Tuesday, November 29, 2016

உங்கள் கட்சியின் ஆட்சியில் சம்பாதித்தவர்களுக்காகவும் உங்களுக்காகவும்தான் போராட்டம்

கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் விவசாயிகள் மீனவர்கள் 
பூ விற்பவர்கள் காய்கறி வியாபாரம்
செய்வோர் சாலையோரங்களில் கடை வைத்திருப்போர் சிறு குறு தொழில் செய்வோர் மீண்டும் ஒருமுறை சிறு குறு விவசாயிகள் மற்றும்
நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் கிராமங்களில் உள்ள மக்கள் அதிகம்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக
போராட்டம் நடத்துவதாகவும் எதிர்கட்சிதலைவரும் திமுக பொருளாளருமான திரு.ஸ்டாலின்
அவர்கள் தனது முகநூல் பக்கத்தில்
பதிவிட்டுள்ளார்.
இவர் மேலே குறிப்பிட்டுள்ள யாரிடமும்
இவர் கட்சியின் கவுன்சிலர்கள் வைத்துள்ள
விலை உயர்ந்த கார்கள் கிடையாது.
யாரிடமும் இவரது கட்சியின் ஒன்றிய 
செயலாளரிடம் இருக்கும் கோடிக்கணக்கிலான பணமும் கிடையாது.
இவரது கட்சியின் மாவட்ட செயலாளர்கள்
கோடிக்கணக்கில் பணம் கொடுத்து பிற


கட்சியிலிருந்து அழைத்து வரப்பட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் முன்னாள் இன்னாள் எம்எல்ஏக்கள் முன்னாள் இன்னாள் எம்பிக்கள் முன்னாள் மந்திரிமார்கள்
இவரது முந்தய ஆட்சியில் மணல்
கொள்ளையடித்த கட்சிகாரர்கள்
இவரது முந்தய ஆட்சியின்போது வாரம்தோறும் சினிமா படங்களை 
வெளியிட்ட குடும்ப உறுப்பினர்கள் போன்றோர்தான்
கோடிக்கணக்கில் பணத்தை வைத்துக்கொண்டு பாதிக்கப்படுகிறார்களே தவிர மேலே இவர் சொன்ன யாரிடமும்
500 1000 ரூபாயும் இல்லை.கஷ்டபடவும்
இல்லை.எந்த கிராம மக்களிடமும் ரொக்க
கையிருப்பும் இல்லை அதனால் அவர்கள்
வருத்தபடவும்இல்லை. விவசாயிகள் நிலை
இன்னும் மோசம். பருவமழை பொய்த்ததால்
அழுவதா சிரிப்பதா என்ற நிலையில் உள்ளான்.காரணம் மழை பெய்தால்
விவசாயம் செய்ய கடன் வாங்கவேண்டும்
மழை பெய்யாவிட்டால் கடன் வாங்கவேண்டாம் ஆனால் கஷ்டபடவேண்டும்.இந்தநிலையில்தான்
விவசாயி உள்ளான்.
உங்கள் கட்சியின் ஆட்சியில் சம்பாதித்தவர்களுக்காகவும் உங்களுக்காகவும்தான் போராட்டம்
எனபதை மேலே நீங்கள குறிப்பிட்டுள்ள
அனைத்து தரப்பு மக்களும் அறிவர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...