்சிதான் முதலிடம் வகிக்கிறது.
கழிவு நீர் செல்லும் வழிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதுதான் கரப்பான் உள்ளிட்ட பூச்சிகளின் தொல்லைகளுக்கு முக்கியக் காரணம்.
இதன் மூலம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கரப்பான் பூச்சி எளிதாக வருகிறது.
பதினைந்து நாள்களுக்கு ஒரு தடவை ப்ளீச்சிங் பவுடரைக் கரைத்து உங்கள் கழிவறையில் கழிவு நீர் செல்லும் சந்துகளில் ஊற்றலாம். ப்ளீச்சிங்

பவுடரின் நெடி பூச்சிகளுக்குப் பிடிக்காது.
அதே சமயம், இதனை சமையல் அறை மற்றும் வீட்டிற்குள் இருக்கும் பாத்ரூம்களில் போடவேண்டாம். நமக்கு இந்த நெடி ஒத்து வராது.
இடுக்கானப் பகுதிகளை அவ்வப்போது சுத்தம் செய்து வையுங்கள். வீட்டில் தேவையற்றப் பொருட்களை வைத்திருக்க வேண்டாம்.
No comments:
Post a Comment