Tuesday, November 29, 2016

நல்லரசு???????????????????

மக்களுக்கான அரசு ..!!
நான் வாங்கும் பெட்ரோலுக்கு வரி
நான் வாங்கும் அரிசி பருப்புக்கு வரி
நான் வாங்கும் துணிகளுக்கு வரி
நான் வாங்கும் செருப்புக்கு வரி
பொழுது போக்க பூங்காக்கள் தியேட்டர்கள் சென்றால் அதற்கு தனியாக கேளிக்கை வரி
நான் வாங்கும் சோப்பு சீப்பு பேஸ்ட் உள்பட அனைத்துக்கும் வரி
நான் வாங்கும் பிஸ்கட் சாக்லெட்களுக்கும் வரி
நான் வைத்திருக்கும் வாகனம் ரோட்டில் செல்ல வரி
நான் வாங்கும் வாகனத்திற்கும் தனியாக வரி
நான் வாங்கும் மின் சாதன பொருட்களுக்கும் வரி
நான் வாங்கும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்திற்கும் வரி
நான் பயணிக்க இரயிலில் முன் பதிவு செய்தால் அதற்கும் வரி
ஹோட்டல்களில் சாப்பிடும் உணவுப்பொருட்களுக்கும் வரி
என் வீட்டிற்கு வரும் குடிநீருக்கும் வரி
நான் குடியிருக்கும் வீட்டிற்கும் வரி
இப்படி அனைத்து வகைகளிலும் வரி என்ற பெயரில் என்னிடம் இருந்து அரசாங்கம் பிடுங்கிக்கொண்டு ....
குடிக்கும் தண்ணீர் ..
படிக்கும் படிப்பு ...
நோய்க்கு வைத்தியம் ...
இவற்றைக்கூட இலவசமாக தர வக்கில்லாத அரசாங்கம்தான் ..
இன்றைக்கு ...
நான் வியர்வை சிந்தி சம்பாதித்து சிறுக சிறுக ...
சேர்த்து வைத்த பணத்தை கருப்புப்பணம் என முத்திரை குத்தி ....
அந்தப்பணத்திலும் பாதியை வரி என்ற பெயரில் பிடுங்கிக்கொண்டு ...
மீதியை நான்கு வருடங்கள் கழித்து தருவதாக சொல்கிறது ....!!
இதுதானே மக்களுக்கான நல்லரசு???????????????????

டாக்சி டிரைவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கபட்ட ரூ.9806 கோடி அதிர்ச்சியில் உறைந்தார்

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் பல்வீந்தர் சிங், டாக்சி டிரைவர். இவருக்கு ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா வங்கியில் கணக்கு உள்ளது. கடந்த நவம்பர் மாதம் இவரது வங்கி கணக்கில் 98,05,9510,231 ரூபாய் கணக்கு வரவு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் மறு நாளே அவர் கணக்கில் இருந்து அந்த பணம் எடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இது குறித்து பல்வீந்தர் சிங் பலமுறை வங்கியில் சென்று கேட்டும் எந்த பதிலும் இல்லை.தற்போது இது தொடர்பாக வருமான வரிசோதனை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பல்வீந்தர் சிங் கூறியதாவது:-
நான் பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் கணக்கு தொடங்கினேன். எனது கணக்கில் மொத்தம் ரூ.3 ஆயிரம் இருந்தது.எனது கணக்கில் ரூ.9806 கோடி வரவு வைக்கபட்டது தொடர்பாக பல முறை வங்கிக்கு சென்றேன் ஆனால் யாரும் எந்தவித பதிலும் சொல்ல வில்லை.அதே சமயம் எனது பழைய பாஸ் புக்கை வாங்கி கொண்டு 7 ந்தேதி புதிய பாஸ் புக் வழங்கினார்கள்.ஆனால் அதில் ஏற்கனவே எனது கணக்கில் வரவு வைக்கபட்ட 9806 கோடி கணக்கு விவரம் எதுவும் இல்லை.
வங்கியின் கிளை மேலாளர் ரவீந்தர் குமார் எந்த வித தகவலும் என்னிடம் கூற மறுத்து வந்தார்.இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வங்கியின் மேலாளர் குறிப்பிடும் போது இது தவறுதலாக பதிவு செய்யபட்டு உள்ளது. மறுநாள் அது சரிசெய்யப்பட்டு விட்டது..

உங்கள் கட்சியின் ஆட்சியில் சம்பாதித்தவர்களுக்காகவும் உங்களுக்காகவும்தான் போராட்டம்

கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் விவசாயிகள் மீனவர்கள் 
பூ விற்பவர்கள் காய்கறி வியாபாரம்
செய்வோர் சாலையோரங்களில் கடை வைத்திருப்போர் சிறு குறு தொழில் செய்வோர் மீண்டும் ஒருமுறை சிறு குறு விவசாயிகள் மற்றும்
நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் கிராமங்களில் உள்ள மக்கள் அதிகம்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக
போராட்டம் நடத்துவதாகவும் எதிர்கட்சிதலைவரும் திமுக பொருளாளருமான திரு.ஸ்டாலின்
அவர்கள் தனது முகநூல் பக்கத்தில்
பதிவிட்டுள்ளார்.
இவர் மேலே குறிப்பிட்டுள்ள யாரிடமும்
இவர் கட்சியின் கவுன்சிலர்கள் வைத்துள்ள
விலை உயர்ந்த கார்கள் கிடையாது.
யாரிடமும் இவரது கட்சியின் ஒன்றிய 
செயலாளரிடம் இருக்கும் கோடிக்கணக்கிலான பணமும் கிடையாது.
இவரது கட்சியின் மாவட்ட செயலாளர்கள்
கோடிக்கணக்கில் பணம் கொடுத்து பிற


கட்சியிலிருந்து அழைத்து வரப்பட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் முன்னாள் இன்னாள் எம்எல்ஏக்கள் முன்னாள் இன்னாள் எம்பிக்கள் முன்னாள் மந்திரிமார்கள்
இவரது முந்தய ஆட்சியில் மணல்
கொள்ளையடித்த கட்சிகாரர்கள்
இவரது முந்தய ஆட்சியின்போது வாரம்தோறும் சினிமா படங்களை 
வெளியிட்ட குடும்ப உறுப்பினர்கள் போன்றோர்தான்
கோடிக்கணக்கில் பணத்தை வைத்துக்கொண்டு பாதிக்கப்படுகிறார்களே தவிர மேலே இவர் சொன்ன யாரிடமும்
500 1000 ரூபாயும் இல்லை.கஷ்டபடவும்
இல்லை.எந்த கிராம மக்களிடமும் ரொக்க
கையிருப்பும் இல்லை அதனால் அவர்கள்
வருத்தபடவும்இல்லை. விவசாயிகள் நிலை
இன்னும் மோசம். பருவமழை பொய்த்ததால்
அழுவதா சிரிப்பதா என்ற நிலையில் உள்ளான்.காரணம் மழை பெய்தால்
விவசாயம் செய்ய கடன் வாங்கவேண்டும்
மழை பெய்யாவிட்டால் கடன் வாங்கவேண்டாம் ஆனால் கஷ்டபடவேண்டும்.இந்தநிலையில்தான்
விவசாயி உள்ளான்.
உங்கள் கட்சியின் ஆட்சியில் சம்பாதித்தவர்களுக்காகவும் உங்களுக்காகவும்தான் போராட்டம்
எனபதை மேலே நீங்கள குறிப்பிட்டுள்ள
அனைத்து தரப்பு மக்களும் அறிவர்.

நன்றி கடன்பட்டுள்ளேன்!

'ராஜா சார் இசை­யில், ‘பூவே பூச்­சூ­டவா’ படத்­துக்­குத்­தான் முத­லில் எனக்கு வாய்ஸ் டெஸ்ட் எடுத்­தாங்க. ஆனா, அந்­தப் படத்­துக்கு முன்­னா­டியே ‘நீதானா அந்­தக்­கு­யில்’ படத்­துல ஒரு பாடல் பாட வச்­சார் ராஜா சார். அப்போ எனக்­குப் பெரிசா கரெ­க்க்ஷன் எது­வும் சொல்­லலை.
‘பூவே பூச்­சூ­டவா’ படத்­தில் பாடி முடிச்­ச­தும், கன்­ஸோ­லுக்­குப் போனேன். ‘என்ன கரெ­க்ஷன்னு நான் சொல்ல மாட்­டேன். நீயே கேட்டு, எங்­கெங்க தப்பு பண்­ணி­ருக்­கேன்னு செல்ப் அன­லைஸ் பண்­ணு’னு சொல்­லிட்­டார். நானும் பாட­லைத் திரும்­பத் திரும்­பக் கேட்­டுட்டு, எங்­கெல்­லாம் தப்பு பண்­ணி­ருக்­கேன்னு எனக்கு பிடி­பட்­ட­தைச் சொல்லி, ‘கரெ­க்ஷன் பண்­ணட்­டுமா?னு கேட்­டேன். ‘வேணாம், இந்­தப் பாட்டு இப்­ப­டியே போகட்­டும். இதை­யெல்­லாம் மன­சுல வச்­சுக்­கிட்டு, அடுத்­த­டுத்த பாடல்­கள் பாடும்­போது கவ­னமா இரு’னு சொன்­னார்.
குரல்ல எக்ஸ்­பி­ர­ஷன்ஸ் கொண்டு வர்­ற­துக்­காக, ஜான­கி­யம்மா பாடல்­களை நிறைய கேட்­கச் சொல்­வார். ‘ராசாவே உன்னை நம்பி…’ பாட்டை ஜான­கி­யம்மா பாடும்­போது, ‘ஒண்­ணுமே தெரி­யாத பொண்ணு பாடுற மாதிரி இருந்தா போதும்’னு சொல்லி, ட்யூன் மட்­டும் சொல்­லிக் கொடுத்­தி­ருக்­கி­றார் ராஜா சார். ‘அதை அவங்க எப்­ப­டிப் பாடி­யி­ருக்­காங்­கனு பார். அவங்­க­ளோட ஒவ்­வொரு பாட்­டும் இப்­ப­டித்­தான், அதைத் தொடர்ச்­சியா கேளு’னு அட்­வைஸ் கொடுத்­தார்.
‘சிந்து பைரவி’ படத்­தில் பாடு­வ­தற்­காக என்­னைக் கூப்­பிட்­டி­ருந்­தாங்க. அந்த சம­யத்­துல நான் கேர­ளா­வுல் இருந்­தேன். எனக்கு எம்.ஏ.எக்­ஸாம்ஸ் நடந்­துக் கிட்­டி­ருந்­துச்சு. ‘ராஜா சார் பாட்டை மிஸ் பண்­ணி­டக்­கூ­டா­து’னு சொல்லி, அப்பா என­னைக் கூட்­டிட்டு வந்­தார். பாட்­டப் பாடிட்டு, அன்­னைக்கு இரவே கேரளா திரும்­ப­ணும். அந்­தப் பாடல் பதிவு முடிஞ்­ச­தும், ‘இன்­னொரு பாட்டு பாட­ணும். நாளைக்­கும் இங்­கேயே இருக்க முடி­யுமா?னு ராஜா சார் கேட்­டார். மறு­நாள் எக்­ஸாம் இருக்­கும் விஷ­யத்தை, ரொம்ப தயங்­கித் தயங்கி ராஜா சார்­கிட்டே அப்பா சொன்­ன­தும், ‘எம்.ஏ.லாம் அப்­பு­றம் பண்­ணிக்­க­லாம். அதுக்­கும் மேல வரப்­போ­றா’’னு ராஜா சார் சொன்­னார். ஒரே குழப்­பம் ‘படிப்பு விஷ­யா­மாச்­சே’னு அம்மா தயங்­கி­னாங்க. ‘சரி, லேட்டா எக்­ஸாம் எழு­திக்­க­லாம்’னு முடிவு பண்ணி, மறு­நாள் தங்­கி­யி­ருந்து அந்­தப் பாட்­டைப் பாடி­னேன். இன்­னைக்கு வரைக்­கும் அந்­தப் பாடல்­தான் எனக்கு பெரிய அட்­ரஸா அமைஞ்­சது. எங்கே போனா­லும் இப்­ப­வும் எல்லா மேடை­க­ளி­லும், ‘சிந்து பைர­வி’­யில் வர்ற ‘பாட­றி­யேன் படிப்­ப­றி­யேன்…’ பாட்­டைப் பாடச் சொல்­லிக் கேட்­க­றாங்க. இன்­னைக்கு ஒரு பாட­கியா நான் நாலு­பே­ருக்­குத் தெரி­யு­றேன்னா, அதுக்கு ராஜா சார்­தான் கார­ணம். அவ­ருக்கு நான் ரொம்­பவே நன்­றிக்­க­டன் பட்­டி­ருக்­கேன்’ என கண்­கள் நெகிழ்ச்­சி­யில் மிதக்க சொல்­கி­றார் சித்ரா....

உங்கள் குல தெய்வத்தை நீங்கள் வசிக்கும வீட்டிற்குள் அழைக்க எளிய வழி உண்டு ;

குல தெய்வ சக்தியை வீட்டிற்க்குள் அழைத்து, வீட்டில் சுபிட்சமும், செல்வவளமும் பெறும் எளிய வழிமுறை உங்கள் குல தெய்வத்தை நீங்கள் வசிக்கும வீட்டிற்குள் அழைக்க எளிய வழி உண்டு ;
மஞ்சள், மண், சந்தணம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி - இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து, ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு வீட்டு வாசற்படி உட்புறம் நிலைப்படியின் மையத்திற்கு மேல் சுவரில் ஆணி அடித்து அதில் முடிந்து வைத்த துணியை ஆணியில் மாட்டி பத்தி சூடம் காண்பித்து வந்தால் ஒரு வாரத்தில் நம்முடைய குலதெய்வம் வீட்டிற்குள் வரும்.
வெட்டிவேர் சிறிதளவு, பச்சை கற்பூரம் சிறிதளவு, ஏலக்காய் சிறிதளவு, பன்னீர் - இவை அனைத்தையும் ஒரு கலச செம்பில் போட்டு பன்னீர் எந்த அளவோ அதே அளவு தண்ணீர் ஊற்றி, கலச சொம்பை சுற்றி நூல் சுற்ற தெரிந்தவர்கள் சுற்றலாம். நூல் சுற்ற தெரியாதவர்கள் பட்டு துணியை சுற்றி விடலாம் ( துணிக்கடையில் கலசத்திற்கு சுற்றும் பட்டு துணி என்று கேட்டால் கிடைக்கும்).
பூஜையறையில் ஒரு பலகையை வைத்து, அதில் வாழை இலை வைத்து அதில் பச்சரிசி பரப்பி அதன் மேல் கலச செம்பை வைத்து அதன்மேல் வாழைப்பூவை வைத்து (நுனி பகுதி மேல் நோக்கி இருக்க வேண்டும்.) வாழைப்பூவுக்கும் கலசத்திற்கும் இடையில் மாவிலை அல்லது வெற்றிலை சுற்றி வைத்து அதன்மேல் வாழைப்பூவை வைக்கவும்.
வில்வ இலை அல்லது ஊமத்தம் பூ (கிராமங்களில் சிறுவர்கள் ரேடியோ பூ என்று சொல்வார்கள்) அர்ச்சனை செய்யவும். வாழைப்பூ மூன்று நாட்கள் வரை தாங்கும். பூஜை மூன்று நாட்களே போதும். மேலும் தொடர்ந்து செய்ய விரும்புவர்கள் வாழைப்பூவை மட்டும் மாற்றினால் போதுமானது. பூஜை முடிந்ததும் பச்சரிசியை சமையல் செய்தும், வாழைப்பூவை வடை செய்தும் அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.
கலசத்தில் உள்ளவற்றை வீட்டில் தெளித்துவிட்டும், குளிக்கும் தண்ணீரில் விட்டு குளித்துவிடவும்.
பூஜைக்குறிய மந்திரம்:-
ஓம் பவாய நம ஓம் சர்வாய நம ஓம்
ருத்ராய நம ஓம் பசுபதே நம ஓம் உக்ராய நம
ஓம் மஹாதேவாய நம ஓம் பீமாய நம ஓம்
ஈசாய நம
தினமும் 11 தடவை காலையும் மாலையும் கூறி பூஜை செய்து வந்தால், நாம் எண்ணியதை நம் குலதெய்வம் தருவார்கள்.

பன்னாட்டுப் பழமொழிகள் :

" பணக்காரனாக ஆவதற்கு பணத்தைச் சேர்த்து வைக்க வேண்டியதில்லை . தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதும் . " -ஸ ்பெயின் .
" போலியான நண்பனாக இருப்பதைவிட , வெளிப்படையான எதிரியாக இருப்பது மேல் ." - இங்கிலாந்து .
" தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு ஒரு சொட்டுத் தண்ணீருக்கு முன்னால் ஓராயிரம் முத்துக்கள் மதிப்புள்ளது ஆகாது ." - பாரசீகம் .
" செழிப்பானபண்ணையிலிருந்துகுதிரையைவாங்கு : ஏழை வீட்டிலிருந்து பெண்ணை எடு ." - எஸ்டோனியா .
" மனிதர்கள் நேசமாயுள்ள இடத்தில் தண்ணீர் கூட இனிப்பாய் இருக்கும் ." - சீனா .
" நாய் குரைக்கிற போதெல்லாம் நீங்கள் தாமதித்தீர்களேயானால் , நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லவே முடியாது ." - அராபி .
" ஒருவன் ஆயிரம் மைல்கள் நடந்தாலும் , ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துத்தான் அத்தனை மைல்கள் நடக்க முடிந்ததென்பதை மறவாதீர்கள் ." - சீனா .
" பக்தியோடு பிரார்த்தனை செய் . ஆனால் சுத்தியலை பலமாய் அடி ." - இங்கிலாந்து .
" உன் அண்டை வீட்டுக்காரனை நேசி . ஆனால் உன் வீட்டு வேலியை எடுத்து விடாதே ." - ஜெர்மன் .
" ஆசை பேராசையாகவும் , அன்பு வெறியாகவும் மாறும் போது அமைதி விலகி எங்கோ போய்விடுகிறது ." - ஜப்பான்

EGo.................................

முல்லா ஒருமுறை தன் வீட்டு சுவரில் மாட்டுவதற்காக ஒரு கடிகாரம் வாங்கினார்.சுவரில் மாட்ட ஆணி அடிக்க சுத்தியலைத் தேடினார்..கிடைக்கவில்லை..பக்கத்து வீட்டு காரரிடம் இரவல் வாங்கலாம்னு நினைத்தார்.
ஆனால் ராத்திரி நேரமாச்சே .சரி காலையில் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..
காலைல பக்கத்து வீட்டுக்கு கிளம்பும் போது "ச்சே காலங்கார்த்தால இரவல் கேக்க வந்துட்டானே" ந்னு நெனச்சுட்டா என்ன செய்வது .சரி அப்புறம் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..
இப்படியே ஒவ்வொரு நாளும் "விளக்கு வெக்குற நேரத்துல சுத்தியல் கேட்டு வந்துட்டான் பார்"
"வெள்ளிக் கிழமை அதுவுமா இரவல் கேக்கறானே"
பக்கத்து வீட்டு காரன் இப்படி எதையாவது சொல்லி விட்டால் அவமானமாகி விடுமே என்ற தயக்கத்திலேயே பல நாட்கள சுத்தியலைக் கேக்காமல் விட்டு விட்டார் முல்லா..
மாட்டப்படாத கடிகாரம் அவர் கண்ணில் பட்டுக்கொண்டே அவரை வெறுப்பேத்தியது..
ஒரு நாள் விருட்டுனு பக்கத்து வீட்டுக்கு போய்" யோவ் போய்யா உன் சுத்தியும் வேணாம் ஒண்ணும் வேணாம் நீயே வெச்சுக்கோ" ந்னு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்..பக்கத்து வீட்டு காரருக்கோ ஒண்ணுமே புரியல..
இந்த கதை மாதிரி தான் அடுத்தவரிடம் தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று பேசாமல் நாமாகவே அவர் இப்படி சொல்லுவாரோ அப்படி சொல்லுவாரோ என்று மாட்டப் படாத கடிகாரத்தை போல்,நன்கு பழகியவர்களிடம் பிரச்சனைகளை தீர்வு செய்யாமல் பகைமையை வளர்த்துக் கொண்டு அந்நியமாக்கி கொள்கிறோம்.
நெருக்கமான இருவருக்குள் ப்ரச்சனைகள் வருவதற்கு மூன்றே காரணங்கள் தான் இருக்கின்றன.
ஒன்று ஒருவர் சொல்லும் காரணம்
இன்னொன்று இன்னொருவர் சொல்லும் காரணம்
மூன்று உண்மையான காரணம்
இந்த உண்மையான காரணம் என்ன என்று இருவரும் உட்கார்ந்து பேசினால் தான் தீர்வு கிடைக்கும்..தங்களுக்குள் சண்டையும் சச்சரவும் வர என்ன காரணம் என்று தெரிந்து கொண்டால் அதற்கு என்ன தீர்வு என்று கண்டு பிடிக்க முடியும்..
பரம வைரிகளான இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளே சமரச பேச உட்காரும் போது
இருவர்..(அவர்கள் கணவன் மனைவியோ ,அப்பா பிள்ளையோ அண்ணன் தம்பியோ அல்லது இரு நண்பர்களோ) உட்கார்ந்து சமரசம் பண்ண முடியாதா என்ன?.. நிச்சயமாக முடியும்.
நமக்குள் இருக்கும் EGo வை போகசொன்னாலே போதும்..

துளசி.

மருத்துவர்கள் வெறும் மருத்துவர்களாக மட்டும் அல்லாமல். மனோ தத்துவ நிபுணர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஒரு அம்மாக்கு புற்று நோய் மிக முற்றிய நிலையில் தான் கண்டு பிடிக்கப்பட்டது. அவங்களுக்கு அறுவை சிகிச்சையும் செய்யபட்டது. ஆனால். அந்த அம்மாவை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர். உங்களுக்கு என்ன தான் ஆபரேஷன் பண்ணாலும்..... ரொம்ப. அது உங்களுக்கு முற்றி போனவுடன் தான். ஆபரேஷன் பண்ணியிருக்கு. அதனால. நீங்க அதிக பக்ஷம் இன்னும் 3 மாதங்கள் தான் உயிரோடு இருப்பீங்கனு. அந்த மருத்துவர் சொல்ல. அதை கேட்டு பயத்தாலேயே தினம், தினம் அவுங்க செத்து கொண்டு இருந்தார்கள்.
எனது நண்பர் பில்டர் சதீஷ் சொன்னதின் பேரில். நான் அவங்களை நேரில் சென்று பார்த்து கவுன்சிலிங் கொடுத்து. தினமும் வெறும் வயிற்றில். செம்பு பாத்திரத்தில் நிரப்பிய துளசி நீரை குடியுங்கள். என்று எனக்கு தெரிந்த. புற்று நோய்க்கான சிறந்த மருத்துவத்தையும் அவங்களுக்கு சொல்லி விட்டு வந்தேன். மேலும் அங்கு ஒரு கொலையும் செய்தேன். நான் கொன்றது யாரை தெரியுமா. உலகின் மிக கொடிய நோயான பயத்தை.
இப்பொழுது அந்த அம்மா. பயபடுவதே இல்லை. நான் கூறியபடியே. தினமும் முதலில் துங்கி எழுந்தவுடன். அவுங்க. சிரித்த முகத்துடன் கண்ணாடியை பார்கிறார்கள். எனக்கு இன்றிலிருந்து எல்லாம் நன்றாகவே இருக்கும். நான் நீண்ட நாள் வாழுவேன் என்று உரக்க. தன்னம்பிக்கையோடு கூறுகிறார்கள். பிறகு பத்து நிமிடம் வஜ்ராசனம். அதை செய்த பிறகு. வெறும் வயிற்றில் செம்பு பாத்திரத்தில் இருந்து துளசி நீரை எடுத்து அருந்துகிறார்கள். உடல், மனம் இரண்டுமே ஆரோக்யமாக இப்பொழுது அவங்களுக்கு இருக்கு.
சென்ற 2015 ஏப்ரல் மாதம் அந்த அம்மாவிற்கு மருத்துவர் 3 மாதம் கெடு விதித்தார்.
இன்றுவரை அந்த அம்மா ஆரோக்யமாக இருக்காங்க.
மரபணு மாற்றப்பட்ட காய்கள், பழங்களை தெரிந்தோ, தெரியாமலோ நாம் உண்பது புற்று நோய் வருவதற்கான முக்கிய காரணம். வடக்கே பல இடங்களில் புற்று நோயாளிகளுக்கு என்று தனியாக சிறப்பு ரயில் விடும் அளவு புற்று நோயாளிகள் அங்கு இருக்கிறார்கள்.
புற்று நோய் என்று அல்ல. 448 நோய்களுக்கு ஒரே மருந்து துளசி.
துளசியின் மகத்துவம் பாப்போம்.
ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை. எவ்வளவு தாரளமாக போட முடியுமோ அவ்வளவு தாராளமாக. செம்பு பாத்திரத்தில். ஒரு 1.5, 2 லிட்டர் தண்ணீர் விட்டு 8 மணி நேரம் ஊர வைக்க வேண்டும். பின்னர். வெறும் வயிற்றில். ஒரு டம்ளர்ரோ, இரண்டு டம்ளர்ரோ குடிக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம். அதாவது 48 நாட்கள் குடித்தால். புற்று நோய் பூரணமாக குணம் ஆகும். அது உடலின் எந்த பகுதியில் இருந்தாலும். மிக முற்றி போனால். ஆரம்ப நிலையிலேயே. புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு. இந்த துளசி சிகிச்சையை மேற்கொண்டால். புற்று நோய் மட்டுமல்ல. 448 விதமான நோய்கள் குணமடையும். துளசியின் மருத்துவ பண்புகள். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
சரி. அந்த துளசி நீரை. எவர்சில்வர் பாத்திரத்தில் விட்டு குடிக்கலாம். அதிக வசதி இருந்தால். தங்க பாத்திரத்தில் கூட விட்டு குடிக்கலாம். ஏன்? செம்பு பாத்திரம்.
தாமிர சக்த்து [செம்பு] உடலுக்கு தேவையான ஒன்று. தைராய்ட் வர உடலில் தாமிர சக்தி குறைவதும் ஒரு காரணம். தைராய்ட் நோய் உள்ளவர்கள் செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துதல். தைராய்ட் நோய்க்கு சிறந்த சிகிச்சை. கீழ் வாதம் முதலான நோய்கள் குணமாகும். உடலில் உள்ள புண்களை குனப்படுத்துவதுடன் . புதிதாக. உடலில் அணுக்களையும் உற்பத்தி செய்யும் சக்தி தாமிரத்திர்க்கு உண்டு. தாமிர பாத்திரத்தில் நிரப்படும் சாதாரண நீரே. உடற் கட்டியை குணபடுத்தும் என்றால். தாமிர துளசி நீர்.
துளசி நீர், புற்று நோயை குணபடுத்தும் என்று சித்த மருத்துவமோ, ஆயுர் வேத மருத்துவமோ. சொல்லியிருக்கா என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நீ சொல்லும் இந்த செய்தி. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா? கை வைத்தியம், பாட்டி வைத்தியம் பண்ணி சரி பண்ண. புற்று நோய் ஒன்னும் bp, சுகர் அல்ல. அது ஆட் கொல்லி நோய். என்று. உங்களில் பலர் கேட்பது புரிகிறது. உங்களது கேள்வி. மிக நியாயமானதும் கூட. துளசி புற்று நோயை குணபடுத்தும் என்பதை. உலக அளவில் நடந்த பல அறிவியல் ஆய்வுகள் முடிவு செய்துள்ளது. அதில் ஒன்று. NDTV இதை பற்றி அமெரிக்காவில் நடந்த ஆய்வு சம்பந்தமாக செய்தி வெளியிட்டு உள்ளது. அதன் லிங்க் கீழே.
Tulsi Cures Cancer என்று google ளில் டைப் செய்து பாருங்கள். இதே போல். பல ஆய்வுகளின் முடிவை google சொல்லும்.
வியாதி உள்ளவர்கள் தான். தாமிர பாத்திரத்தில் துளசி நீரை விட்டு குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும்
தினமும் ஒரு டம்பளர் துளசி நீரை பருகுங்கள். மண் பானை நீரை விட தாமிர பாத்திர நீர் உடல் ஆரோக்யத்திற்கு அவ்வளவு நல்லது.
பெருமாள் கோவில்களில். தாமிர பாத்திரத்தில் துளசி நீர் பன்னெடுங்காலமாக கொடுக்கும் ஆன்மிக சடங்கினுள் ஒரு மிக பெரிய அறிவியல் உண்மை ஒளிந்து இருப்பது உங்களுக்கு புரிகிறதா....🙏

Monday, November 28, 2016

மோடியின் நண்பர்கள் முன்பே பணத்தை மாற்றிவிட்டனர் – யாதின் ஓசா

யாதின் ஒசா குஜராத்தின் பி.ஜே.பி முன்னாள் எம்.எல்.ஏ. இவர் மோடியின் பணத்தை மதிப்பிழக்கச் செய்த நடவடிக்கை பற்றிய தகவல் முன்கூட்டியே பி.ஜே.பியின் அபிமான தொழிலதிபர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி பிரதமர் மோடிக்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளார்.
இவர் ஒரு காலத்தில் மோடியுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றியவர். பா.ஜ.க தலைவர் அமித் ஷா அரசியல் வாழ்வைத் துவங்கி வைத்தவர். அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள கடிதம் பலரால் பகிரப்பட்டு மிக விரைவில் பலரையும் சென்றடைந்துள்ளது.
yatin-oza
யாதின் ஓசா
ஒசா, மோடி குஜராத் முதல்வராயிருந்தபோது அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக கிச்சன் காபினெட்டில் இருந்தவர். இவர் முதன்முதலாக சபர்மதி தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அமித் ஷாவை தனது தேர்தல் முகவராக (election Agent) நியமித்திருந்தார். 1997 தேர்தலில் அமித் ஷா வேட்பாளராக தேர்வாவதற்கு உதவியுள்ளார். சமீபத்தில் பா.ஜ.கவில் ஓரங்கட்டப்பட்டதால் அதிருப்தியில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.
இக்கடிதத்திற்கு முன்னதாக ஒசா கெஜ்ரிவாலுக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் பீகார் தேர்தலையொட்டி அமித் ஷாவிற்கும் அக்பருதீன் ஓவாய்சிக்கும் நடந்த திரைமறைவு பேரத்தை அம்பலப்படுத்தியிருந்தார். அவர்களுக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது தானும் உடனிருந்ததாக கூறினார். பீகார் தேர்தலின் போது அக்பருதீன் ஓவாய்சி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு சமூகத்தில் மதவாத பிளவை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டு அமித் ஷாவினால் எழுதிக் கொடுக்கப்பட்டது என்ற உண்மையை வெளியிட்டிருந்தார்.
***
பிரதமர் மோடிக்கு பணத்தை மதிப்பிழக்கச் செய்த நடவடிக்கை தொடர்பாக எழுதிய கடிதம்:
பெறுநர்:
ஸ்ரீ நரேந்திர மோடி
மதிப்பிற்குரிய இந்தியப் பிரதமர்
7, லோக் கல்யாண் மார்க்,
நியூ டெல்லி
அன்புள்ள நரேந்திரபாய்,
இந்தக் கடிதம் கிடைக்கும் வேளையில் சிறப்பான உடல் நலத்துடனும், மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நவம்பர் 8, 2016 அன்று ரூபாய் நோட்டுகள் குறித்து நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வரலாற்று முக்கியத்துவமுள்ள தீரச்செயலுக்காக என் இதயத்திலிருந்து உங்களை வாழ்த்தினேன். துரதிருஷ்டவசமாக என் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர் சொன்ன செய்தி இது: நவம்பர் 8 நண்பகல் 12 மணியளவில் அகமதாபாத் நகரத்தின் பெரிய தொழிலதிபரின் மனைவி அங்கிருந்த முன்னணி நகைக்கடைக்கு வந்து முன்பே பதிவு செய்து வைத்திருந்த 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை வாங்கினார். அவர் வரும்போது தங்கம் பெட்டியில் தயாராக இருந்தது. இரண்டு நிமிடங்களில் பணம் செலுத்தப்பட்டு வியாபாரம் முடிந்தது. அவர் அந்த கடைக்கு முன்பே பதிவு செய்திருந்த 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை வாங்கத்தான் எதேச்சையாகக் கடைக்கு வந்தார். அவர் ஒரு மிகவும் பிரபலமான மருத்துவர்.
amit-shah-modiஉங்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி ஒரு காலத்தில் உங்கள் கிச்சன் காபினெட்டில் இருந்திருக்கிறேன். அந்த வகையில் நாட்டின் 50 சதவீதக் கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் உங்களுக்கு நெருக்கமான அன்பான அந்த தொழிலதிபர்களுக்கு உங்களது ரூபாய் நோட்டு நடவடிக்கை குறித்த தகவல் நீங்கள் அறிவிப்பதற்கு முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு உடனே பொறி தட்டியது. இதைப் பற்றியே ஒரு நாள் முழுவதும் சிந்தித்து, விசாராணைகள் நடத்திய பிறகு எனக்குக் கிடைத்த விவரங்கள் அதிர்ச்சியளிக்கக் கூடியவை. இந்த வெகுஜன நோக்கிலான நடவடிக்கையின் மூலமாக இந்த நாட்டு மக்களை நீங்கள் முட்டாள்களாக்கி விட்டீர்கள்.
உண்மையில், தேச நலனுக்காக என்று சொல்லி நீங்கள் எடுத்த நடவடிக்கை உங்களுக்கு நெருக்கமானவர்களையும் அன்புக்குரியவர்களையும், உங்கள் கட்சியையும் அதன் உறுப்பினர்களையும் மேலும் பணக்காரர்களாக்குவதற்காகத்தான்.
அமித் ஷாவிற்கு நெருக்கமான கூட்டாளிகள் நவம்பர் 8 இரவு முதல் பணப் பரிவர்த்தனை வர்த்தகங்களில் ஈடுபட்டார்கள் என்பதை தெளிவாகவும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையிலும் நிரூபிப்பதற்கான வீடியோ பதிவு என்னிடம் உள்ளது. அவர்களின் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் முன்னால் 37 சதவீதக் கழிவுடன் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காக ஒரு பெரிய வரிசை இருக்கிறது. தனது அடையாளத்தை வெளிக்காட்டாமல் குறைந்தபட்சம் 1 கோடி ரூபாய்களை எடுத்துச் சென்றால் அங்கிருக்கும் ஊழியர்கள் அதை எண்ணி 63 லட்சம் செல்லத்தக்க ரூபாய்களைக் கொண்ட ஒரு பையைக் கொடுப்பார்கள்.
இந்த வீடியோவை வெளியிட்டு விடலாம். ஆனால் நீங்கள் அமித் ஷாவின் சகாக்களை விட்டுவிட்டு வரிசையில் இருப்பவர்களைத் தண்டிப்பீர்கள். ஆயினும் நான் அந்த வீடியோவை இரண்டு அல்லது மூன்று மூத்த ஊடகவியலாளர்களுக்குக் காட்டிவிட்டு உங்களுக்கு தகவல் அனுப்புவேன். ஒன்றுக்கு இரண்டு முறை அந்த வீடியோவைச் சோதித்து விட்டு நான் சொல்வது உண்மைதானா என்று அவர்களிடம் நீங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
people-queueகூட்டுறவு வங்கிகளில் பெரிய அளவில் நடைபெற்றுள்ள முறைகேடுகளையும், சட்டவிரோதச் செயல்களையும் பற்றி விவரம் அறிந்த பின்தான் நேற்று நீங்கள் அவ்வங்கிகளின் மீது தடைவிதித்தீர்கள் என்று உங்களை அறிந்த யாரும் நம்பமாட்டார்கள்.
உங்களுடைய எதிரி கூட உங்களின் செயல்திறனையும், திறமையையும், புத்திசாலித்தனத்தையும் மதிக்கிறார்கள். அந்த முக்கியாமான அம்சத்தினைக் குறித்து நீங்கள் யோசிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள் என்பது மட்டும் நிச்சயம். நீங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கையின் முழு வரைபடத்தையும் மனதில் கொள்ளாமல் நீங்கள் ஒரு செயலில் இறங்க மாட்டீர்கள் என்று உங்களை நன்கு அறிந்த எனக்குத் தெரியும். ஒரு நடவடிக்கையினால் விளையப்போகும் அனைத்து சாதக பாதகங்களும் உங்கள் சிந்தையில் பிரகாசமாக இருக்கும்.
நான் மிகுந்த மரியாதையுடன் சொல்லவிரும்புவது என்னவென்றால், கூட்டுறவு வங்கிகளின் முறைகேடுகள் அனுமதியுடந்தான் நடந்திருக்கின்றன. ஏனெனில், குஜராத்தில் உள்ள அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் பா.ஜ.க ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. நவம்பர் 8 இரவு 9 மணியிலிருந்து நவம்பர் 9 அதிகாலை 5 மணி வரை இந்த வங்கிகள் ரூ.500 மற்றும் ரூ.1000 தாள்களுக்கு குறைந்த மதிப்புடைய நோட்டுகளை மாற்றிக் கொடுத்திருக்கின்றன. நவம்பர் 8 அன்று நாட்டிலுள்ள எல்லா வங்கிகளிலும் துல்லியமாக எவ்வளவு மதிப்புடைய ரொக்கம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது என்ற விவரத்தை ரிசர்வ் வங்கி மூலமாகக் கேட்டிருக்கிறீர்கள். அந்த விவரங்களை வைத்து நான் சொன்னது உண்மைதானா என்று நீங்களே உறுதிசெய்து கொள்ளுங்கள். நான் சொன்னது தவறு என்று நிரூபிக்கப்பட்டால், நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பேன் என உறுதியளிக்கிறேன்.
சுறாமீன்களும் திமிங்கிலங்களும் தப்பித்து விட்டன, உங்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு முன்பே உங்களது நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டு விட்டது என்று இந்திய மக்களிடையே நிலவும் சந்தேகங்களைப் போக்குவதற்கு, நீங்கள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் இருப்பதாக அறிவித்தவர்களைப் பற்றி இந்திய அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தகவல் வெளியிட வேண்டும். ஃபோர்ச்சூன் 300 பட்டியலில் இருக்கும் 300 தொழில் நிறுவனங்களின் எந்தவொரு சேர்மனோ, நிர்வாக இயக்குனரோ அல்லது இயக்குனரோ இப்படி அறிவித்திருக்க மாட்டார்கள் என்று உறுதியாக எனக்குத் தெரியும். அப்படி அறிவிக்க வில்லையென்றால் என்னுடைய குற்றச்சாட்டுகள் உண்மை என்றுதான் பொருள்.
4000 ரூபாய்களுக்காக அல்லது சிறு தொகைகளை வங்கியில் போடுவதற்காக பசியிடனும், தாகத்துடனும் வரிசையில் நிற்கும் மக்களைப் பார்த்தேன். ஒரு மெர்சிடிஸ், பிஎம்டபுள்யூ, அவுடி, வோல்வொ, போர்ஷா அல்லது ரேஞ்ச் ரோவர் காரையோ அல்லது அதன் உரிமையாளரையோ வங்கிகளுக்கு வெளியிலிருந்த வரிசையில் பார்க்கவில்லை. ஏ.டி.ம் அல்லது வங்கி முன் வரிசையில் நிற்பவர்கள்தான் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள், மேற்கூறிய கார்களின் உரிமையாளர்களிடம் அது இல்லை என்பது உங்கள் கருத்தாக இருக்கலாம்.
final vogafon revised Slider
அமித் ஷாவிற்கு நெருக்கமான கூட்டாளிகள் நவம்பர் 8 இரவு முதல் பணப் பரிவர்த்தனை வர்த்தகங்களில் ஈடுபட்டார்கள் என்பதை தெளிவாகவும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையிலும் நிரூபிப்பதற்கான வீடியோ பதிவு என்னிடம் உள்ளது.
ஃபோர்ச்சூன் பட்டியலிலுள்ள 300 நிறுவன அதிபர்களைத் தவிர, ரியல் எஸ்டேட் நடத்துபவர்கள், காண்டிராக்டர்கள், குறிப்பாக அராசாங்கத்திடம் காண்டிராக்ட் பெற்றவர்கள், சுரங்க உரிமையாளர்கள், குறிப்பாக இரும்புத் தாது எடுக்கும் நிறுவன உரிமையாளர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் எவ்வளவு பணம் வங்கிகளில் செலுத்தியிருக்கின்றனர் என்று இந்த நாட்டு மக்கள் அறிய ஆவலாயிருக்கின்றனர். மேற்கூறியவர்களைப் பற்றிய விவரங்கள் இந்த நாட்டு மக்களுக்குத் தெரியவில்லையென்றால், 50 சதவீதம் கருப்புப் பணத்தினை பதுக்கி வைத்திருக்கும் 10-12 தொழிலதிபர்கள் முன்னரே உங்களின் நடவடிக்கை குறித்து உங்களிடமிருந்து தகவல் பெற்று ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்கிற குற்றச்சாட்டு உண்மையாகிவிடும்.
ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நிலங்களை உங்களிடம் பெற்றுக் கொண்டு 7000 பேருக்குக் கூட வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் இருக்கும் இந்த 10-12 நிறுவனங்களை நடத்தும் தொழிலதிபர்கள் வங்கிகளில் எவ்வளவு தொகை செலுத்தியிருகின்றனர் என்று வங்கி வரிசைகளில் சிறு தொகைகளுக்காகக் காத்திருக்கும் வழியறியா ஏழைகள் தெரிந்துகொள்ள ஆர்வமாயிருப்பார்கள். 300 முதல் 400 கோடி வரை செலுத்தியவர்களின் விவரங்களையும், அந்தத் தொகைகள் அவர்களின் வருமான வரித் தாக்கல் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கணக்குடனோ அல்லது தெரிந்த மூலாதரங்கள் வழியே வந்த வருமான அளவுடனோ ஒத்துப்போகவில்லையெனில், வருமானவரித் துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரங்கள் அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டால் அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவார்கள். நவம்பர் 8 இரவு எட்டு மணிக்கு முன் யார் எவ்வளவு தங்கம், வைரத்தை வாங்கியிருக்கிறார்கள் என்று விசாரணை நடத்த வேண்டுமென்றும் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். உச்சாணிக் கொம்பில் இருக்கும் வெகு சிலர் பெருமளவு தங்கத்தையும் வைரத்தையும் அந்த நேரத்தில் வாங்க வேண்டிய தேவையைப் பற்றி மக்கள் சிந்தித்துப் பார்க்க உதவும்.
உங்களின் நடவடிக்கை நாட்டின் நலனுக்காகவா அல்லது நேரடியாக உங்களுக்கும், உங்கள் நேசத்துக்குரியவர்களுக்கும் உங்களின் கட்சி உறுப்பினர்களுக்கும் நன்மை செய்வதற்காகவா என்று இந்த நாட்டு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மேற்குறிப்பிட்டுள்ள விவரங்களை அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தயைகூர்ந்து, கருணை உள்ளத்துடன் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தங்களிடம் உண்மையான,
யாதின் ஓசா

அண்ணாச்சியும், அம்பானியும்????????????

வழக்கம்போல் ரிலையன்ஸில் பொருட்களை வாங்கி விட்டு கேஷ் கவுண்டரில் நின்று கொண்டிருந்தேன்.இரண்டு மூன்று முறை டெபிட் கார்டை தேய்த்து சோர்ந்து போன பணியாளர்,
" சர்வர் ப்ராப்ளம் சார் எந்த கவுண்டர்லயும் கார்ட் ஸ்வைப் பண்ண முடியல கேஷ் வச்சிருக்கவங்க மட்டும் நில்லுங்க "
" ரெண்டாயிரம் நோட்டா இருக்க அதையாவது வாங்கிக்குவீங்களா ? "
" சில்லற இருக்காது சார். 1500 ரூவாக்கு மேல பில் போடுற மாதிரி பர்ச்சேஸ் பண்ணா சேஞ்ச்க்கு ட்ரை பண்றேன். இல்லனா பொருட்கள அங்க வச்சிட்டு போங்க. ஒரு மணி நேரம் கழிச்சு வந்து பாருங்க சர்வர் ப்ராபளம் சால்வ் ஆச்சுன்னா வாங்கிட்டு போங்க "
எனக்கு பின்னால் நின்ற பெரியவர்,
" சார் என்கிட்ட பழைய 500 ரூவா நோட்டு இருக்கு அதையாவது வாங்கிக்குவீங்களா "
" இல்ல சார் அதெல்லாம் வாங்கமாட்டம்னு என்ட்ரன்ஸ்லேயே போர்டு வச்சிருக்கோமே பாக்கலியா "
மணி இரவு ஒன்பது ஆகியிருந்தது இன்னும் ஒரு மணி நேரம் கழித்து ரிலையன்ஸ் திறந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.இதில் சர்வரும் சரியாகி இருக்க வேண்டும். நாளை காலைத் தேவைக்கான சில அத்தியாவசியப் பொருட்களை இன்றே வாங்கி ஆக வேண்டிய கட்டாயம் வேறு. வேறு ஏதேனும் கடையில் முயற்சிக்கலாம் என்றாலும், பத்து நாட்களாக கிடைக்காத சில்லறை இப்போது மட்டும் கிடைத்து விடவா போகிறது.
வீட்டுக்கருகில் இருக்கும் அண்ணாச்சி கடைக்கு வழக்கமாக நான் அதிகம் செல்வதில்லை.
இருந்த போதிலும் ஒரு முறை அங்கும் முயற்சிக்கலாமே என்ற முடிவு செய்து அண்ணாச்சி கடைக்குச் சென்றேன்.
இரண்டாயிரம் விசயத்தை முதலில் சொன்னால் அண்ணாச்சி சில்லறை இல்லை என்று சொல்லி விடுவாரோ என்ற தயக்கத்தில் தேவையான பொருட்களை வாங்கிய பின்னர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்தேன்.
" ரெண்டாயிரத்துக்கெல்லாம் சில்றை இல்ல சார். வேண்ணா பழைய 500 ரூவா நோட்டுக்கூட குடுங்க வாங்கிக்கிறேன். "
" சரி பராவாயில்ல அண்ணாச்சி. எங்கிட்ட வேற பணம் இல்ல.இந்தாங்க இந்த பொருள எடுத்துக்கங்க "
" ஏன் சார் அப்டி சொல்லுதிய ?
நீங்க மொதத்தெருல நாலாவது ப்ளாட்லதான இருக்கிய.வெள்ளம் வந்தப்பெல்லாம் எல்லாருக்கும் அங்க இங்கன்னு ஓடி ஒடி வேல செய்தியளே. இந்தாங்க பிடிங்க எல்லாப் பொருளையும் எடுத்துட்டுப் போங்க.அப்புறமா பணத்த குடுங்க.நீங்க என்ன எம் பணத்த குடுக்காம ஊரவிட்டா ஓடிப்போகப்போறிய. அவசர செலவுக்கு எதும் ரூவா வச்சிருக்கியளா ? நூறு எரநூறு வேணும்னா நா தரவா ? வாங்கிக்கங்க அப்புறமா குடுங்க சார் "
தயக்கத்துடனும் புன்னகையுடனும் அண்ணாச்சியிடம் பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தவுடன் மொபைலுக்கு மெஸ்ஸேஜ் ஒன்று வரவே எடுத்துப்பார்த்தேன்
Thank you for using Debit Card ending xxxx for Rs.475.04 in CHENNAI at Reliance Fresh .......
வாங்காத பொருளுக்கு என் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்த அம்பானி எங்கே! !
வாங்கிய பொருளுக்கே பணம் வாங்காமல் கடன் கொடுத்த நம்மூர் அண்ணாச்சி எங்கே! !..
அனைவரும் இனிமேல் பணமில்லாத பரிவர்த்தனைக்கு
(Cash less Transaction) மாறுங்கள் என்று அண்ணாச்சி கடைகளை ஒழித்து, அம்பானி கடைகளை அதிகரிக்கத் துடிக்கும் அம்பானியின் மோடிக்குத் தெரியுமா??
அம்பானி கடைகளிலும், ஆன்லைனிலும் வெறும் வணிகமும், இலாப நோக்கமும் மட்டும்தான் இருக்கும்.
ஆனால் அண்ணாச்சி கடைகளில் மட்டும்தான் வணிகம், இலாபம் தாண்டி, வாடிக்கையாளருக்கும், வணிகருக்கும் இடையே ஒரு அன்பு கலந்த உயிரோட்டமான உணர்வுபூர்வமான உறவு இருக்கும் என்பது

*"இறைவன்"*.

ஒரு *"ராஜா"* தன் மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்து வர அனுப்புவார்.
திரும்பும் போது ஒரு அடர்ந்த காட்டை கடந்து வரவேண்டும்.
மந்திரி கூட நான்கு காவல்காரகளையும் அழைத்துச் செல்வார்.
ஒரு முறை அவர் திரும்ப மிக நேரமாகி விடுகிறது.
காட்டு வழியே வரும்போது
திருடர்கள் வந்து வழிமறிக்கிறார்கள்.
மந்திரியும் காவலர்களும்
வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து திகைத்து இறைவனைப் பிரார்த்தித்துக்
கொண்டு நின்று விடுகிறார்கள்.
எங்கிருந்தோ *"ஆறு இளையர்கள்"* வந்து
அவர்களை காப்பாற்றுகிறார்கள்.
மந்திரியுடன் ஆறு இளையர்களும் *"ராஜாவிடம்"* வருகிறார்கள்.
*"ராஜாவும்"* மிகவும் சந்தோஷமடைந்து இளையர்களிடம்,
”உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்” என்று கூறுகிறார்.
*"முதல்"* இளைஞன் பண வசதி வேண்டும் என்று கேட்கிறான்.
*"இரண்டாவது"* இளைஞன் வசிக்க நல்ல வீடு வேண்டும் என்று கேட்கிறான்.
*"மூன்றாவது"* இளைஞன் தான் வசிக்கும்
கிராமத்தில் சாலைகள சீர் செய்ய வேண்டும் என்று கேட்கிறான்.
*"நான்காவது"* இளைஞன் தான் விரும்பும் செல்வந்தரின் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்கிறான்.
*"ஐந்தாவது"* இளைஞன் தன் குடும்பத்தினர் இழந்த
மிராசுதார் என்ற பட்டம் மறுபடி வேண்டும் என்று கேட்கிறான்.
அனைத்தையும் தருகிறேன் என்று சொன்ன *"ராஜா"*,
*"ஆறாவது"* இளைஞனைப் பார்த்து “உனக்கு என்ன
வேண்டும்” என்று கேட்கிறான்.
இளைஞன் சற்று
தயங்குகிறான்,
*"ராஜா"* மீண்டும் கேட்க இளைஞன் கூறுகிறான்,
"அரசே எனக்கு பொன், பொருள் என்று எதுவும் வேண்டாம்.
வருடம் ஒருமுறை நீங்கள் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் என்னுடன் இருந்தால் போதும்” என்று சொன்னான்.
*"ராஜாவும்"* இவ்வளவுதானா என்று முதலில் கேட்டான்.
பிறகுதான் இளைஞனின் கோரிக்கையில் ஒளிந்து இருந்த உண்மையை.
தெரிந்து கொண்டான்...
ஆம்.
*"ராஜா"* அவன் வீட்டில் போய் இருக்க வேண்டுமென்றால்,
அவன் வீடு நன்றாக இருக்க வேண்டும்.
அந்த ஊருக்கு செல்லும் சாலைகள் நன்றாக இருக்க வேண்டும்.
வேலைக்காரர்கள் வேண்டும்.
அவனுக்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும்.
சொல்லப் போனால் முதல் *"ஐந்து"* இளைஞர்களும் கேட்து எல்லாம் இவனுக்கும் இருக்க வேண்டும்.
என்று தன் மகளையே திருமணம் செய்து கொடுத்தார் ,
என்று . . . ,
இந்தக் கதையை முடித்தார்
பேச்சாளர்.
இந்தக் கதையில் கூறிய *"ராஜாதான்"* அந்த *"இறைவன்"*.
பொதுவாக எல்லோரும்
*"இறைவனிடம்"* கதையில் கூறிய ,
முதல் *"ஐந்து"*
இளைஞர்களைப் போல்,
தனக்கு வேண்டியதைக் கேட்பார்கள்.
கடைசி இளைஞனைப் போல் *"இறைவனே"* நம்மிடம் வர
வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் ,
மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும்.

நற்கதி அடைவதே .............

1 சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது வெறும் தலையில் குளிக்கக் கூடாது. சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டுதான் தலை முழுக வேண்டும்.
2 துளசி மாடத்திலிருந்து பூஜைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக்கூடாது. துளசி மாடம் பூஜைக்குரியது. பூஜைத் தேவைக்கு வேண்டிய துளசியை தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிக்க வேண்டும்.
3 சுபகாரியங்களுக்கெல்லாம் முதல் தேவையான பொருள் மஞ்சள், மங்கல காரியங்களுக்கு சீட்டை எழுதும்போது முதலில் எழுதப்படுவது மஞ்சள்தான்.
4 மஞ்சள் பூசிக்குளிப்பது சுமங்கலிகள் மரபு. மஞ்சள் பூசிக் குளித்துவர துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக வசீகரமுண்டாகும்.
5 இல்லங்களில் காலை, மாலை மஞ்சள் நீர் தெளித்து வர லஷ்மி கடாட்சமுண்டாகும்.
* கணபதி, சூரியன், அம்பிகை, மஹாவிஷ்ணு, பரமசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஒரேயிடத்தில் வைத்துப் பூஜிப்பதே பஞ்சாயன பூஜையாகும். துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக வசீகரமுண்டாகும்.
6 சூரியனால் உடலாரோக்கியம் பெற்று அம்பிகை ஆகிய தாயின் ஆசியால் கிடைக்கும் சிறந்த வாழ்வை அடைந்து விஷ்ணுவினால் இம்மையின்பம் பெற்று சிவபிரானால் காமக் குரோதாதி புறப்பகைகளை வென்று அஞ்ஞானம் நீக்கி மோஷத்தை அடைவதற்கு வாழ்வில் வரும் தடைகளை கணபதி அருளால் நீக்கி நற்கதி அடைவதே பஞ்சாயதன பூஜைச் சிறப்பாகும்.
7 வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்வது நல்லதல்ல. இதனால் லஷ்மிதேவி சஞ்சலமான நிலையைப் பெற்று வீட்டிலுள்ளவர்களின் ஐஸ்வர்யங்களை ஏற்றத்தாழ்வுக்கு இடமாக்குவாள்.
8 தீபத்தின் ஜூவாலை கிழக்குமுகமாக இருந்தால் சர்வபீஷ்டங்களும் ஐஸ்வரியமும் உண்டாகும். வடக்கு முகமாக எரிந்தால் நோய் நீங்கிச் சுகமுண்டாகும்.
9 மேல் நோக்கி நெடிதாயெரியும் ஜூவாலை ஆரோக்கியத்திற்கும் சரீர சுக போகங்களுக்கும் அறிகுறியாகும்.
10 சக்தி, திறமை, வீர்யம் இவற்றைச் சகல ஜீவராசிகளுக்கும் வழங்கி என்றும் மாறா இளமையுடன் திகழ்வது சூரியன். சூரிய வழிபாடு கர்மவினைகளையும், நாகதோஷம் முதலியவற்றையும் பிற சோதிடரீதியான தோஷங்களையும் நீக்கும்.
11 குழந்தைகள் பிறந்தபின் ஜாதகர்மம், நாமகரணம் என்பவற்றின் போது உபநிஷ்க்ரமணம் என்ற கிரியையில் குழந்தையை சூரிய வெளிச்சம் படும்படி முதன்முதல் வீட்குக்கு வெளியே கொண்டுவருதல் உண்டு. உடல்முழுதும் நல்லெண்ணய் பூசி வெற்றுடம்புடன் இளவெயிலில் கிடத்துதலும் குறிப்பிடத்தக்கது.
12 இல்லங்களில் மாலைநேரத்தில் விளக்கேற்றும்போது பூஜையறை ஜன்னலை மூடிவிட வேண்டும். வீட்டின் முன்புற வாசலை திறந்திருத்தலும், பின்பக்க வாசலை பூட்டியிருத்தலும் வேண்டும்.
13 வழிபாடு முடிந்த பின் விளக்குச் சுடர் மீது சில அட்சதை மணிகளைத்தூவி அல்லது மலரொன்றை வைத்து மெதுவாக அணைத்து விடலாம். வீசி அணைத்தலும் ஊடுபற்றி எரிய விடுதலும் ஆகாது.
14 அரசமரம் வழிபாட்டுக்கு உகந்ததெனினும் சனிக்கிழமை காலை வேளையில் மட்டுமே அதைப் பிரதஷணம் செய்வதும் தொட்டு வணங்குவதும் செய்யலாம். அந்நாளில் மட்டுமே லஷ்மி நாராயணரின் பிரசன்னம் அங்கு இருக்கும். மற்ற நாட்களில் தொடக் கூடாது.
15 சமுத்திர ஸ்நானம் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே செய்யலாம்.

ஒலிகளுக்கும் உருவம் உண்டு..!

ஓம் என்ற ஒலியிலிருந்துதான் இந்த உலகம் தோன்றியது என்பார் திருமூலர்.
"ஓங்காரத் துள்ளே உதித்த ஐம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரத் தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே!"
பிரணவத்துள் தோன்றியதே இந்த உலகத்தின் பஞ்ச பூதங்கள், அவற்றில் விளைந்த மாற்றங்களில் அசையும் உயிர்களும், அசையா உயிர்களும் உண்டாயின.
இந்த உலகம் ஒலியின் வடிவம் என்பதை ஞானம் கைவரப் பெற்றவர்கள் அறிந்திருந்தனர். பல சப்தங்களின் பிரதிபலிப்பே உலகம் என்பார்கள் அவார்கள்.
ஒரு பேரொளி இந்த பிரபஞ்சத்தையே நிரப்பி இருக்கின்றது. உலகம் முழுதும் ஒளி, உலகமெங்கும் ஒலி. ஆனால் சில ஒளி களைத்தான் நம் கண்கள் பார்க்கின்றன. சில ஒலிகளைத்தான் நம் காதுகள் கேட்கின்றன.
அனால் ஒலிகளுக்கும் உருவம் உண்டு அதையும் பார்க்கலாம் என்கிறார்கள் சித்தர்கள். ஒலியைக் கேட்கமுடியும், அது எப்படி பார்ப்பது என்று யோசிக்கிறீர்களா?
மந்திரங்கள் ஒலிவடிவானவை. அந்த மந்திரங்களை கண்ணால் கண்ட சித்தர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். ஆக, கண்ணால் ஒலியைக் காண்பது சாத்தியம் என்கிறார்கள் அவர்கள்.
நம்முடைய விருப்பங்களைத் தெரிவிக்கவும், நம்முடைய வேலைகளைக் குறித்தும் நாம் பேசுகின்றோம். இந்தப் பேச்சொலி நாம் வாய் திறந்து பேசும் முன் எங்கிருந்தது? மனதில் எண்ணமாக இருந்தது. அதற்க்கு முன் எப்படி இருந்தது?
அது எண்ணங்களும், நினைவுகளுமாக முதலில் சூட்சும சப்தமாக இருந்தது. அதன் பிறகே வாய் மூலம் வெளிப்பட்டது. இந்த சப்தங்களை நான்கு வகையாகப்பிரிப்பர். அவை,
1, வைகரி - செவியோசை.
2, மத்திமை - கருத்தோசை.
3, பைசந்தி - நினைவோசை.
4, பரை - நுண்ணோசை, என்பவை ஆகும்.
நம்முடைய ஒவ்வொரு எண்ணமும் சொல்லாக ஒலி வடிவம் பெறுவதற்க்கு முன் சூட்சும ஒலியாய் இருந்தவையே.அந்த சூட்சும ஒலியையே ஓம் என்கிறார்கள் சித்தர்கள்.
ஆக, ஓங்காரம் மூல சப்தம் எல்லாமந்திரங்களுக்கும், ஒலிகளுக்கும் அதுவே ஆதாரம் என்கிறார்கள் சித்தர்கள்.
🙏🕉🙏🕉🙏🕉

விமானம் பறப்பது எப்படி....? தெரிந்து கொள்வோம்

அறிவியல் இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்.பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.
சரி… எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
how-airplane-landing
ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு
A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)
B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust
C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight
D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag
ஒரு விமானம் ஒரே உயரத்தில், நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமனாக இருக்க வேண்டும்
Weight=Lift
Drag=Thrust
த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும். டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்
விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்
விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும் சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,
அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.
(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)
விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்
பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது
ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேலிருக்கும் விசிறியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும். உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சின்தான் , சற்று மறைமுகமாக
விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கைஇல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது
விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால் தான் தெரியும் இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்கு தான் விஷயம் உள்ளது
காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்).
விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்
அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்.
இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?
அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது). இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது.
ஓடுதளம்..
விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும் போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?
அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது
ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.

பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே.

கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில், “இந்தக் கடல் மாபெரும் திருடன்...!” என எழுதிவிட்டான்.
கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வளையில் சிக்கின. அவர் அக்கடற் கரையில், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!” என எழுதிவிட்டார்.
அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே...!” என கரையில் எழுதினாள்.
ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கரையில், “இந்தக் கடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்...!” என எழுதினார்.
பின்னர் ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்துவிட்டுச் சென்றது.
பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே.
இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்.
உன் நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் நீ பிறரின் தவறுகளை உன் மனதிலிருந்து அழித்துவிடு. தவறுக்காக உன் நட்பையோ, சகோதரத்துவத்தையோ அழித்துவிடாதே.
நீ ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால் அதை விடவும் பலமாக அதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென ஒரு போதும் எண்ணாதே. சிறிது சிந்தித்து, நளினமாக அதை கையாளு...
👍👍👍

என்ன கலர் கலரா ரீல் விடுறாங்க ...

மன்னனைக் காண வந்த
சத்திமுத்தப் புலவர் நிலை தான் ATM வாசலில் இந்தியர் நிலை... மன்னனாவது புலவரின் வறுமை கண்டு பரிசு கொடுத்திருப்பான் ... ஒரு நாள் பட்ட வேதனைக்கே இப்படிப் பாடி இருக்கார்... ஒவ்வொரு நாளும் சொந்தக்காசை எடுக்க , இப்படி கால் கடுக்க நிற்க வேண்டி இருக்கு நம் நாட்டு நிலைமை... இதில் அடி, தடி , இறப்பு, தற்கொலை... இப்படியே தொடருது ... ஆனால் தலைவர் பாருங்க ஒரு கல்யாண வீட்டில் டீ கொடுத்து எளிமையா கல்யாணத்தை முடிச்சாங்க, செலவைக் குறைச்சுக்கிட்டாங்கன்னு கதை விட்டுட்டு இருக்கார்... சிறு வியாபாரிகள் டிஜிட்டலைஸ் ஆகணுமாம் ... மக்க மனுசங்க அன்றாடங்காய்ச்சியா இருக்க நாட்டுல Cashless India வாம் ... என்ன கலர் கலரா ரீல் விடுறாங்க ... சங்க காலத்துக்கே போயிடலாம் போல...
இதோ அந்தப் புலவர் பாடிய பாட்டு ... படிச்சுக்கங்க மக்களே...
நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே"

Sunday, November 27, 2016

பின்னணி இசையை பற்றி...

சினிமா இசை­யைப் பொறுத்­த­வரை, பாட்­டைக் கேட்­ப­வர்­கள் பாட்­டைக்­கேட்­ட­வு­டன் ‘ரிப்­பீட்’ பண்­ண­ணும். கேட்­ட­வு­டன் தாளம் போட­ணும். படத்­தில் வரும் அந்த சிச்­சு­வே­ஷ­னுக்­குத் தகுந்த மாதிரி ‘ரியாக்ட்’ பண்ண வைக்­க­ணும். படத்­தில் சோக­மான காட்­சியா? பார்க்­கி­ற­வங்­க­ளை­யும் சோகத்­தில் ஆழ்த்­த­ணும். இப்­படி நான் நினைத்­த­தை­யெல்­லாம் செய்­தி­ருக்­கி­ற­றேன் இந்த இடத்­தில் பாட்டு முடிந்­த­தும் ரசி­கர்­கள் கை தட்­ட­லேன்னா, நான் இசை­ய­மைக்­கி­ற­தையே விட்­டு­டு­றேன்னு சொல்லி, அப்­ப­டியே நிறைய படங்­க­ளில் செய்­தி­ருக்­கி­றேன்.
அந்த இடங்­க­ளில் கை தட்­டல் வந்­தி­ருக்கு. இது என்­னோட திற­மைன்னு நான் சொல்ல வரலே. எல்­லாம் தானா­கவே வருது.
ஒரே சம­யத்­தில் பல படங்­க­ளுக்கு இசை அமைப்­ப­தால் நிச்­ச­யமா தரம் பாதிக்­கப்­ப­டாது. இசை­ய­மைப்­புக்­குன்னு ஒரு சில விதி முறை­களை (ரூல்ஸ்) வைச்­சிக்­கிட்டு அப்­ப­டியே ‘பாலோ’ பண்­ணு­கிற இசை­ய­மைப்­பா­ளர்­க­ளுக்­குத்­தான் இந்­தப் பிரச்­சி­னை­யெல்­லாம் வரும். எனக்கு அப்­ப­டி­யெல்­லாம் கிடை­யாது. நான் எந்த விதி­மு­றை­க­ளை­யும் பாலோ பண்­றது இல்லை. இசை­யில் இயற்­கையா என்ன வருதோ அதன் இஷ்­டம். இப்­படி நான் இசை­யின் மேலேயே பாரத்­தைப்­போட்டு விட்டு வேலை செய்­கி­றேனே தவிர என்னை நானே பெரிசா சார்ந்­தி­ருக்­கி­ற­தில்லே. இசை­யில் எந்த ராகம் வந்­தா­லும் சரி, எனக்­கொண்­ணும் கவ­லையே கிடை­யாது.
உதா­ர­ணமா ஒரு மகிழ்ச்­சி­யான சீன் (காட்சி) வரு­துன்னு வைச்­சுக்­கங்க. அதில் ஒரு பாட்டு, அந்­தப்­பாட்­டுக்கு நான் ட்யூன் போடு­றப்ப சுப­பந்­து­வ­ரா­ளி­ரா­கம் வரு­துன்னு வைச்­சுக்­கங்க. இது துக்­க­மான ராக­மாச்­சேன்னு நான் கட்­டுப்­பாடு எதை­யும் விதிக்­கி­ற­தில்லே.அந்த நேரத்­தில் எது வருதோ அது­தான் ராகம். அது­தான் தாளம் ,அது தான்­மி­யூ­சிக், நான் வந்து மண்­டையை உடைச்­சிக்­கிட்டோ, முடி­யைப்­பிச்­சிக்­கிட்டோ மியூ­சிக் அமைக்­கி­றதே இல்லை. வந்து கேட்­சி­ற­வங்­க­ளுக்­குப்­பி­டிக்­குதா வச்­சுக்கோ.பிடிக்­க­லியா, விட்­டுடு அவ்­வ­ள­வு­தான். கேட்­கி­ற­வங்­க­ளுக்­குப்­பி­டிக்­குது பிடிக்­கா­மப் போகு­துங்­கி­ற­தைப் பற்றி எனக்­குக்­க­வ­லையே இல்லை.
முதல்ல நான் படத்தை முழு­மை­யைாப் பார்க்­கி­றேன். அப்ப எந்த ஐடி­யா­வும் வராது. அப்­பு­றம் ரிக்­கார்­டிங் தியேட்­டர்லே நாற்­பது, ஐம்­பது மியூ­சி­ஸி­யன்­கள் காத்­தி­ருக்க மியூ­சிக் போடு­வ­தற்­காக ஒவ்­வொரு ரீலா போட்­டுக் காட்­டு­றப்ப மியூ­சிக்கை எங்கே ஸ்டார்ட் பண்­ண­லாம். எங்கே பினிஷ் பண்­ண­லாம் என்று அந்த நேரத்­தில் செய்த கொள்­கி­றேன். அந்­தப் படத்­துக்கு என்ன தேவையோ, அதை மட்­டுமே நான் பார்க்­கி­றேன். படத்­தில வர்ற கேரக்­டர் அந்த இடத்­தில என்ன சொல்­றான்..... அவ­னோட உள்­மன உணர்வு என்ன.... அந்த இடத்­தில பிக்­சர் ட்ராக் ஆகுது....கொஞ்­சம் வேகம் ஏற்­ப­டுத்­தித்­த­ர­ணும்....இல்­லாட்டி போர­டிக்­கும். இப்­படி பார்ம் பண்­ணிக்­கொள்­கி­றேன்.
இங்கே கம்­போஸ் பண்­ணு­கிற மற்ற இசை­ய­மைப்­பா­ளர்­க­ளும் இந்த மாதிரி இடங்­க­ளில் மியூ­சிக் தரு­வார்­கள். நான் மியூ­சிக் தர­மாட்­டேன். அப்­ப­டியே மியூ­சிக் வேண்­டும் என்ற நிலை இருந்­தால் அவர்­கள் அந்த இடத்­தில் பயன்­ப­டுத்­து­கின்ற இசைக்­க­ருவி என்­ன­வாக இருக்­கும்னு யோசிப்­பேன். அது உடனே என் ‘மைண்­டில்’ வரும். நான் அதைப்­ப­யன்­ப­டுத்த மாட்­டேன். இப்­ப­டி­இ­ருக்­கும் விதி­களை நான் மீறு­கி­றேன். புதிய இசைக்­க­ரு­வி­யைப்­ப­யன்­ப­டுத்­து­கி­றேன். அதுவே புது­மை­யாகி விடும்...  இசைக்கு ராஜா ராஜாதானே!

Image may contain: 1 person

தெரிந்து கொள்வோம்:-

1. உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.
4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.
5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.
6. பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.
7. மலையாள நடிகர் பிரேம் நசீர் 85 கதாநாயகிகளுடன் நடித்து உலக சாதனை புரிந்தவர்.
8. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.
9. வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.
10. முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.
11. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.
12. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.
13. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது...:-)

தொண்டையை பாதுகாக்க 10 இயற்கை வழிகள் :-


1. பேசிக்கொண்டே சாப்பிடும்போது, சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குப் போய்விடும். இதுவே புரையேறுதல். எனவே, சாப்பிடும்போது பேசக் கூடாது.

2. தொண்டை வழியாக இரைப்பைக்கு வந்த உணவு, வால்வு சரியாக வேலை செய்யாமல் போனால், மறுபடியும் மேலே வரும். இதைத்தான் நெஞ்சு எரிச்சல் என்போம். உணவை வேகவேகமாக விழுங்கக் கூடாது. தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். அதிகக் காரம், அமிலம் மற்றும் மசாலா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
3. அவசர அவசரமாகச் சாப்பிடுவது, தண்ணீர் அருந்தாதது போன்ற காரணங்களால் விக்கல் ஏற்படுகிறது. சிலருக்குத் தண்ணீர், பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். அமைதியாக உட்கார்ந்து, ஐந்து நிமிடங்கள் மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட்டால், விக்கல் நிற்கும். இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் இருந்தால், நோய்த்தொற்று, இரைப்பைப் புண் இருக்கலாம். மருத்துவரிடம் காட்ட வேண்டும்.
4. மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற செயல்களால், தொண்டைப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். புகை மற்றும் மது அருந்தும் பழக்கத்தை, உடனடியாக நிறுத்த வேண்டும்.
5. உண்ணும்போது நம்மை அறியாமலேயே, சில சமயம் காற்றும் உள்ளே போகும். இந்தக் காற்றானது வாய் வழியே, வெளியேறுவதே ஏப்பம். அளவுக்கு மீறும்போது இதுவே வாயுப் பிரச்னையாகிவிடும். அடிக்கடி ஏப்பம் வந்தால், வயிற்றுப் புண், அஜீரணம், அமில காரத்தன்மை அதிகமாதல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். எனவே, மருத்துவரை அணுக வேண்டும்.
6 .வைரஸ் தொற்று ஏற்பட்டு சளி, இருமலால் தொண்டையில் வலி, வறட்சி ஏற்படுவதைத் தொண்டைக் கட்டு என்கிறோம். குரலுக்கு ஓய்வு தருவது, நீர் ஆகாரங்கள் அருந்துவது, வெந்நீரில் உப்பு போட்டுக் கொப்பளிப்பது ஆகியவற்றின் மூலம் நிவாரணம் கிடைக்கும். இது தொடர்ந்து இருந்தால், தொண்டையில் சதை, கட்டி இருக்கலாம். மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.
7. தொண்டையில் இருந்து காற்று வெளியேறுவதில் தடை ஏற்படுவதால் உண்டாவதுதான் குறட்டை. உடல் பருமன், மூக்கின் தண்டுப் பகுதி மற்றும் எலும்பில் ஏற்படும் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக குறட்டை வரும். மருத்துவ ஆலோசனை பெற்று, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதன் மூலம், குறட்டைப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
8. அதிகக் குளிர்ச்சி, அதிக சூடு தொண்டையை பதம்பார்த்துவிடும். மிதமான சூடுள்ள உணவுகள், பானங்களே, தொண்டைக்குப் பாதுகாப்பு.
9. புகையிலை மெல்வதால், தொண்டையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படும். புகையிலையை எந்த வடிவிலும் உட்கொள்ளக் கூடாது.
10. குழந்தைகள் அடிக்கடி தொண்டை வலியால், உணவை விழுங்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுவர். கழுத்துப் பகுதி வீக்கம், தொண்டையில் உள்ள டான்சில் சதை வீங்குவது இதற்குக் காரணம். பாக்டீரியா தொற்றினால் இது ஏற்படுகிறது. ஐஸ்க்ரீம், குளிர்பானங்களைத் தவிர்த்து, வெந்நீரில் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிக்கலாம். வைட்டமின் சி நிறைந்த பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...