Tuesday, November 8, 2016

நல்லார் கரம் பற்றுவதும் நன்றே!

சிந்துபைரவி படத்தில் தண்ணி அடித்துவிட்டு போதையில் டெல்லி கணேஷ் மிருதங்கம் வாசிப்பது போல் காட்சி. அதில் டெல்லி கணேஷ் மிருதங்கம் வாசிக்க தெரியாது. ஆனாலும் போதையில் பேசிகொண்டே மிருதங்கம் வாசிப்பது போல் நடித்து விட்டார்.டெல்லி கணேஷ் அவர்களுக்கு ஒரு ஆசை தான் மிருதங்கம் வாசிப்பது போல் நடித்ததற்கு இளையராஜா எப்படி இசை அமைக்க போகிறார் என்று ரெகார்டிங் theatre-ku சென்று இருக்கிறார்.
அப்போது இளையராஜா டெல்லி கணேஷிடம் உங்களுக்கு மிருதங்கம் வாசிக்க தெரியுமா என்று கேட்டு இருக்கிறார். டெல்லிகணேஷ், தெரியாது என்று சொல்லி இருக்கிறார் அதற்கு இளையராஜா உங்களுக்கு வாசிக்க தெரியாது என்பது இப்போது எனக்கு மட்டும் தான் தெரியும் ஆனால் படம் பார்ப்பவர்க்கு அப்படி தெரியாது ஏன் எனில் நீங்கள் உண்மையான வித்துவான் போல் பாவனையோடு செய்து இருக்கிறீர் என வெகுவாக பாராட்டி இருக்கிறார். பின் டெல்லிகணேஷ் இசைஞானியின் அந்த இசைகோர்வையை கண்டு நெகிழ்ந்து பாராட்டி இருக்கிறார்.
பின்பு ஒரு நாள் இளையராஜாவை பார்க்கும் போது இளையராஜாவின் கரங்களை டெல்லி கணேஷ் பற்றி கொண்டாராம். அப்போது இளையராஜா என்ன வேண்டும்? என கேட்டு இருக்கிறார் அதற்க்கு டெல்லி கணேஷ்,


நல்லாரை காண்பதும் நன்றே!
நல்லார் சொல் கேட்பதும் நன்றே!
என்பதை போல்
நல்லார் கரம் பற்றுவதும் நன்றே! என்று டெல்லிகணேஷ் இளையராஜாவின் கரத்தை பிடித்து கொண்டு சொன்னாராம். இருவரும் தங்கள் பண்பினை அன்பால் வெளி படுத்தி கொண்டார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...