Wednesday, November 9, 2016

துல்லியத் தாக்குதல் கருப்புபண முதலைகள் மீது அல்ல வெகுமக்கள் மீது..!

இந்தியா இப்படியொரு பொறுப்பற்ற பிரதமரைக் கண்டதில்லை. "ஆயிரம் ரூபாய்
மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் எல்லாம் இன்று நள்ளிரவு முதல் வெறும் காகிதங்
களே" என்று உச்சஸ்தாயியில் அறிவித்தார் மோடி. இன்று இந்த நோட்டுகள் எல்லாம் 
அந்த காலத்து நூறு ரூபாய் ஐம்பது ரூபாய் நோட்டுகளே. அந்த அளவுக்கு சாதாரண
மக்கள் மத்தியிலும் புழக்கத்தில் உள்ளன. இவரின் இந்த அறிவிப்பாலும் வங்கிகளும்
ஏடிம்களும் மூடப்பட்டதாலும் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். 

உரிய அவகாசமும் இல்லை, போதிய முன்னேற்பாடுகளும் இல்லை. கேட்டால் "மக்கள்
தியாகத்திற்கு தயாராக வேண்டும்" என்கிறார் மோடி. வினோதம் என்னவென்றால் தியா
கம் செய்பவர்கள் எப்போதும் மக்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான். கருப்பு பண
மானது ரூபாய் வடிவத்தைவிட நிலம், தங்கம், பங்குச்சந்தை பத்திரங்கள் என்று பல்வேறு
வடிவங்களில் அதிகமாக இருக்கிறது. இன்னும் வெளிநாட்டு வங்கிகளில் வெளிநாட்டு
பணமாக ஒளிந்து கிடக்கிறது. அதுவெல்லாம் இந்த அறிவிப்பால் வெளிவரப் போவதி
ல்லை. "வெளிநாட்டில் உள்ள கருப்புபணத்தை எடுத்து இந்தியர் ஒவ்வொருவரது வங்கி
கணக்கிலும் 15 லட்சம்ரூபாய் போடுவேன்" என்று சொல்லி ஆட்சிக்குவந்தார் மோடி. பார்
த்தால் உள்நாட்டில் இந்தியர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பணத்தையே வங்கியில்
போட்டு திரும்ப எடுக்கச் சொல்கிறார், அநியாயமாய் அலைக்கழிக்கிறார். கருப்புபண
முதலைகளுக்கு எதிராகத் துல்லியத் தாக்குதலைத் தொடுக்காமல் அனைத்து வெகு
மக்கள் மீதும் அந்தத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறார். மனிதர் மக்களின் சாபத்திற்கு
ஆளாகியிருக்கிறார்.
#பேராசிரியர்_அருணன்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...