Tuesday, November 8, 2016

அன்று 500 .1000 பணம் வைத்திருந்தால் பணக்காரன் . இன்னிக்கு [மட்டும்]50,100 வைத்திருப்பவன் கோடிஷ்வரன்.

1978 ல் அன்றைய ஜனதா அரசு அதிக மதிப்பீடு உள்ள நோட்டுகளை இதே போல் தடை செய்தது.(Soமோடிதான் முதன் முதலில் என்று வழக்கம்போல் வரலாறு தெரியாமல் ஆரம்பிக்காதீர்கள்!)
அதனால் கருப்புப் பணம் ஒழிந்துவிட்டதா என்ன? அதிகரித்துத் தான் இருக்கிறது. ஆகவே இது ஒரு சிறு முயற்சி மட்டுமே அதுவும் சாதாரண மக்களின் வயிற்றெறிச்சலைக் கொட்டிக்கொண்டு!
மேலும் பெரும்பாலான கருப்புப் பணம் வெளிநாடுகளில், தங்கத்தில், ரியல் எஸ்டேட்டில் பதுக்கலாக ,முதலீடுகளாக உள்ளது.பெரும் கொள்ளைக்காரர்களின் பணம் பாதுகாப்பாக வெளிநாடுகளில் இருக்கும். நடுத்தர கொள்ளைக்காரர்களுக்கு ஏற்கனவே வெள்ளையாக்கும் 'பேர் அன் லவ்லி' திட்டம் மூலம் வாய்ப்பு அளிக்கப்பட்டு விட்டது. அதற்கு அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு வெள்ளையாக்க 50 நாட்கள் வாய்ப்பு உள்ளது. இதில் கிடந்து சாவது நம்மைப் போன்ற சாதாரண மக்கள்தான்.
கருப்புப் பணத்தை ஒழிக்க முதலில் ஊழலை ஒழிக்க வேண்டும். அதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம், லோக் பால், சிவிசி, உள்ளாட்சி அமைப்புகள்,நீதிமன்றங்கள், ஊடகங்கள் வலுவோடு இருக்க வேண்டும்
மோடி இவற்றைத்தான் முதலில் ஒழிக்கிறார். பிறகெப்படி கருப்புப் பணத்தை ஒழிப்பது. இரண்டாயிரம் ரூபாயை விட்டா?!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...