Thursday, November 17, 2016

ஏதேனும் சிக்கல் என்றால் பொதுவாக எப்படித் தீர்வு காண்பார்கள்

1.தங்கள் மேல் எந்தத் தவறும் இல்லை.
ஆகவே தீர்வு காண வேண்டிய அவசியம் இல்லை.
2. எனக்கு எந்தப் பிரச்சனையும் வந்துவிடக் கூடாது.
அது போல் ஒரு தீர்வு வேண்டும்.
3. இது என்னுடைய பிரச்சனை. இதுபோல் ஏற்கனவே நிறைய அனுபவமிருக்கிறது.
இதெல்லாம் சாதாரணம்.
இந்த மூன்று நிலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
முதல் நபர்
தனக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று சொல்பவர்.
அதற்குத் தான் தீர்வு காண வேண்டிய அவசியமும் இல்லை,
இப்படிப்பட்ட மன நிலையில் இருப்பவரால் மற்றவர்களைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் கஷ்டம்.
இவருக்கு மற்றவர்களைப் புரிந்து கொண்டு செயல்படலாம் என்ற எண்ணமே இல்லை.
இரண்டாமவர்,
இது உன்னுடைய பிரச்சனை.
இந்தப் பிரச்சனைக்கு நாம் தீர்வு காணலாம்.
ஆனால் ,
எனக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.
அடுத்தவரைப் புரிந்து கொள்ள நான் தயார். ஆனால், எனக்கு எந்தப் பாதிப்பும் வந்து விடக்கூடாது.
மூன்றாமவர்
இது போல் எத்தனையோ பிரச்சனைகளைப் பார்த்திருக்கிறேன்.
ஏற்கனவே அனுபவப்பட்டிருககிறேன்.
இதெல்லாம் சாதாரணம் என்று சொல்பவர்.
இவர் மற்றவர்களைப் புரிந்து கொண்டு சூழலுக்கேற்ப நடந்து கொள்பவர்.
ஒரு சமஸ்தானத்து இளவரசன்.
மிகவும் துடுக்கானவன்.
சிறு வயதிலேயே அரச குடும்பத்துக்க உரித்தான அதிகாரத் தோரணையெல்லாம் அவனிடம் இருந்தது.
வளர்ந்துவரும் பருவத்தில் துடுக்குத்தனமும் அடாவடித்தனமும் இருந்தால் எப்படி இருக்கும்?
அரண்மனை ஊழியர்களும், பொதுமக்களும் அவதிப்பட்டார்கள்.
எப்போதாவது ஏதாவது துன்புறுத்தல் இருக் கொண்டே இருந்தது.
ராஜாவின் நல்ல மனசுக்காகப் பொறுமையாக இருந்து வந்தார்கள்.
இளவரசனின் சேஷ்டைகளைப் பொறுத்துக் கொண்டார்கள்.
ஒரு நாள் அவன் முடி திருத்தும் ஆளிடம் போய்,
எல்லோருக்கும் மீசை ஒதுக்குறியே, அது மாதிரி எனக்கும் ஒதுக்கு.
இல்லாட்டி உனக்கு தண்டனை என்றான்.
முடி திருத்துபவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அந்தப் பையனுக்கு மீசையே முளைக்கவில்லை
அவருக்கு ஒரு நல்ல ஐடியா வந்தது.
உங்களுக்கு மீசை ஒதுக்குறதை விட எனக்கு வேறு என்ன வேலை? என்று
அவன் கன்னங்களில் சோப்பு நுரையைத் தடவ ஆரம்பித்தார்.
வெறும் நுரையைத் தடவிவிட்டு அந்தப் பையனுக்கு எதிரில் நின்று கொண்டார்.
இளவரசன்,
என்ன முகத்துல சோப்பைப் போட்டுட்டு எதுக்குத் கையைக் கட்டிக்கிட்டு நிக்கிறே? என்றான்.
உங்க முகத்துல முடி வளர்றதுக்காக காத்துக்கிட்டிருக்கேன்.
"உங்களுக்கு மீசையை ஒதுக்கிட்டுத்தான் மறுவேலை "என்று கையைக் கட்டிக் கொண்டு நின்றார்.
சொல்ல வேண்டிய விஷயத்தைத் தெளிவாகவும்,
அதே சமயம் சாதுரியமாகவும் சொன்னார் அவர்.
அந்த நேரத்தில் கிண்டலாகப் பேசியிருந்தால் அந்த இளவரசன் கோபத்தில் ஏதாவது தண்டனை கொடுத்திருப்பான்
விஷயம் புரிந்த இளவரசனும் ஒன்றும் சொல்லாமல் கிளம்பினான்.
அடுத்தவர்களைப் பார்த்து நாம் இப்படி இருக்கிறோமே என்று நினைப்பதும் தவறுதான்.
நமக்கு என்ன திறமை இருக்கிறது என்பதை நாம் முழுவதுமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் காலை வணக்கங்கள்.
ரொம்ப நீண்ண்ண்ண்ண்ட பதிவாயிடுத்து.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...