மோடி நடவடிக்கை பற்றி இன்று எந்தப் பதிவும் போடக்கூடாது என்று பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தேன்.
ஆனால் ஜஸ்ட் நவ் டிவியைப் பார்த்ததும், ஸாரி, மை டியர் மோடி பக்தாஸ், அந்த நினைவு ஓடி விட்டது.
இன்று முதல் வங்கிகளில் பணம் மாற்றச் செல்லும் சாமான்யர்களுக்கு இன்னுமொரு சலிப்பு காத்திருக்கிறது.. அனைவரின் கைகளிலும் அடையாள மை வைக்கப் போகிறார்களாம். மோடியின் ரைட் கை பொருளாதார ஆபீசர் சக்தி அண்ணன் சொல்லி விட்டார.
ஏற்கனவே அடையாள அட்டைக்குத் தானே பணம் தருகிறார்கள்? அதைக் கம்ப்யூட்டரில் செக் செய்தால் போதாதா? மை எதற்கு? நிலைமை சில தினங்களில் சரியாகி விடும் என்று சொன்ன பொய்யை மறைக்கவா?
ஒரு நாளைக்கு இவ்வளவு என்று தானே புதிய நோட்டு தருகிறார்கள்? அப்புறம் எதற்கு மை? பணக்காரர்கள் வாடகைக்கு ஆள் பிடித்து பண மாற்றம் செய்வதைத் தடுக்கப் போகிறார்களாம்.
ஏற்கனவே எந்தக் கருப்பு பண முதலையும் வங்கி வாசலில் காத்திருக்கவில்லை. நீங்கள் மை வைத்தால் வாடகைக்கு ஆள் பிடிக்கிறவன் மையை அழிக்கப் போகிறான். அல்லது வேறு நபரை ஏற்பாடு செய்யப் போகிறான்?
எத்தகைய மையையும் அளிக்கும் டெக்னிக் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு எத்தனையோ மாமாங்கம் ஆகி விட்டதே, பக்தாஸ்.
அட, ஆண்டவா? இனி விரலில் மை வைத்துகொண்டு செல்பி எடுத்துப் போடுவார்களே, பேஸ்புக்கில்?
No comments:
Post a Comment