Monday, November 21, 2016

அதானி எப்படி சார் வங்கிக்கு வரிசையில் வருவான்?...

அம்பானி, அதானி வரிசையில் நிற்க வில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.. அவர் வரிசையில் நின்றா பணம் மாற்றினார்...
சினிமா பிரபலங்கள் ஒருவரும் பணம் மாற்ற வங்கி வரவில்லை...
ஏன் சின்னத்திரை நடிகர்கள் கூட வரவில்லை..
தந்தி டிவியில் கேள்வி கேட்கும் பாண்டே வந்தாரா? இல்லை..
மற்றவர்களை குறை கூறும் மம்தா பானர்ஜி வந்தாரா? வரவில்லை...
நாட்டின் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வந்தாரா?
பாஜக தலைவர் அமித்ஷா வந்தாரா?
கருணாநிதி வந்தாரா?
ஸ்டாலின் வந்தாரா?
பன்னீர் செல்வம் வந்தாரா?
சசிகலா வந்தாரா?
ரஜினி வந்தாரா?
விஜய் வந்தாரா? விக்ரம் வந்தாரா? வடிவேலு வந்தாரா? சிவ கார்த்திக்கேயன் வந்தாரா?
த.பாண்டியன் வந்தாரா?
தமிழிசை சவுந்தரராஜன் வந்தாரா?
யெச்சூரி வந்தாரா?
சோனியா காந்தி வந்தாரா?
திருநாவுக்கரசர் வந்தாரா?
கம்யூனிஸ்ட் தோழர் களோ, அரசியல் தலைவர்களோ வங்கிக்கு வந்தார்களா? வரவில்லையே...
இவ்வளவு ஏன் ஒரு கோயில் குருக்கலோ, பாதிரியார் களோ வரவில்லையே...
See...
அம்பானி, அதானி வரிசைக்கு வரவில்லை என்று கூறும் ஒருவனும், அவர்கள் பணத்தை மாற்ற வங்கிக்கு வரவில்லை...
காரணம் என்ன? இவர்கள் பணப்புழக்கம் இல்லாதவர்களா? இல்லை.. பிறகு ஏன் வரவில்லை..
காரணம் இவர்கள் தெருவோர ஓட்டல்களில் சாப்பிடுவதில்லை.. அதனால் சில்லறை தேவையில்லை, ஆகையால் வங்கிக்கு வரவில்லை...
இவர்கள் மார்க்கெட்டில் சென்று காய்கறி வாங்குவது இல்லை.. அதனால் சில்லறை தேவையில்லை.. ஆகையால் வங்கிக்கு வரவில்லை...
இவர்கள் தெருவோர டீக்கடையில் டீ குடிப்பதில்லை... அதனால் சில்லறை தேவையில்லை.. ஆகையால் வங்கிக்கு வரவில்லை...
இவர்கள் மளிகைக் கடையில் பால், பலசரக்கு வாங்குவதில்லை.. அதனால் சில்லறை தேவையில்லை.. ஆகையால் வங்கிக்கு வரவில்லை..
இவ்வளவு ஏன்... இவர்கள் டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்குவதில்லை.. அதனால் சில்லறை தேவையில்லை.. ஆகையால் வங்கிக்கு வரவில்லை...
ஏன் என்றால் இவர்கள் புழங்குவது எல்லாம், ஐந்து நட்சத்திர ஓட்டலிலும், சூப்பர் மார்க்கெட்டிலும், டிஸ்கோ பார்களிலும் தான்.. இங்கே சில்லறை வாங்குவது இல்லை... இங்கே எல்லாம் கார்டு மட்டுமே போதுமானது...
அஞ்சும், பத்தும் நிதி வாங்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களூம், செயலாளரும், மாவட்ட தலைவர்களுக்கமே இந்த நிலையில் உள்ளனர் என்றால்.... 5000 கோடி, 6000 கோடி சம்பாதிக்கும் அம்பானி, அதானி எப்படி சார் வங்கிக்கு வரிசையில் வருவான்?...
இவர்கள் எல்லாம்
ஏழை மக்கள் வரிசையில் நிற்கின்றனர்... என்று கதறூம் போது... ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலை பட்டதாம் என்ற பழமொழியே நினைவுக்கு வருகிறது...
எனவே எனதருமை மக்களே.. மக்கள் வரிசையில் நிற்கிறார்கள், என கவலைப் படும் ஒருவரும் வரிசையில் வங்கிக்கு வந்து பணம் வாங்கப் போவதில்லை.. இவர்களின் வேலை எல்லாம் எதை வைத்து அரசியல் செய்வது என்பதே... மக்களின் உணர்வுகளோடு விளையாடி அரசியல் செய்வதே... என்பதை உணர்ந்து கொண்டு, அரசின் இந்த நடவடிக்கைக்காக நம்மால் ஆன ஒத்துழைப்பை அளிப்போம்....
நன்றி...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...