Tuesday, November 29, 2016

பன்னாட்டுப் பழமொழிகள் :

" பணக்காரனாக ஆவதற்கு பணத்தைச் சேர்த்து வைக்க வேண்டியதில்லை . தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதும் . " -ஸ ்பெயின் .
" போலியான நண்பனாக இருப்பதைவிட , வெளிப்படையான எதிரியாக இருப்பது மேல் ." - இங்கிலாந்து .
" தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு ஒரு சொட்டுத் தண்ணீருக்கு முன்னால் ஓராயிரம் முத்துக்கள் மதிப்புள்ளது ஆகாது ." - பாரசீகம் .
" செழிப்பானபண்ணையிலிருந்துகுதிரையைவாங்கு : ஏழை வீட்டிலிருந்து பெண்ணை எடு ." - எஸ்டோனியா .
" மனிதர்கள் நேசமாயுள்ள இடத்தில் தண்ணீர் கூட இனிப்பாய் இருக்கும் ." - சீனா .
" நாய் குரைக்கிற போதெல்லாம் நீங்கள் தாமதித்தீர்களேயானால் , நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லவே முடியாது ." - அராபி .
" ஒருவன் ஆயிரம் மைல்கள் நடந்தாலும் , ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துத்தான் அத்தனை மைல்கள் நடக்க முடிந்ததென்பதை மறவாதீர்கள் ." - சீனா .
" பக்தியோடு பிரார்த்தனை செய் . ஆனால் சுத்தியலை பலமாய் அடி ." - இங்கிலாந்து .
" உன் அண்டை வீட்டுக்காரனை நேசி . ஆனால் உன் வீட்டு வேலியை எடுத்து விடாதே ." - ஜெர்மன் .
" ஆசை பேராசையாகவும் , அன்பு வெறியாகவும் மாறும் போது அமைதி விலகி எங்கோ போய்விடுகிறது ." - ஜப்பான்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...