Monday, November 28, 2016

என்ன கலர் கலரா ரீல் விடுறாங்க ...

மன்னனைக் காண வந்த
சத்திமுத்தப் புலவர் நிலை தான் ATM வாசலில் இந்தியர் நிலை... மன்னனாவது புலவரின் வறுமை கண்டு பரிசு கொடுத்திருப்பான் ... ஒரு நாள் பட்ட வேதனைக்கே இப்படிப் பாடி இருக்கார்... ஒவ்வொரு நாளும் சொந்தக்காசை எடுக்க , இப்படி கால் கடுக்க நிற்க வேண்டி இருக்கு நம் நாட்டு நிலைமை... இதில் அடி, தடி , இறப்பு, தற்கொலை... இப்படியே தொடருது ... ஆனால் தலைவர் பாருங்க ஒரு கல்யாண வீட்டில் டீ கொடுத்து எளிமையா கல்யாணத்தை முடிச்சாங்க, செலவைக் குறைச்சுக்கிட்டாங்கன்னு கதை விட்டுட்டு இருக்கார்... சிறு வியாபாரிகள் டிஜிட்டலைஸ் ஆகணுமாம் ... மக்க மனுசங்க அன்றாடங்காய்ச்சியா இருக்க நாட்டுல Cashless India வாம் ... என்ன கலர் கலரா ரீல் விடுறாங்க ... சங்க காலத்துக்கே போயிடலாம் போல...
இதோ அந்தப் புலவர் பாடிய பாட்டு ... படிச்சுக்கங்க மக்களே...
நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...